தந்தை பெரியாரின் வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் 56 ஆண்டுகால வழக்கறிஞர் பணி முடித்து 57 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்.
வழக்கறிஞர் V. இளங்கோவன்
M. Sc., B. L.,
சென்னை உயர்நீதிமன்றம்.
இன்றைய சூழலில், தனி தமிழ்நாடு கோரிக்கையை தேச துரோகமாக பார்க்க முடியாது; மாறாக இந்த கோரிக்கையை முன்வைப்பவர்களை மன நல பிரச்சனை உள்ளவர்களாகவே பார்க்கப்படுவர்
நீதிபதி பரத சக்கரவர்த்தி
இரு பிரிவினர் இடையேயான மோதல் காரணமாக கோயிலை மூடுவது என்பது சூழலை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிக்கிறது
சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு
முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மனு
காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அசோக்குமார் மனு மீதான விசாரணை ��ூலை 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், தனது உடன்பிறந்த தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில்,
நாளை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்குக
தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக்கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு
புழல் சிறையில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரப்படும்
புழல் சிறை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி
புழல் சிறையி���் கைதிகளை சந்திப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரக்கோரி
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பொதுநல மனு
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம் - தவெக வக்கீல் வழக்கு
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களாக நியமிப்ப��ாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த மக்கள���க்கு நீதி கிடைக்கக் கூடியதை நோக்கமாக கொண்ட புனிதமான கருவியாக உள்ள பொது நல வழக்குகளை, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது....
சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக வழ��்கு
கைது செய்யப்பட்ட யூ டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேரையும் ஜூலை 15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து
விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அமர்வு