திராவிடப் படை சங்கமிக்கும் மாபெரும் மாநில மாநாடு. கொள்கைப் படைகள் அணிவகுக்கும் திராவிட மாடல் 2.0-க்கான பிரம்மாண்டத் தொடக்கம். திரண்டு வா உடன்பிறப்பே! மார்ச் 9, திருச்சியில் சந்திப்போம். நம் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்.கே நகர், தஞ்சாவூர், மயிலம், வேப்பனஹள்ளி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் , துறையூர், இராமநாதபுரம், கடையநல்லூர், சேலம் தெற்கு , கும்பகோணம், ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
களத்தில் ஸ்டாலினின் மகளிர் படை!
செல்லும் இடமெல்லாம் தாய்மார்களின் முகத்தில் மலரும் புன்னகை, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளம்! ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒளியேற்றும் திட்டங்களுடன் தொடர்கிறது திராவிட மாடல் நல்லாட்சி!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
வெல்லும் தமிழ் பெண்கள்: தமிழ்நாட்டின் விடியலுக்காக வீதிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டாலின் மகளிர் படை!
திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம்: இல்லம்தோறும் உதயசூரியனின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் மனங்களை வெல்லும் எங்களது மகளிர் அணி
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திராவிடப் போர்ப்படை சங்கமிக்கும் திருச்சி திருப்புமுனை மாநாடு!
வரலாறு காணாத வகையில் 10 லட்சம் உடன்பிறப்புகள் ஓரணியில் திரளும் பிரம்மாண்ட மாநில மாநாடு கோட்டையை நோக்கி அடி எடுத்து வைக்கும் திராவிடத் தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம்.
இடம்: சிறுகனூர், திருச்சி.
தேதி: 09.03.2026.
சிறுகனூரில் சங்கமிப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
பெண்கள் வெறும் பயனாளிகள் அல்ல, அவர்கள் இந்த மாநிலத்தின் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படும் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற புதியதோர் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை, பொன்னேரி, துறைமுகம், விருகம்பாக்கம், உத்தரமேரூர், சங்ககிரி, ஈரோடு மேற்கு, ஆத்தூர், பண்ருட்டி, திருவாரூர், பூம்புகார், விராலிமலை ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசியும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் வஞ்சகத்தை விளக்கியும், பாஜக-அதிமுக கூட்டணியின் துரோகத்தை மக்களிடையே எடுத்துரைத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” எனும் பரப்புரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருவைகுண்டம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, கீழ்பென்னாத்தூர், பவானி சாகர், அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
உங்கள் கனவைக் கழக அரசிடம் சொல்லுங்கள், அது திட்டங்களாக மாறும். மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்துள்ள உங்க கனவ சொல்லுங்க திட்டம் தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லம் தேடி வந்து கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசு.
#உங்க_கனவ_சொல்லுங்க
💻 10 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" எனும் மகத்தான விழா மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களை வளர்த்தெடுத்தால் மாநிலம் வளரும், நாடு வளரும் என்ற உயரிய நோக்கத்துடன் திராவிட நாயகர் செயலாற்றி வருகிறார்!🌄
#UlagamUngalKaiyil
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026
திருப்பூரில் திருப்புமுனை... திரளாக திரண்ட திராவிட மகளிர் படை 🖤❤️
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!
Women Power-ல் திமுக மீண்டும் POWER-க்கு வருவது உறுதி.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி
வன விலங்குகளை பாதுகாக்க மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது!
#DMK4TN