தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வேண்டுகோள்
மகிழ்வுடன் அணிந்திடுவோம் கதராடைகளை!
வெற்றி பெறச் செய்வோம் நெசவாளர் வாழ்க்கைதனை!!
#CMJosephVijay
Four Tamil Nadu health officials purchased medicine causing loss worth Rs 1.59 crore to exchequer in 2013-14. DVAC books the 4 officials 12 years later and has filed cases under the prevention of corruption act, 1988.
https://t.co/Xka6Ry37Xk
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே மாநில அளவில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing!
“மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)…
தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)…
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…”
என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி.
“எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி.
பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
அவர்களது வெற்றி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்குச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக, வெற்றி வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த, தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...
வாக்களிப்பீர் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு!
(1/3)
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
News Update || முதல்வருக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு
தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியது இருந்தாலும் முதல்வர் விஜய்யின் செயல்பாடு நன்றாக உள்ளதாக தகவல் கிடைத்தது என உச்சநீதிமன்றம் பாராட்டு
இதனால் தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைவதாக நீதிபதிகள் சஞ்சய்குமார், சஞ்சீவ் சச்தேவா நெகிழ்ச்சி
TamilNaduPolitics | ChiefMinister
#Vijay #SupremeCourt #TamilNaduGovernment
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் (WorldSkills Shanghai 2026) இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்று, ‘Dental Prosthetics’ திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகம்மது சலாம் அவர்களுக்கும், பல்வேறு திறன் பிரிவுகளில் சிறப்புப் பதக்கங்களை (Medal for Excellence) வென்ற ராகுல், அர்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்து பெருமை சேர்த்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறன்மிக்க இளைஞர்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்திருப்பது, தமிழ்நாட்டு இளைஞர்களிடம் நிறைந்துள்ள மேம்பட்ட திறமைக்கும், தொழில்நுட்ப அறிவுக்கும் சிறந்த சான்றாகத் திகழ்வதுடன், திறன் சார்ந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் சார்பில் உலக அரங்கில் தமிழ்நாட்டின் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இவ்வெற்றியாளர்கள் உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்!
#CMJosephVijay