விமானங்களின் வேடந்தாங்கலாக சென்னை மாறுவதற்கான முக்கியமான முன்னெடுப்பு!
தமிழகத்தில் விமான விசையாழி எரிபொருள் (ATF) மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற எனது கட்டுரையின் மையக் கோரிக்கையைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் @CMOTamilnadu எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய The Hindu நாளிதழ் செய்தியின்படி, சென்னை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு ATF மீதான VAT 29% இலிருந்து 16% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2026 நவம்பர் 1 முதல் 2027 அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும். சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான வரி 29%-இலிருந்து 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எடை வரம்புக்குட்பட்ட விமானங்களுக்கான வரியும் 5%-இலிருந்து 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவைக் குறைப்பதற்கும், புதிய விமானச் சேவைகளை ஊக்குவிப்பதற்கும், பயணிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடிய முக்கியமான கொள்கை மாற்றமாகும்.
எனது கட்டுரையில் நான் வலியுறுத்தியதுபோல, விமான எரிபொருள் வரியைக் குறைப்பது என்பது வெறும் வரிச் சீர்திருத்தம் மட்டுமல்ல; தமிழகத்தின் சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வான்வழிப் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடாகும்.
இந்த முடிவின் அடுத்த கட்டமாக, சென்னையிலிருந்து புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை அதிகரிக்கவும், வான்வழிச் சரக்குப் போக்குவரத்தை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். எதிர்காலத்தில் சென்னையை ஆசியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் மையமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மேலும் வலுப்பெற வேண்டும்.
வேடந்தாங்கல் பறவைகளை அழைப்பதில்லை; அவற்றுக்கான சூழலை உருவாக்குகிறது. அதுபோல, உலக விமான நிறுவனங்கள் தாமாகவே சென்னையைத் தேர்ந்தெடுக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைக்காக மீண்டும் ஒருமுறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் எனது நன்றிகள்!
“வேடந்தாங்கல் பறவைகளுக்கு… சென்னை விமானங்களுக்கு!”
@narendramodi@blsanthosh@RamMNK@NainarBJP@BJP4TamilNadu
#TamilNadu #ChennaiAirport #Aviation #ATF #EconomicGrowth
நேற்று அன்புத் தலைவரைச் சந்தித்தபோது… 😎🎬
தலைவர்: அர்ஜுன், படம் பாத்துட்டீங்களா?
நான்: பாக்கணும் சார்…
தலைவர்: ஏன் இன்னும் பாக்கல?
நான்: இப்போ வசனம் கேட்காது சார்… க்ளாப்ஸ் பிச்சுக்கும். எனக்கு உங்க டயலாக் டெலிவரி பிடிக்கும் சார்! சத்தத்துல மிஸ் பண்ணிடுவேன் சார்!
தலைவர்: அப்போ, அடுத்த வாரம் பாத்துருங்க. ஐமேக்ஸ் தியேட்டர்ல பாருங்க… நல்லா இருக்கும்!
நான்: Sure, Sir!
அவ்வளவுதான்!
தலைவர் சொன்ன பிறகு லேட் பண்ணலாமா?
வீட்டுக்கு வந்ததும் என் பொண்ணுகிட்ட சொல்லி, உடனே ஐமேக்ஸ் தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணச் சொன்னேன்.
இன்னைக்கு நானும் என் மனைவியும் ஃபோரம் ஐமேக்ஸ்ல மதியம் படம் பார்த்தோம்.
ஆஹா! ஐமேக்ஸ்ல படம் பார்க்கிறது வேற லெவல்! 🔥
தலைவர் கொடுத்த அட்வைஸ்… Perfect Advice! 👌
🏟️ House Full Show!
🍛 தலைவர் Full Meals!
😂 சிரிச்சு வயிறு புண்ணாச்சு!
எல்லாக் கவலைகளையும் கொஞ்ச நேரம் மறந்துட்டு, மனசுவிட்டுச் சிரிச்சு சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு, அந்த இரண்டரை மணி நேரம் ஒரு super gift!
தலைவர் சொன்னாரு… நான் பார்த்துட்டேன்! நீங்களும் மிஸ் பண்ணாதீங்க - ஐமேக்ஸ்ல! 😎❤️
@rajinikanth@Nelsondilpkumar@sunpictures #Jailer2
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஓர் ஆளுமைக்கு உரிய தேசிய அங்கீகாரம்!
முன்னாள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், சிறந்த நாடாளுமன்றவாதி, எழுத்தாளர் அமரர் திரு. முரசொலி மாறன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது எனது ஆழமான கருத்தும் வேண்டுகோளும் ஆகும்.
உலக வர்த்தக அமைப்பு (WTO) – இந்தியாவின் குரல்!
2001-ஆம் ஆண்டு தோஹா WTO மாநாட்டில், இந்தியாவின் வர்த்தக நலன்களையும் வளரும் நாடுகளின் உரிமைகளையும் சர்வதேச அரங்கில் வலிமையாக எடுத்துரைத்தவர் முரசொலி மாறன். அப்போதைய பிரதமர் பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் மாறன் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டியது, அவரது திறமைக்குக் கிடைத்த அரசியல் வேறுபாடுகளைக் கடந்த அங்கீகாரமாகும்.
WTO மேல்முறையீட்டுக் குழுவில் இந்தியப் பிரதிநிதித்துவம்!
முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் திரு. A. V. Ganesan (AVG) அவர்கள், 2000-ஆம் ஆண்டு WTO மேல்முறையீட்டுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அன்றைய மத்திய வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்களிடம் AVG அவர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்திய அனுபவம் எனக்கு உண்டு. சர்வதேச வர்த்தக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நேரடியாக அறிந்தவன் என்ற முறையில் இதனைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ)!
ஏற்றுமதியை ஊக்குவித்தல், முதலீடுகளை ஈர்த்தல், தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையை இந்தியாவில் முன்னெடுப்பதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் மற்றும் தொழில் கட்டமைப்பு! TIDEL Park
சென்னையின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை.
நாடாளுமன்ற ஆளுமை!
நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம், தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெளிவாக முன்வைத்தார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச வர்த்தகத் துறைக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய அமரர் திரு. முரசொலி மாறன் அவர்களுக்கு நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா வழங்கிடப் பரிசீலிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒரு தலைவரின் தேசியப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதில் அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக் கூடாது!
- இரா. அர்ஜுனமூர்த்தி
#MurasoliMaran #BharatRatna #WTO #SEZ #IndianTrade #TamilNadu @arivalayam@mkstalin
Pls watch this video👇
https://t.co/4edNeF7knl
தொடர் வெற்றிகளின் உச்சநாயகன், சூப்பர் ஸ்டார், நம் அன்புத் தலைவர் திரு. @rajinikanth அவர்களைச் சந்தித்து, #ஜெயிலர்2 படத்தின் வெற்றிக்காக மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்!💐
எல்லாம் வல்ல இறைவனின் அருளால், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களையும் ரசிகர்களையும் தனது தனித்துவமான நடிப்பாலும் ஆளுமையாலும் தொடர்ந்து மகிழ்வித்து வரும் தலைவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும், மேலும் பல வெற்றிகளைக் குவித்து, என்றும் இனிதே வாழ்வாங்கு வாழ இறைவனைப் பிரார்த்தித்து வணங்கி வாழ்த்துகிறேன் 🙏
#SuperstarRajinikanth #Jailer2 #Thalaivar
On the auspicious occasion of Dussehra & Vijayadashami, may the divine blessings of Goddess Durga fill every heart with courage, strength, wisdom and positivity.
May Maa Durga protect us from all evil, empower us to uphold Dharma, and guide us towards victory, peace and prosperity. Let us celebrate the eternal triumph of good over evil and welcome new beginnings with hope and confidence.
Wishing you and your family a blessed, happy and prosperous Vijayadashami!
Warm wishes,
Ra Arjunamurthy
#HappyDussehra #Vijayadashami #MaaDurga #JaiMataDi #VictoryOfDharma
ஒரே நாடு – செப்டம்பர் 2026 இதழில், எனது அரசியல் பயணத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தைப் பதிவு செய்திருந்தேன்.
“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பிறரின் அரசியல் வளர்ச்சிக்கு இடமளிப்பதில்லை” என்ற தவறான கருத்தை இந்தியா முழுவதும் சில மாநிலக் கட்சிகள் பரப்பி வருகின்றன.
இந்தக் கருத்து உண்மையல்ல என்பதை விளக்குவதற்காக, எனது சொந்த அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையே ஆதாரமாகக் கொண்டு அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
அரசியலில் உண்மைகள் பேசட்டும்; அனுபவங்கள் சாட்சியாகட்டும்!
✍️ இரா. அர்ஜுனமூர்த்தி
@narendramodi@rajinikanth@JPNadda@sgurumurthy@blsanthosh@DrTamilisai4BJP@DrLMurugan@NainarBJP@BJP4TamilNadu
பழைய ஓட்டுச்சீட்டா… புதிய இந்தியாவா?
EVM, SIR விவாதங்களின் பின்னணியில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான அரசியலா இது?
2021 சட்டமன்றத் தேர்தல் முதல் 2024 மக்களவைத் தேர்தல் வரை EVM மூலம் வெற்றிகளைப் பெற்ற திமுக @arivalayam , 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேர்தல் முறையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவது ஏன்?
வெற்றியும் தோல்வியும் கடந்து, ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை, வாக்காளர் உரிமை, புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள் குறித்து எனது கருத்துகள் இந்தக் கட்டுரையில்…
படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிருங்கள்!
✍️ இரா. அர்ஜுனமூர்த்தி
மிக்க நன்றி 🙏 @dinamalarweb@narendramodi@AmitShah@nsitharaman@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
#EVM #SIR #IndianDemocracy #NewIndia #TamilNadu
நவராத்திரி நல்வாழ்த்துகள்
HAPPY NAVARATRI 2026
சரஸ்வதி பூஜை | ஆயுத பூஜை | விஜயதசமி
May Goddess Saraswati bless us with knowledge and wisdom, may Ayudha Puja bring prosperity to all our endeavours, and may Vijayadashami usher in victory, good health and new beginnings.
கல்வியும் ஞானமும் பெருகட்டும்! உழைப்பும் தொழிலும் சிறக்கட்டும்! வெற்றியும் வளமும் வாழ்வில் நிலைக்கட்டும்!
அனைவருக்கும் இனிய நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🙏
அன்புடன்,
இரா. அர்ஜுனமூர்த்தி
Ra. Arjunamurthy
#HappyNavaratri #SaraswatiPuja #AyudhaPuja #Vijayadashami
தமிழக பாஜகவின் “ஒரே நாடு” இதழில் எனது கட்டுரை!
போரின் நிழலில் “வசுதைவ குடும்பகம்” - உலக மனிதநேயத்தின் குரலாக நரேந்திர மோடி!
ரஷ்யா–உக்ரைன் முதல் மேற்கு ஆசிய மோதல்கள் வரை, போருக்கு மாற்று உரையாடல்; பதற்றத்திற்கு மாற்று அமைதி; பிரிவினைக்கு மாற்று மனிதநேயம். இந்தியாவின் தொன்மையான “உலகமே ஒரு குடும்பம்” என்ற சிந்தனையைத் தனது ராஜதந்திர அணுகுமுறையிலும், இந்தியர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கும் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அமைதி முயற்சிகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
வசுதைவ குடும்பகம் - ஒரு தத்துவம் மட்டுமல்ல; மனிதகுலத்தின் அமைதிக்கான பாதை!
- இரா. அர்ஜுனமூர்த்தி
@nsitharaman@DrSJaishankar@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
#VasudhaivaKutumbakam #NarendraModi #WorldPeace #Humanity #OneNation
Who are you guys to grade nations into 1st 2nd 3rd worlds. This is not a grading based quality or values or moral worth. The so called 1st world colonially exploited the rest.
Otherwise the 1st so called first world is guilty of genocide of 200 million in Americas and Comprehensive global studies like Peter Brecke's Conflict Catalog indicate that Europe alone accounts for roughly 50% to 65% of all war-related deaths worldwide since 3000 BC.
Stop grading the world as you have been doing too long
Those days are over
ஐம்பது ஆண்டுகளாக என் வாழ்வின் நினைவுகளோடும் உணர்வுகளோடும் இரண்டறக் கலந்த சப்தஸ்வர இசைச் சக்கரவர்த்தி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, என் அன்பையும் அனுபவங்களையும் நன்றியுணர்வையும் பதிவு செய்யும் ஓர் இசைச் சமர்ப்பணம்!
“நானறிந்த(அ)வரை… அன்னக்கிளி முதல் டோரதி வரை!” 🎶 #ilaiyaraaja #TamilCinema #TamilMusic
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🎂
தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
திருச்செந்தூர் செந்திலாண்டவனின் திருவருளால், தாங்கள் நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், மனநிறைவும் பெற்று, மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் படைத்து, வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து முன்னேற மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
- இரா. அர்ஜுனமூர்த்தி
#NainarNagendran #HappyBirthday #BJPTamilNadu #திருச்செந்தூர்_முருகன்
The business outlook for software is uncertain and AI has raised costs dramatically with a) massive 4-fold increase in server prices which we need for data centers b) AI usage increasing rapidly, leading to much higher expenses, which we are trying to control.
On top of that is the challenging geopolitical backdrop.
We have cut down on our marketing budget. We have also told our employees that we cannot have our usual pay increase this year. I have apolgized for not being able to avoid this.
We will work hard to avoid mass layoffs but the outlook for software jobs in general is grim. We have not been growing our employee count for 18 months now.
Most of our employees understand the situation. I am thankful to them.
We are in the middle of reinventing ourselves. The next 3-5 years will decide how our reinvention has worked. Please pray for us 🙏
நேற்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வெற்றிகரமான சென்னை விஜயம் குறித்த எனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். மேலும், அவரது அமெரிக்கப் பயணம் இனிதாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
#BonVoyage