வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
அதிமுக தலைமையால் கண் கலங்கி நிற்கிறோம்.. தவறான தலைமையால் அதிமுக அழியும் நிலை.. அவர்களின் எண்ணம் என்ன..? எல்லோரையும் நீக்கிவிட்டு இந்த இயக்கம் எங்கே செல்கிறது.. பொங்கி எழுந்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
#Newstamil24x7#ADMK#Vijayabaskar#EPS#PartyCrisis#LeadershipIssue #PoliticalNews
தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?
#JustAsking
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்.
#LeadershipMatters
தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.
தன் உயரங்களை கண்டு
வியந்த, மகிழ்ந்த உயிரான தாயை பிரிவதென்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பாசமிகு அன்னையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்! 🙏🏿
#RIP
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்
#நம்ம_விராலிமலை தொகுதி இலுப்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் எனது மனைவி மற்றும் மகளுடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்!
வாக்காளர் பெருமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் சென்று
நம் மண்ணின் முன்னேற்றத்துக்கு
தவறாமல், மறவாமல் வாக்களியுங்கள்!
நம் வாக்கு! நம் உரிமை! 🔥
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
ஐயா @mkstalin அவர்களே….
நீங்க உருட்டுற உருட்டெல்லாம் உங்க முன்னாடி இருக்குற Mic-க்கே பொறுக்கலயே….
மக்கள் காதுகள் பாவம் இல்லையா?
5 வருஷ ஆட்சியில ஒன்னுமே செய்யாம, இப்போ @AIADMKOfficial தேர்தல் அறிக்கையை Copy paste பண்ணிட்டீங்க என்பது தான் நீங்க சொன்ன தலைப்பு செய்தியா?
தேர்தல் தோல்வியை ஸ்டாலினே ஒப்புக்கொண்ட தேர்தல் அறிக்கை தான் திமுக தேர்தல் உருட்டு அறிக்கை!
#PackUpStalin
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் பேரன்பின் பண்பாளர்!
தான் கற்ற கல்வி,
தன் மண்ணின் மக்களுக்கும் தடையின்றி கொண்டு சேர்க்கும் படிப்பாளர்!
தினம் தொண்டர்கள் நாடும், விராலிமலையின் தொடர் வெற்றி வேட்பாளர் நம்ம அண்ணன் #விஜயபாஸ்கர்! 💪🔥🌱✌️
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை#CVB
நின்ற தேர்தலில்
எல்லாம் வென்ற முகம்!
மக்களோட எண்ணம்
மக்களோடு என்றும்..
நம்ம டாக்டர் சி.விஜயபாஸ்கர்!
வாக்களிப்பீர் இரட்டை இலை!💪🔥🌱✌️
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை#CVB
தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
தவெக தலைவரின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கின்றது.
தலையில் பலத்த காயமடைந்து தஞ்சாவூரில்,
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நலனை தொடர்ந்து விசாரித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்து தர அறிவுறுத்தி இருந்தேன்.
இந்நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் ஆர்வம் இருக்கலாம்,
ஆனால், அதுவே உங்கள் உயிரை பறித்து விடக்கூடாது! 🙏🏿
#RIP
அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய #ரம்ஜான்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
நலம் காக்கும் நாயகர்,
நம் மண்ணின், மக்களின் காவலர்,
தொண்டு செய்யும் சேவகர்,
ஆற்றல் மிக்க மருத்துவர்,
நம்ம அண்ணன் டாக்டர் சி.விஜயபாஸ்கர்..🌱✌️🔥
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை#CVB