திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை – வரவேற்கிறேன்!
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பக்தர்களே தீபம் ஏற்றக் கிடைத்துள்ள தீர்ப்பால் முருக பக்தர்கள் மகிழ்ச்சி!
இனிவரும் காலங்களிலாவது த.வெ.க. அரசு இந்து விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்!
__________
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், பக்தர்களின் எதிர்பார்ப்புக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முருக பக்தர்களின் உணர்வுகள், ஆன்மீக மரபு மற்றும் நீண்டகாலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை மனதார வரவேற்கிறேன்.
குறிப்பாக, நாளை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதியரசர்களை நியமித்ததும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) நியமித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல், அவற்றைச் செயல்படுத்துவதில் வேண்டுமென்றே மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்து, பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும் வழிபாட்டு உரிமைக்கும் இடையூறு ஏற்படுத்திய தமிழக அரசின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றத் தவறிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உச்சநீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையையும் நிராகரித்துள்ள நீதிமன்றம், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20.11.2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மாவட்ட ஆட்சியரை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட தமிழக அரசின் அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று அறங்காவலர் குழுவையே கலைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சிறப்பானதாகும்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேலானது எவருடைய அதிகாரமும் அல்ல; சட்டத்தின் ஆட்சியே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை உச்சநீதிமன்றம் தனது இன்றைய உத்தரவின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த முருக பக்தர்களின் நம்பிக்கைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாக இந்த உத்தரவைப் பார்க்கிறேன்.
முருகப்பெருமானின் திருத்தலத்தில் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தி, நாளை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது, இந்து விரோதப் போக்கையும், மத நம்பிக்கைகளில் தலையிடும் அணுகுமுறையையும் தமிழக அரசு கைவிட்டு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் வழிபாட்டு உரிமைகளை மதித்து, எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான ஆட்சியை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி காலமா?
இந்து அமைப்புகள், பாஜக தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பதா?
தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல்
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குவதா?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கிய போதிலும் அதனை எதிர்த்து, இந்த வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது,
கார்த்திகை தீபத் திருநாள் என்பது தமிழர்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்த திருவிழா. இத்தகைய புனிதமான நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்பதற்காக தவெக அரசு பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளது,
திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட்ட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, இந்து முன்னணி உட்பட இந்து அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஜனநாயக வரலாற்றில் 1975-77 எமர்ஜென்சி காலம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட, ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்ட இருண்ட அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
அந்த எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தும் வகையில், தற்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்க்கும் சகவாச தோஷம் பற்றிக்கொண்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
1975-ல் எமர்ஜென்சி என்ற பெயரில்@ எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் ஒடுக்கப்பட்டது. இன்று சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அரசியல் எதிர்ப்புக் குரல்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.
அரசாங்கத்தை விமர்சிப்பதும், தங்களது மத நம்பிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதும் ஜனநாயகத்தில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள். அவற்றை அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முயல்வது கட ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது.
நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும் அரசின் கடமை. அதேநேரத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமையையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளையும் அரசு மதிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் சட்டப்படி நடைமுறைப்படுத்தவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இன்று, @BJP4TamilNadu கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. M.G. சதீஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அன்புடன் கலந்துரையாடினேன்.
இச்சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Women’s dignity and safety cannot be compromised. At the protest held in Kallakurichi, I strongly condemned the conduct involving MLA Arul Vicknesh sending teasing messages to the District Collector.... Public representatives must uphold the highest standards of dignity, responsibility and respect towards women. There must be accountability, not political protection. Protecting women is a responsibility, not a slogan.
#TVKFailsTN
#WATCH | Chennai, Tamil Nadu | BJP leader Tamilisai Soundararajan says, "Arul Vignesh sent wrong messages to the Collector, and the BJP cannot tolerate these atrocities. I want to convey two main things: Chief Minister Vijay should condemn these allegations, and the individual should be suspended from the party. It is fine even if he is suspended from his MLA post itself, because a person with such an ugly mindset cannot continue to sit in the Legislative Assembly..."
Kallakurichi, Tamil Nadu: On Minister C. T. R. Nirmal Kumar's statement, BJP leader Tamilisai Soundararajan says, "They are saying that not even a brick can be laid at Mekedatu, but what are the efforts of the Chief Minister? They cannot simply make film-like dialogues. They have to be involved in administration. They are making statements, but what efforts has the Chief Minister made? The Chief Minister went to Delhi and met Sonia Gandhi, who is the leader of the Congress, and the Congress is ruling Karnataka. The Karnataka Chief Minister is saying that they are going to construct Mekedatu. So, mere dialogues cannot help. Dialogue between the Chief Ministers can help. Both Chief Ministers should engage in dialogue and consult each other. The Supreme Court has already said, and the Cauvery Management Board has also instructed, that a dam cannot be constructed in one state without the permission of the other state..."
தத்துவ அறிஞர், பொருளாதார சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையுடன் விளங்கிய பாரதிய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராகவும் திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தன்னலமற்ற முழுநேரத் தொண்டராகத் தன்னை தேசப் பணிக்கு அர்ப்பணித்த அவர், எளிய மக்களின் முன்னேற்றம், சுயசார்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தனது சிந்தனைகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தார். அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய பாதையை எடுத்துக்காட்டின.
தேச நலனையே உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களை அவரது பிறந்த நாளில் போற்றி வணங்கி, அவரது உயர்ந்த சிந்தனைகளைப் பின்பற்ற உறுதி ஏற்போம். 🙏
Heartiest congratulations to @mirabai_chanu! 🇮🇳🥈
A special Silver for her in the Women’s 49 kg Weightlifting event at #AsianGames2026.
Her determination and consistency continue to inspire the nation. India is proud of her. Best wishes for her future endeavours!
#Cheer4Bharat
@BJP4TamilNadu மேலிடப் பொறுப்பாளராக திரு. @rammadhav_ ஜி அவர்களும், இணைப் பொறுப்பாளர்களாக திரு.@BlrNirmal ஜி மற்றும் திருமதி.@Aruna_DK ஜி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தங்களின் அனுபவமும் வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் சேவையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவும் பெரும் துணையாக அமையும். புதிய பொறுப்பில் தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
3 Crore+ youth registrations.
One growing MY Bharat Parivar. Every young voice, every idea and every step forward is making MY Bharat stronger. 3 Crore+ youth. Countless possibilities. One vision for Viksit Bharat.
Join the journey: https://t.co/C8ArZQ0uut
#MYBharat
#3Cr_MYBharatParivar