விஜய் அவர்களே, உங்கள் துறையின் கீழ் வரும் காவல்துறையினரால் ஒரு உயிர் போயிருக்கிறது. இதற்காவது பொறுப்பேற்பீர்களா, அல்லது வழக்கம் போல் ஓடி ஒளிந்து மற்றவர்கள் மேல் பழி போடுவீர்களா?
குற்றவாளிகளின் கூடாரம் தவெக.
மேடை கிடைச்சா போதும் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஊழலற்ற அரசியல்னு வாய்கிழிய தத்துவம் பேசுறதும், நிஜத்துல தப்பு பண்றவங்களை எல்லாம் தவெக வாஷிங் மெஷினில் போட்டு தங்களோட தூய்மையான கட்சி நிர்வாகியா மாத்துறதும் தான் விஜய்யோட கொள்கையா? இவங்களோட இந்த இரட்டை வேடத்தையும், இதுக்குத் துணை போற காவல்துறையையும் நாங்க வன்மையா கண்டிக்கிறோம்.
ஈரோடு பவானியில 8 கிலோ குட்கா, 3 கார்கள், பணத்தோடு தவெக செயற்குழு உறுப்பினர் அருண் என்பவரைப் போலீஸ் கையும் களவுமாகப் பிடிச்சிருக்காங்க. இதே அருணை கடந்த ஒன்றரை டன் குட்கா கடத்துனதுக்காக திமுக ஆட்சி காலத்துல குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள வச்சாங்க. அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் பின்னணி கொண்ட ஆளுக்கு தவெக-வுல பெரிய பொறுப்பு கொடுத்ததே தப்பு.
அதைவிட கொடுமை என்னன்னா, இப்போ அவர் தவெக நிர்வாகி ஆயிட்டாருங்கிற ஒரே காரணத்துக்காக, விஜய் கீழ இயங்குற காவல்துறை அவரை இரவோடு இரவா ஸ்டேஷன் பெயில்ல வெளிய விட்டுருக்கு.
சட்டம் யாருக்காக வளைக்கப்படுது? ஒன்றரை டன் குட்கா கடத்துன ஒரு பழைய குற்றவாளி, மறுபடியும் குட்காவோடு மாட்டும் போது எப்படி இரவோடு இரவா ஸ்டேஷன் பெயில் கொடுக்க முடியும்? இதுக்கு பேருதான் சட்டம் தன் கடமையைச் செய்யுறதா? இல்ல அரசியல் செல்வாக்கா?
விஜய்யோடபோதை ஒழிப்பு கொள்கை இதுதானா? போதைப்பொருளை ஒழிப்போம்னு மேடையில உறுதிமொழி எடுக்குறீங்களே விஜய் அவர்களே, இப்போ உங்க கட்சி நிர்வாகியே போதைப்பொருள் கடத்திட்டு வந்து மாட்டியிருக்காரே இதுக்கு உங்க பதில் என்ன? உங்களால ஒரு ...... புடுங்க முடியாதுன்னு மக்கள் பேசுறது நிஜம் தானா?
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்களை உங்க கட்சி வாஷிங் மெஷினில் போட்டுப் புனிதர்களாக்கப் பார்க்காதீங்க. பொதுமக்களோட உயிரோடு விளையாடுற போதைப்பொருள் கடத்தல்காரங்களுக்கு ஆதரவா இருக்குற தவெக-வின் இந்த அரசியலையும், காவல்துறை காட்டியிருக்கிற இந்த மெத்தனப்போக்கையும் சும்மா விட முடியாது. பிணையில் விடப்பட்ட அருண் மீது உடனே கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு மறுபடியும் சிறையிலடைக்க வேண்டும்.
தாய்மாமனின் தடியடி! .
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது கப்சா விஜயின் அரசு.
நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா?
முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்!
டெல்லியிடம் உரிமைகளை பறிகொடுக்கும்
முதுகெலும்பற்ற முதல்வர்!
கடந்த தி.மு.கழக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை முதலமைச்சரே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்ததோடு, இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திலும் நடத்தி வந்தது.
ஆனால், தற்போததைய த.வெ.க அரசோ மாநில உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அடி பணிந்து துணைவேந்தர் தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தவும், அதில் ஒன்றிய அரசின் UGC சார்பிலான உறுப்பினரையும் சேர்க்கத் துடிக்கிறது.
முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களையும் மாநில உரிமையையும் அடமானம் வைத்து, நம்முடைய பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் அடமானம் வைக்கும் முதுகெலும்பில்லாத கோழைதான் விஜய் என்பதை வரலாறு நினைவில்கொள்ளும்!
#Wingகுரல்
பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
Dear all🙏🏾♥️
I am truly humbled and overwhelmed by the love and affection showered through all your birthday wishes.
From the people of my beloved Mannargudi, friends, colleagues, udanpirappugal, well-wishers and several others from across Tamil Nadu, to industry leaders, entrepreneurs and friends from around the world, your kind words have made this birthday incredibly special🫂🙏🏾
Every message, every call and every blessing reminds me of the responsibility I carry and strengthens my resolve to work harder, serve better and justify the faith you have placed in me.
My heartfelt gratitude to each and every one of you. While I may not be able to respond individually, please know that I have read all your wishes with immense joy and deep appreciation.
I feel truly blessed.
🙏🏾🙏🏾🙏🏾
I extend my warmest birthday wishes to former Indian cricket team captain Thiru @msdhoni.
Whether on the cricket field or in real life, the way you handles every situation with calmness, composure, and humility is truly inspiring.
Wishing you good health, happiness, and many more years of success.
#MSDhoni #HBDDhoni
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தமிழ்நாட்டுல ஒரு ரொம்ப தப்பான ஒரு விஷயம் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. அதுவும் குறிப்பா த.வெ.க வந்ததுக்கு அப்புறம் அது நடக்கிறதுன்றது வந்து நம்ம எல்லாரும் பாத்துக்கிட்டே இருக்கோம். தொடர்ச்சியா குழந்தைகளை வந்து எமோஷனலா அப்யூஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.
மகளிரணி மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர் மருத்துவர் . @yazhini_pm அவர்கள்
Hard work and dedicated follow up of #TeamCMMKStalin pays off !
#Ford is officially back to Chennai! 🎊
Today, Ford and the Government of Tamil Nadu signed an MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal and our Honourable DyCM Thiru @Udhaystalin avargal.
Ford will invest Rs. 3,250 crore and create over 600 new direct jobs as it restarts its Chennai facility with production of next-generation, all-new engines with advanced technology.
True to his style, Honourable Chief Minister did not rest on his laurels and urged Ford to add more jobs with more products and increase their GCC presence in Chennai too ! Tamil Nadu is always ready for more !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என 1929ல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை 1989ல் கலைஞர் சட்டமாக்கினார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
இந்தியாவுக்கே கலைஞர் முன்னோடி!
பழமைவாதிகளை நிராகரித்துவிட்டு பா.ஜ.க அரசு தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும்!
பள்ளிக்கூடம் என்பது குழந்தைகள் சமத்துவத்தை கற்றுக்கொள்ளும் இடம்; சாதியைச் சுமந்து செல்லும் இடமல்ல.
பள்ளி மாணவர்களுக்கு #சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்கும் எண்ணமே ஆபத்தானது. இது சமூக ஒற்றுமைக்கு எதிரானது மட்டுமல்ல, பள்ளி வளாகங்களுக்குள்ளேயே சாதி அடையாளங்களை நிறுவனமாக்கும் முயற்சியாக மாறிவிடும்.
குழந்தைகளின் அடையாளம் அவர்களின் திறமை, கனவு, கல்வி ஆகியவையாக இருக்க வேண்டும்; சாதி அல்ல.
இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு சமூக நீதியின் மண்; குழந்தைகளின் மனதில் சாதி விதைகளை விதைக்கும் சோதனைக்கூடம் அல்ல.
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj