Congratulations to our very own Thulasimathi Murugesan on winning the Silver Medal in Badminton Singles at the Asian Para Games after a fantastic battle against the Chinese Paralympic champion in the final.
As she gears up for the Mixed Doubles and Doubles Finals against opponents from China and Indonesia, wishing her the very best.
Keep shining Thulasimathi and continue making Tamil Nadu and India proud!
கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்தச்சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு அமைச்சர் பதவிக்காக RSS பெற்றெடுத்து BJP வளர்க்கும் குழந்தையுடன் கொஞ்சி குலாவிக் கொண்டு 'வெட்கமில்லையா..?' என நீங்கள் கேட்கலாமா மாண்புமிகு வன்னி அரசு அவர்களே…
நாதக கார்த்திகாவுக்கு நடந்தது போன்றொரு அடக்குமுறை விசிகவின் பெண் தோழருக்கு நேர்ந்திருந்தால் அமைதி காத்திருப்பீர்களா?அதிகார அரசியலுக்காகவும் கூட்டணி நலன்களுக்காகவும் அடிப்படை ஜனநாயகக் குரல்களையும், பெண்களின் கண்ணியத்தையும் பலி கொடுப்பது ஏற்புடையதல்ல.
@VanniTamizhVCK
ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிற 5th Asian Para Games-இல் Badminton Mixed Doubles SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தங்கை நித்யஸ்ரீ சிவனுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Women’s Single SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் தற்போதைய Asian Para Games-ல் 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ள தங்கை மனிஷா ராமதாஸுக்கும் என் பாராட்டுகள்.
தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களைக் குவித்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தரும் தங்கைகள் மனிஷா மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் மென்மேலும் சாதனைகள் படைக்க என் அன்பும் வாழ்த்தும்.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@MTharaniventhan@GingeeMasthan
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கான பணியில் என்றும் திமுக!
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (21.10.2026) மழைநீர் வெளியேற்றம், (1/4)
காவல்துறை: சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்!
காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் #PoliceCommemorationDay-இல் நன்றியோடு நினைவுகூர்வோம்!
மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.
இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்வியுற்றதும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அடிக்கடி தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதையும், ஓய்வில்லாமல் உழைப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென உரிமையோடு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
"ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து உலக அளவில் பெரியாரியத்தை நிலைநிறுத்தியது போன்றே, #DravidianModel அரசால் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் கோவைக்கே புதிய அடையாளமாக நிலைக்கும்" என நிறைவோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!
@AsiriyarKV
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா?
கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா?
வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?
முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?
த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
DMK actually did a tremendous job of reducing water stagnation points from 700 to 291 in five years but how the hell this chennai ppl choose this joker over stalin 😭😭
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!