நேற்று இந்திரா நகர் 1 வது வட்டத்தில் மூன்று வடமாநில தொழிலாளிகள் சம்பளம் பிரச்சினையை பற்றி சண்டையிட்டு கொண்டிருந்த போது அங்கிருந்த நம் அண்ணன் ஒருவர் இங்கெல்லாம் சத்தம் போடக்கூடாது ஓரமாக சென்று பேசுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் சென்று 100க்கும் மேற்ப்பட்ட வடமாநிலத்தவர்களை அழைத்து வந்து அந்த அண்ணனை அடித்துள்ளார்கள். கடுமையாக அடி வாங்கிய அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இன்று அவரை சென்று சந்தித்து வந்தோம்.இதைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.
தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-18, தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான கலந்தாய்வு https://t.co/ysbJcbDthQ via @NaamTamilarOrg
25 Innocent Civilians Shot Dead in #Kashmir: This Terrorist Attack Exposes the BJP Govt’s Security Lapse!
I was deeply shocked and profoundly saddened to hear about the horrific incident in #Pahalgam, Kashmir, where 25 innocent civilians who had gone on a tour were ruthlessly shot and killed by terrorists. This cowardly attack by the terrorists warrants the strongest condemnation.
Despite the deployment of thousands of military personnel and round-the-clock surveillance by intelligence agencies that have turned Kashmir into an open-air prison, the fact that terrorists in army uniforms can roam freely in public areas highlights a grave lapse in security. What were India’s defense and intelligence agencies doing in such a vulnerable situation?
This heinous incident marks a glaring failure of the security establishment under the BJP-led Union Government. Is there really an intelligence agency in this country? Is it functioning at all? Or did it just stand by and watch the attack unfold? Such questions arise due to the complete breakdown of the Union Government’s intelligence operations.
It is the foremost duty of the Indian Union Government and the Jammu and Kashmir State Government to prevent such heartless and brutal attacks in the future, to protect the citizens of the country, and to ensure peace and safety in Kashmir so that the people living there can return to normal life.
I extend my heartfelt condolences to the families of those who lost their lives in this brutal attack and share in their grief.
- #Seeman | Chief Coordinator | #NTK
#PahalgamTerroristAttack | #KashmirTerrorAttack | #PahalgamAttack
காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு! பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி!
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.
இத்தனை ஆயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும் இராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது?
இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வியாகும். இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயிள்ளது.
இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறா வண்ணம் தடுத்து, நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற் கடமையாகும்.
இக்கொடியத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் பேரில் தகவல் தொழில்நுட்பப் பாசறையினுள் துறை சார் விரிவாக்கம் தொடங்கிற்று.
'Real' warriors battle everyday.
Thats why we are NTK Army!
உலக புத்தக நாள்!
சுவாசிப்பது போல வாசிக்க தொடங்க வேண்டும்!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்றார் நம்முடைய பாட்டன் வள்ளுவப் பெருமகனார்!
அறிவைத்தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலைத்தேடி ஓடி வரும் என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்;
அறிவு என்பது நம் அறியாமை எவ்வளவு என்பதை அளந்துகாட்டும் கருவி என்கிறார் தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!
ஒவ்வொரு புத்தகமும் விதை நெல் என்கிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்!
போர்க்களத்தில் துப்பாக்கிகளைவிட புத்தகங்களே சிறந்த ஆயுதங்கள் என்கிறார் புரட்சியாளர் லெனின்!
ஒரு மனிதன் தம் வாழ்நாளில் 10000 மைல்களாவது பயணித்திருக்க வேண்டும்; 10000 நூல்களாவது படித்திருக்க வேண்டும் என்கிறது சீனப்பழமொழி!
முகத்தைச் சீர் செய்ய கண்ணாடி; அகத்தைச் சீர் செய்ய புத்தகம்!
மரத்தை அளக்க பயன்படுவது நூல்; அதைப்போல மனிதர்களின் மனத்தை அளக்க உதவுவது நாம் படிக்கும் நூல்!
தலைகுனிந்து படித்தவர்கள் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்!
மக்களாட்சி முறைமையில் அதிகாரத்தை அடைய ஒரே வாய்ப்பு தேர்தல்!
அந்த தேர்தலில் வெல்வதற்கு ஒரே வாய்ப்பு மக்கள் மனங்களை வெல்வது!
மக்களின் மனங்களை நம்முடைய தர்க்கத்தினாலேயே வெல்ல முடியும்!
நாம் தர்க்கவாதத்தில் தலைசிறந்தவராக கருத்தியல் தெளிவடைய வேண்டும்!
கருத்தியல் தெளிவடைய வேண்டுமென்றால் அறிவை விரிவாக்க வேண்டும்;
அறிவை விரிவாக்க நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி நாள்தோறும் படிக்க வேண்டும்!
ஆக, எப்படி பார்த்தாலும் வாசிக்கத் தொடங்கிவிட்டாலே நாம் வெல்ல தொடங்கிவிட்டோம் என்று பொருள்!
எனவே, என்னரும் தம்பி தங்கைகள் அனைவரும் சுவாசிப்பது போல வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்! அதுதான் உலகத்தின் உயரத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்! முன்னை விட இன்னும் வீரியமாக, ஆழமாக நூல்களை வாசிக்க இன்றைய நாள் முதல் தொடங்குவோம் என உறுதியேற்போம்!
புத்தகம் என்பது தொட்டுப்பார்த்தால் வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி இரா.மகாகவி காளிதாஸ் அவர்களின் தந்தை ஐயா சு.இராமச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி இரா.மகாகவி காளிதாஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சு.இராமச்சந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
மக்களுக்காக களத்தில் போராடும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை வைத்து அடக்கிவிடலாம் என நினைப்பது சரியா . இது எந்த மாதிரியான அரசியல் .
கண்ணீருடன் வித்யா வீரப்பன் அவர்கள் கேள்வி ?
#அடக்குனா_அடங்குற_ஆளா
நேற்று சகோதரி வித்யா வீரப்பன் அவர்களின் நேர்க்காணல் கச்சிதம். உணர்வு மிகுதியிலும் சொல்ல வேண்டிய கருத்துகளை ஆழ பதியுமாறு எடுத்துரைத்திருக்கிறார். மாவீரன் வீரப்பனார் புகழ் ஓங்குக!
பேரன்பின் மாய
நிழல் பரப்பி
உலவும்
உள்ளழகன்.
ஆயிரமாயிரம்
தடைகளுக்கு மத்தியிலும்
தண்ணீரில் அமுக்கப்பட்ட
பந்து போல மீறி எழும்
ஆதி இனத்தின்
பெருங்கோப உயிரழகன்.
எதிரியால் எய்யப்படும்
அம்புகளைக் கொண்டே
தனக்கான கவசத்தைத்
தானே உருவாக்கும்
களம் காணும் வீரழகன்.
எதிர்வரும் தடை நொறுக்கி
படைப் பெருக்கி இலட்சிய
விடை நோக்கி நகரும்
புரட்சியின் மெய்யழகன்.
எதிரிகளே ..!
அவனை வெல்ல
வலிமையற்ற
அவதூறுகளால் முடியாது.
அவனின்றி
மூத்த இனத்தின்
விடிவு என்று நிகழாது.
♥️
மணி செந்தில்
#அடக்குனா_அடங்குற_ஆளா
சீமான் அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத பொழுது அத்துமீறி நுழைந்து அதிகார திமிரை காட்டிய நீலாங்கரை ஆய்வாளரை யார் அந்த பிரவீன் ராஜேஷ் என்று பெருமை பீத்தி செய்தி போடும் நபர்கள்… அவர் ஒருவரை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கபட்ட காவல்துறையால் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்பதையும் போடுவார்களா??
ராஜிவ்காந்தி குண்டுவெடிப்பில் அவர் தந்தை இறந்ததற்கு பழி வாங்குகிறார் என்று அவரை ஏற்றிவிடுவார்கள் இதற்கும் பதில் சொல்வார்களா?