தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஐந்தாண்டுகள் முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு ஆளுங்கட்சியால் தலைவர்கள் தொண்டர்கள் அளவில்லாத கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டனர், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கொடூரமாக தாக்கபட்டனர், அனைத்திற்கும் பதில் தரும்விதமாக முதல்முறையாக பாஜக முதல்வர் @SuvenduWB நாளை பதவியேற்கிறார்.
மமதா பேனர்ஜி சென்ற முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார், இந்த முறை பாபானிபூர் தொகுதியிலும் தோற்றார், இரண்டு இடத்திலும் வெற்றி பெற்றவர் திரு.சுவேந்து அதிகாரி அவர்கள்.
வாழ்க ஜனநாயகம் !
வாழ்க பாரதம் 🙏
Heartiest birthday greetings to our Hon PM Thiru @narendramodi avl. His selfless service to the nation lights our path forward.
Praying for his good health and long life to empower him to drive India towards ever-greater glory!
#HappyBdayPMModi
திரு கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.
மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.
கோவை செட்டிபாளைய பேரூராட்சியில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளின் பேரில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி @arivalayam அரசின் சார்பாக துவங்கப்பட்டது.
ஆனால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு வெறும் 7 அடி ஆழம் கூட தாண்டவில்லை என்பதும், அதற்குள் வேலை முடிந்துவிட்டது எனக் கூறி திமுக அரசு ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பைப்பை இறக்கி மூடி போட்டு விட்டது எனவும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரைகுறையாக அரசுப் பணிகளை செய்வது என்பது அறிவாலயத்தின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று போல. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அவலநிலை.
தமிழக மக்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஊழலிலும், விளம்பரங்களிலும் மட்டுமே அதிக அக்கறை செலுத்தி வரும் திமுக ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. மாற்றம் வெகுதொலைவில் இல்லை!
கடந்த 11 ஆண்டுகளில், ஒவ்வொரு அரசுத் திட்டத்தின் முக்கிய கவனம் ஏழைகளின் நலனும் ஒவ்வொரு குடிமகனின் நல்வாழ்வும் ஆகும். உஜ்வாலா, பிரதமர் வீட்டுவசதி, ஆயுஷ்மான் பாரத், ஜன் அவுஷாதி அல்லது பிரதமர்-கிசான் சம்மன் நிதி என எதுவாக இருந்தாலும், இந்த முயற்சிகள் அனைத்தும் நமது மக்களின் நம்பிக்கைகளுக்குப் புதிய சிறகுகளை அளித்துள்ளன. அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன், இந்தக் காலகட்டத்தில் நமது குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். #11YearsOfSeva
Thalaivar @annamalai_k performed archana seva in the name of Bharat Mata, Prime Minister Shri @narendramodi avl and Home Minister Shri @AmitShah avl at Sri Puthige Matha,Phoenix, Arizona.
The Tamil Nadu BJP has received a nomination for the post of state president only from Shri @NainarBJP Ji.
As the President of the Tamil Nadu BJP unit, Shri @annamalai_k Ji has made commendable accomplishments. Whether it is carrying the policies of PM Shri @narendramodi Ji to people or the programs of the party from village to village, Annamalai Ji's contribution has been unprecedented.
The BJP will leverage Annamalai Ji's organizational skills in the party's national framework.