என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
BIGGEST EXIT POLL result
So far : @AxisMyIndia predicting TVK to get 98-120 in TN,
Closely followed by DMK alliance at 92-110 and then AIADMK way behind at 22-32
If numbers right, this is a BLOCKBUSTER debut ! @IndiaToday
பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள்.
நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.
இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
@TNelectionsCEO@ECISVEEP@SpokespersonECI@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
ஊடக அறம் எங்கே? - வதந்தி பரப்பும் ஊடகத்திற்கு கடும் கண்டனம்!
பச்சை பொய் டிவியாக மாறிவிட்டதா நியூஸ் தமிழ் 24/7? சிபிஐ விசாரணை குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி!
சமீபகாலமாக, மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்க வேண்டிய ஊடகங்கள், சில அரசியல் உள்நோக்கங்களுக்காகவும், டிஆர்பி (TRP) ரேட்டிங்கிற்காகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது .
குறிப்பாக, நியூஸ் தமிழ் 24/7 தொலைக்காட்சி அண்மைக்காலமாக வெளியிடும் செய்திகள் "பச்சை பொய்"களின் கூடாரமாக மாறிவிட்டதோ என்ற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. போயும் போயும் ஒரு தலைமறைவு “அரசியல் தரகரின்”காழ்ப்புணர்ச்சி அவதூறை செய்தியாக பரப்புவதா?? யூடியூப் வியாபாரியின் வதந்திகளுக்கு ஒரு அளவில்லையா??
1. கரூர் மக்கள் திரள் குறித்த அவதூறு: கரூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் மக்கள் திரள் நிகழ்வை, அது ஏதோ "படப்பிடிப்புக்காக (Shooting)" கூட்டப்பட்ட கூட்டம் என்று அந்த ஊடகம் சித்தரிக்க முயல்வது வேடிக்கையாக உள்ளது. மக்களின் தன்னெழுச்சியான ஆதரவை கொச்சைப்படுத்தும் விதமாக இத்தகைய செய்திகளை வெளியிடுவது, அந்தப் பகுதி மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாகும்.
2. சிபிஐ (CBI) விசாரணை என்ற கற்பனைக்கதை: "சிபிஐ இப்படி கேள்வி கேட்டதா?" என்று மக்கள் கேட்கும் அளவுக்கு, புலனாய்வு அமைப்புகளின் பெயரைப் பயன்படுத்தி ஆதாரமற்ற தகவல்களை இந்த ஊடகம் ஒளிபரப்பி வருகிறது. அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் இல்லாமல், ஊகங்களின் அடிப்படையில் செய்திகளை உருவாக்கி, அதை உண்மையென நம்ப வைக்க முயல்வது ஊடக தர்மத்திற்கு எதிரானது.
கேள்விக்குறியாகும் ஊடக நம்பகத்தன்மை:
ஒரு செய்தி நிறுவனம் என்பது நடுநிலையோடும், தகுந்த ஆதாரங்களோடும் செய்திகளை வழங்க வேண்டும். ஆனால், நியூஸ் தமிழ் 24/7 போன்ற ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமாகவோ அல்லது ஒரு தரப்பை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலோ செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.
பச்சை பொய் டிவியா? உண்மையைப் பேச வேண்டிய தொலைக்காட்சி பெட்டி, இன்று பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறி வருவது ஜனநாயகத்தின் நான்காவது தூணிற்கு அழகல்ல.
மக்களின் கேள்வி: ஆதாரமில்லாத செய்திகளைத் தொடர்ந்து பரப்பும் இந்த ஊடகத்தின் பின்னால் இருப்பவர்கள் யார்? யாருடைய தூண்டுதலின் பேரில் இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுகின்றன?
பொய்ச் செய்திகளால் ஒருபோதும் உண்மையை மறைத்துவிட முடியாது. மக்கள் எதையும் பகுத்தறியும் நிலையில் உள்ளனர். இனியாவது நியூஸ் தமிழ் 24/7 போன்ற ஊடகங்கள் தங்களின் போக்கை மாற்றிக்கொண்டு, நேர்மையான செய்திகளை வழங்க முன்வர வேண்டும்.
இல்லையெனில், மக்கள் இந்த "ஊதுகுழல்” ஊடகங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
- லயோலா மணி,
கொள்கைப் பரப்பு இணை செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
"கல்லாப் பெட்டி" கனவுகளும்...
கற்பனைப் போர் வீரர்களும்!
தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி "உண்மைக்குப் புறம்பான" செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னர் இதேபோல் திரு. பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. "அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்" என்று “வாடகை வியாபாரி” ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், "நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது" என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.
மீண்டும் அதே ‘பழைய ஸ்கிரிப்ட்டை’ அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில "கல்லாப் பெட்டி" முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை..
தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும்.
போட்டிக்கு என்று சில "Virtual Warriors" உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே "ஜோசியம்" பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு.