தென்காசி மாவட்டத்தில் நீண்ட விடுப்பில் இருக்கும் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனை அருகிலேயே ஸ்கேன் சென்டர் வைத்திருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இது உண்மையா என்று சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று உறுதி அளித்து 40 லட்சம் வரை செலவாகும் உயர் படிப்பை அரசு ப���த்தில் படித்த பிறகு இது போல தலைமறைவாக ஓடி ஒளிவது கிரிமினல் குற்றம் இல்லையா? இதை செய்ய உங்கள் மனசாட்சி எப்படி இடம் தருகிறது?
திமுக அதிமுக ஆட்சிகளில் இந்த மோசடியை தடுக்கவில்லை. வெளிப்படையாக ஆட்சி நிர்வாகத்தை தருவோம் என்று உறுதி அளித்துள்ள தவெக ஆட்சியிலாவது இந்த மோசடி தடுக்கப்படுமா என்று அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை பார்க்க முடியாமல் வரிசையில் நிற்கும் லட்சக்கணக்கான தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறீர்கள் முதல்வர் விஜய் அவர்களே..!
@CMOTamilnadu @TVKVijayHQ @CmcellTamilNadu @Chief_Secy_TN @TNHealthDept