மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
அண்ணாமலையை முன்னுக்கு நகர்த்துவதற்கு பலர் வேலைசெய்கிறார்கள். அவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி.
கடந்த 5 ஆண்டுகளில் அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலில் சாதித்த விடயம் என்ன?
தமிழ்நாட்டு உரிமைகளான
*நீட் தேர்வு ரத்து,
*மீனவர் மீன்பிடி உரிமை
*காவிரி உரிமை
*நெய்வேலி விவசாயிகளுக்கான நட்ட ஈடு
*கரும்பு விவசாயிகளுக்கான விலை
* மாஞ்சோலை தொழிலாளர் நட்ட ஈடு, வாழ்வுரிமை
*பருத்தி விலை கட்டுப்பாடு
*நூல் தட்டுப்பாடு
*தோல் தொழில் மீதான நெருக்கடி
*அமெரிக்காவின் இறக்குமதி வரியால் பாதிக்கப்படும் திருப்பூர் தொழில்துறை
*அரிட்டாபட்டி மலை பாதுகாப்பு
*கீழடி தமிழர் தொன்மை குறித்த ஆய்வறிக்கை.
*தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை மோடி அரசு வடமாநிலத்திற்கு கொண்டுசெல்வது.
*கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்து, இந்தியை திணிப்பது.
*கஜா புயல் முதலாக 8 இயற்கை பேரிடருக்கான நட்ட ஈட்டு தொகையான 1 லட்சம் கொடியை கொடுக்காமல் விவசாயிகள், ஏழைகளை தவிக்க விட்ட மோடிஅரசு.
*தூய்மைப்பணியாளர், ஒப்பந்த ஊழியர் பணிநிரந்தரம் குறித்த சிக்கல்
இதுபோன்ற நீண்ட கோரிக்கைகள், சிக்கல்கள் குறித்து வாய்திறக்காமல் இவை அனைத்திலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த அண்ணாமலைக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
பாஜகவில் தலைவராக இருந்த காலத்தில் மோடியிடம் போராடி தமிழ்நாட்டுக்கு ஏதும் செய்யாத அண்ணாமலையும், அவரது கோமாளி கூட்டமும் எதை சாதிக்க கட்சி ஆரம்பிக்கிறாராம்??
கோமாளிகளின் கூடாரமே அண்ணாமலையின் கட்சி.
தமிழர்களே எச்சரிக்கை!
இன்று காலை, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து, ஐயா வைகோ அவர்கள் தலைமையில், மதிமுக ஒருங்கிணைப்பில் பலவேறு உழவர் இயக்க பொறுப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. பல நாட்களுக்குப் பின்னர் ஐயா வைகோ அவர்கள் தமிழ்நாட்டின் உரிமை சார்ந்து பல்வேறு சனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து நடத்திய போராட்டம் மனநிறைவைக் கொடுத்தது. உரிமைகளுக்கான போராட்ட களத்தில் முதன்மையாக நிற்பவர் அவர். மட்டுமல்லாமல், அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் உரிய இடத்தையும், மரியாதையையும் கொடுப்பவர் அவர். அனைவரையும் தம்மைவிட சிறப்பாக இயங்குங்கள் என உற்சாகப்படுத்தியே நான் களத்தில் அவரைக் கண்டிருக்கிறேன். யார் மீதும் போட்டி உணர்வை வளர்த்துக் கொண்டதாக அவரைச் சொல்ல இயலாது. அனைத்து அமைப்புகளையும் வளரச் செய்யும் சனநாயகக் குணமுண்டு. உரிமையுடன் அவர்களை முன்னிலைப்படுத்தவும் செய்வார். கடந்த 17 ஆண்டுகளாக அவருடைய அனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். மிக இளையோர்களாக இருந்த போதிலும் எமக்கான இடத்தைவிட உயரிய இடத்தையே கொடுத்துள்ளார்.
எங்களைப் போல பலரை அவர் முன்னகர்த்தியும் உள்ளார். போராட்டங்களுக்கான ஏற்பாடும், உழைப்பும், பொருட்செலவும் அவர் அமைப்பினுடையதாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் பெருமையை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை அவர் தொடங்கிய போது 2014ல் தஞ்சை லெனின் அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக்கொண்ட ஐயா வைகோ, தோழர் லெனின் மறையும் வரையில் தன்னுடைய அனைத்து நிகழ்விலும் தவராது இணைத்துக்கொண்டு மரியாதை செய்தார். நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம் குறித்து பேசும் போதெல்லாம், தோழர் லெனின் குறித்து தவறாமல் நெகிழ்வுடன் அவரது பெயரை இன்றளவும் சொல்லி, அவரது பங்களிப்பை நினைவுகூர்வார். பி.ஆர்.பாண்டியன், பூவுலகு நண்பர்கள், புகழேந்தி தங்கராஜ், வீரசந்தானம், வெள்ளையன், கிவே பொன்னையன். வே , கண.குறிஞ்சி, கோவை இராமகிருட்டிணன் என பலரை அவர் மறக்காது சுட்டிக்காட்டி பங்களிப்பை குறித்து பதிவு செய்வார். இன்று நடந்த போராட்டத்திலும் தோழர்கள் தனியரசு, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன்,
SDPI ஏ.கே.கரீம், மஜக பொறுப்பாளர்,
கொங்குப்பகுதி உழவர் அமைப்பாளர் ஈசன், உழவர் சங்க மணிகண்டன், லீக் கட்சியின் பொறுப்பாளர், என பலரையும் அழைத்திருந்தார். இந்த பெயர் பட்டியலில் கிட்டதட்ட அனைவரும் அரசாங்க ஒடுக்குமுறையால் சிறைசென்றவர்கள். தோழர் ஈசன், தோழர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கொடும் சிறைத்தண்டனை திமுக ஆட்சிகாலத்தில் பெற்றவர்கள். நாகை திருவள்ளுவன், பொன்னையன் போன்றோர் கடந்த அதிமுக காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். இதே போல தோழர் தனியரசும் சிறையை எதிர்கொண்டவர். அனைவரின் விடுதலைக்காகவும் முதல் குரல் எழுப்பியவர் ஐயா வைகோ. ஆகவே மக்கள் இயக்கஙகளோடு நெருங்கிய தோழமையும், உறவும், அன்பும் அவருக்குண்டு. இவ்வகையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு போராட்டம் நிச்சயம் ஐயா.வைகோ தலைமையில் வெற்றியை நோக்கி நகரக்கூடிய அளவில் பெருந்திரள் மக்கள் போரட்டமாய் மாறும் எனும் நம்பிக்கையுண்டு.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில், " காவிரி மீது அணைகட்ட கர்நாடகத்திற்கு உரிமை உண்டென இந்திய அரசு சொல்லுமானால், நெய்வேலி நிலக்கரி சுரங்கமும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும், ஆவடி பீரஙகி தொழிற்சாலையும், பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையும் தமிழ்நாட்டுக்கு சொந்தமானதாக தமிழர்கள் கைப்பற்ற நேரிடும்.." என சுட்டிக்காட்டினார். தமிழ்த்தேசிய இனத்தின் உயிர்நாடியான காவிரி உரிமை மீட்க களம் காண்போம் வாரீர்.
முனியனுக்கும், கருப்பனுக்கும் ஆடு-கிடா-கோழி-சேவல் வெட்டமுடியாதபடி சங்கித்தனமான தீர்ப்பை வாங்கி வைத்திருக்கும் பாஜகவினர், 'மாடு வெட்டுவது முஸ்லீம்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துமென' திசை திருப்புகிறார்கள்.
இது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
சாதிப் பிரிவினைகள் பேசி மனிதர்களைப் பிரிக்காதீர்கள். இந்தப் பூமியில் பிறக்கும் போது நாம் அனைவரும் மானுடம் என்னும் ஒரே இனம் தான் - பாவேந்தர் பாரதிதாசன்
#புரட்சிக்கவிபாரதிதாசன்#புரட்சிக்கவிபாரதிதாசன்
பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வது மிகப்பெரிய மூடத்தனம். குணத்தால் மட்டுமே ஒருவனை மதிப்பிட வேண்டும் - பாவேந்தர் பாரதிதாசன்
#புரட்சிக்கவிபாரதிதாசன்
கண்களும் ஒளியும் போலக் கவின்மலர் வாசம்போலப் பெண்களும் ஆண்கள் தாமும் பெருந்தமிழ் நாடு தன்னில், தண்கடல் நிகர்த்த அன்பால் சமானத்தர் ஆனார் என்ற பண்வந்து காதிற் பாயப்பருகுநாள் எந்த நாளோ?
#புரட்சிக்கவிபாரதிதாசன்
முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் பழைய ஆசாரங்களையும், தேவையற்ற சடங்குகளையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் - பாவேந்தர் பாரதிதாசன்
#புரட்சிக்கவிபாரதிதாசன்
Indian metrological departments official website converted into full Hindi language.
First they didn't responded to any natural calamities like Okhi, Kaja, Niger, Vardh cyclones. Then, Hindians didn't released compensation package for the damages caused by these disasters. They neither strengthened or expanded response& rescue teams.
Fishermen of Kanniyakumari accused that they were never warned by Modi's Hindian government about Ocki Cyclone which was worst in years. In fact some of them were warned by Iranian fishermen as they were pre-informed and returning to coast. Modi govt did nothing to inform nor do a rescue mission, or visited the villages. Around 100 tamil fishermen died/missing. TN demands for disaster compensation was settled just over 10% of the required value.
Now they converted the weather website into full Hindi. Cyclones are important natural calamities for the southern & eastern states, occurring year after year. None of them are Hindi speaking states.
Non-Hindi states should remember that, they are paying taxes as like that of Hindi speaking states. They are jot secondary citizens to be treated like this. Hindi preference over other languages means to humiliate non-hindi states.
Its time for us to get united & raise our voice for equal treatment of our languages. Ours are not regional languages. Our mother tounge need to be treated with/dignity, respect and at par with Hindi.
#Hindi_Never
#Tamil_Ever
#StopHindi_Imposition
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
மோடியின் கடந்த வருகையின் போது, "... தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் திணிக்கப்பட்ட இந்தியை மாற்றிடுங்கள், இல்லையெனில், ஆதிக்க இந்தியை நாங்கள் அழித்திடுவோம்.." எனும் போராட்டத்தை மே17 நடத்தியது. அறிவித்ததை போல, இன்றைய மோடி வருகையின் போது மே17 தோழர்கள் இந்தியை அழித்தோம். சொன்னதைச் செய்தோம்.
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகக்ளை அழித்து முழக்கமிட்டோம். வெகுசன மக்கள் எங்களோடு இணைந்து முழக்கமிட்டார்கள். ஒரு தம்பதியினர் எங்களது போராட்ட பேனரை கையில் ஏந்திக் கொண்டனர். பயணிகளாக காத்திருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மெளனமாக நின்று கவனிக்கவில்லை, எங்களுடன் கைகோர்த்தார்கள். மக்களின் புரட்சிகர மனநிலை குன்றவில்லை.
போராட்டம் விரிவடையுமெனும் நம்பிக்கை பிறந்தது. இந்தி திணிப்பை தமிழர்கள் ரசிக்கவில்லை. இந்தி திணிப்பால் வேலைவாய்ப்பு பறிபோவதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
"..ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன..இதனால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு வேலைகளை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். வங்கிகள், ரயில்வே, இன்சூரன்ஸ், என்.எல்.சி, வருமானவரி, சுங்கவரி என அனைத்து இடங்களிலும் இந்தி பேசும் மாநிலத்தவர்களே அதிகம். பஞ்சாப், மராத்தியம், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலத்தவர்களும் தேர்வாவதில்லை... ஆகவே இந்தி கற்றுக்கொண்டாலும், நமக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. இதனால் தான் சொல்கிறோம், இந்தி ஒழியட்டும், தமிழ் வெல்லட்டும்..." என முழக்கமிட்டு உரை நிகழ்த்திய போது வெகுமக்கள் கைதட்டினார்கள், ஆமோதித்தார்கள்...
இந்த எழுச்சிகரமான போராட்டத்தில் சென்னை பார்க் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய தோழர் சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
போர்க்குணத்தோடு நடந்த இப்போராட்டம் குறித்து பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் கவனப்படுத்தும் செய்தியை காண இயலவில்லை. ஓரிரு வரி செய்திகளாக சில ஆளும்கட்சி ஆதரவு சேனல்கள் ட்வீட் போட்டிருந்தன. திராவிடம் -பெரியார் என பேசும் பெரும்பாலான ஊடகங்கள் வரி செய்தியாகக் கூட வெளியிடவில்லை. திடீர் பெரியாரிஸ்டு யூட்யூபர்களும் செய்தியாக்கவில்லை. போலி தமிழ்த்தேசியவாதிகள் பார்ப்பன கடப்பாரையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் வாய்மூடி நிற்பது வழக்கமான விடயம் தான். அதிகாரத்தில் இல்லாத அமைப்புகள் கார்ப்பரேட் ஊடகத்தவரை நம்பி இயங்க இயலாது.
பெரியாரிய, முற்போக்கு தமிழ்த்தேசிய தோழமைகள், சனநாயக ஆற்றல்கள் இதுபோன்ற போராட்ட செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென வேண்டுகிறேன். உங்களது சமூக வலைதளங்கள் வழியே இச்செய்திகள் மக்களை சென்று சேர உதவிடுங்கள். நமக்கு நாமே ஊடகமாக வேண்டும்.
சனாதன எதிர்ப்பு போரில், சமரசமற்று மே17 இயக்கம் களத்தில் நிற்கிறது. கைகோர்க்க வாருங்கள்.
#தமிழ்_வெல்க
#இந்தி_ஒழிக
#தீ_பரவும்!
காதலித்து, திருமணம் செய்து, சமூகத்தின் எதிர்ப்புகளை எதிர்கொண்ட இணையோர்கள் பங்கு பெறும் நிகழ்வு. சாதிய சமூகம் கொடுத்த நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள், காதல் எவ்வாறு தனது வாழ்வை மாற்றியது எனும் அனுபவங்களை பகிரும் உரையாடல்.
சங்க இலக்கியம் முதலாக காதல் நம் தமிழ் சமூகத்தில் கொண்டாடப்படுகிறது. தலைவி-தலைவனாக சங்ககால காதலர்கள் முதல் வள்ளி-முருகன் எனும் திணை தெய்வங்கள் வரையில் பேசும் பொருளாக இருப்பது காதல். ஆணவப்படுகொலையாக அழிக்கப்பட்ட தலைவன், தலைவி வழிபாட்டிற்கான தெய்வங்களாக மாற்றப்பட்டதும் இம்மண்ணின் வரலாறு..
காதலால் நிறைந்த உலகு அழகானது. மானுடர்கள் எழுப்பிய சுவர்களை அன்பு எனும் ஆயுதம் உடைக்கிறது. சாதி, மதம், இனம் எனும் பாகுபாடுகளால் சமூகத்தை கூறுபோடும் பிற்போக்கு ஆற்றல்களை எதிர்த்து நிற்கும் வலிமையை காதல் வழங்குகிறது. இளையோர்களில் இயல்பாக எழும் உணர்வுப்பூர்வமான அன்பு இவ்வுலகத்தை பூக்களால் நிரப்புகிறது.
சாதி-மதம் கடந்து காதலித்து திருமணம் செய்த இணையர்கள் தாம் எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு. சமூகத்தின் நெருக்கடிகளை எதிர்த்து வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தும் காதல் இணையர்கள் தாம் சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட அனுபவங்களை பகிரலாம். காதலிக்கும் இளையோர்கள் தனது எதிர்கால நம்பிக்கையை, கனவுகளை பகிரவும் செய்யலாம்.
காதலை கொண்டாடுவோம்.
இடம்: @ThisaiBookStore
தமிழ்த்தேசியப்பெருவிழா 2026
மூன்றாம் அறிஞர் அவையம், அறிவர் மாநாடு வரும் மார்ச் மாதம் 07, 08 தேதிகளில் சென்னையில் நிகழ இருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் தளங்களை ஆய்ந்தறிந்து , தெளிவுபெறும் நிகழ்வாக, தமிழ்தேசியத்தின் பெரு நிகழ்வாக கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுவரையில்லாத வகையில், பலதுறைகளை சார்ந்த தமிழ்நாட்டின் அறிஞர்கள் பங்கெடுத்து சிறப்பித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக வருகின்ற 07,08 மார்ச் -2026 தேதிகளில் நடைபெற இருக்கிறது. மாநாட்டின் இறுதியில் 'விருது விழாவும், கலை-அரசியல்' நிகழ்வும் நிகழ இருக்கின்றன. மாநாட்டு தேதிகளை கவனத்தில் கொண்டு, பங்கேற்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலதிக தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.
@may17iyakkam