எந்த உயிருக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு.அந்த உரிமை இயற்கை வழங்கிய அடிப்படை நீதி.அமைதியின் எல்லா கதவுகளும் மூடப்பட்ட பிறகே ஒருவன் ஆயுதம் எடுக்கிறான்.பேச்சுவார்த்தைகள் புறக்கணிக்கப்படும்போது,உரிமைகள் மறுக்கப்படும்போது,ஒரு இனத்தின் குரல் மண்ணில் புதைக்கப்படும்போது,ஆயுதம் என்பது வெறும் இரும்பு அல்ல !
அது உயிர் காக்க எழும் இறுதி மொழி.
ஆயுதம் ஏந்தியவன் அறத்தோடு இருக்க முடியாது” என்ற உலகின் பழைய தீர்ப்பை புறநானூற்றின் வீர மரபோடு உடைத்தெறிந்த தமிழன் மேதகு !
உலக வல்லாதிக்கங்கள் ஒன்றிணைந்துஒரு மனிதனை மட்டும் வீழ்த்த முயலவில்லை;
அச்சமின்றி எழுந்த ஒரு இனத்தின் மனவீரத்தையே அழிக்க முயன்றன.ஆனால் வரலாறு சொல்லும் உண்மை ஒன்று ஒரு மனிதனை வீழ்த்தலாம்,ஆனால் ஒரு இனத்தின் விழிப்புணர்வை ஒருபோதும் அழிக்க முடியாது.
சிறிய சமரசங்கள் செய்திருந்தால் வளங்களோடும் வசதிகளோடும் வாழ்ந்திருக்கலாம்.அமைதியான வாழ்க்கை அவனுக்கும் சாத்தியமே.ஆனால் சில மனிதர்கள்தங்களுக்கான வாழ்க்கையை விட தங்கள் மக்களுக்கான எதிர்காலத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
அவன் வெறும் போராளி அல்ல
வீழ்ந்தாலும் விழிப்பை விதைத்த இயக்கத் தீ.
அவன் ஒரு மனிதன் அல்ல !
வீறுகொண்ட தமிழினத்தின் இயங்குதிசை.
வரலாறு சிலரை அரசர்களாக எழுதும்.
சிலரை புரட்சியாளர்களாக எழுதும்.
ஆனால் மிகச் சிலரையே
ஒரு இனத்தின் தீராத நினைவாக எழுதும்.
#tamizhgenocide #may18
05/05/1976- 18/05/2009
33ஆண்டுகளில் தமிழருக்கெதிராக எத்தனை துரோகங்கள் எத்தனை நாடுகளின் துணையோடு படைநடவடிக்கைகள் வீழ்த்தபட்டோம் ஆனாலும் எழுத்துநின்றோம். எதனால்
#தமிழினத்தலைவர்71#HBD_IconOfTamils. தமிழர்கள் மீண்டெழுந்து விடக்கூடாது ஏன்பதினால்தானே அவரின் குடும்பமே அழிக்கபட்டது.