#உணரும்காலம்
"முதலமைச்சர் பதவி என்பது காலை
பத்துமணிக்கு வந்து மாலை ஐந்துமணிக்கு முடித்துக் கொள்ளும் அலங்கார உத்தியோகம் அல்ல..
அது
விழிப்போடும்
துடிப்போடும் இருந்து
இரவு பகல் பாராது
இமை சோராது மக்களுக்காக உழைக்கும் தன்னார்வச் சேவை...
ஒரு தாயுமானவராக
தகப்பஞ்சாமியாக தன்னை உணர்ந்து
தனக்கான நிழலை பிறருக்குத் தந்து பிறருக்கான வெயிலையும் தான் ஏற்கும் தியாகத் தொண்டூழியம்.
இதனை முகமலர்ச்சியோடு செய்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
இதனை வரப்போகும் ஒவ்வொரு
வினாடியிலும் மக்கள் உணர்வார்கள்...
#மருதுஅழகுராஜ்