தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff
அவர்களின் ஆணைக்கினங்க, புதுக்கோட்டை மாவட்டம்,
அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மணியடிபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை.
@tnpoliceoffl@RamuBalu6
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை,கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை, சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!.
ஒரு பேச்சு இரட்டை அர்த்தத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த முறையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவெக பெண் நிர்வாகி புகார் அளித்தார் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாக கைது செய்திருப்பது முற்றிலும் பழிவாங்கும் அரசியலாகும்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் @CMOTamilnadu அவர்கள் பேசும்போது இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்க, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் முதலமைச்சர் மீது இதே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?
முதலமைச்சரின் நண்பர் அல்லது நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதற்காக மட்டுமே இந்த அளவுக்குக் காவல்துறை விரைந்து செயல்படுகிறதா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதே வேகத்தில் நடவடிக்கை தொடருமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனங்களைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சனநாயத்திற்கு ஆபத்தான தவறான முன்னுதாரணமாகும்.
அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் சட்டரீதியாகவும் சனநாயக ரீதியாகவும் எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசுக்கு அழகு. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பழிவாங்கும் கைது நடவடிக்கைக்கு தமிழர் தேசம் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது!..
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தமிழ் மண்ணில் முதன்முதலில் ஒலித்த சிம்மக்குரல், நம் மதிப்பிற்குரிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அண்ணல் அம்பேத்கருக்கும் முன்பே, லண்டன் வட்டமேஜை மாநாடுகளில் (1930 - 1932) கலந்துகொண்டு, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்குரிமையும், முறையான பிரதிநிதித்துவமும் வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசிடமே நெஞ்சுறுதியோடு வாதிட்ட மாபெரும் ஆளுமை அவர்.
1893-லேயே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினராக (1923 - 1936) இருந்தபோது, பொது நீர்நிலைகளில் அனைவரும் தண்ணீர் எடுக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவரக் காரணமாய் இருந்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூனா ஒப்பந்தத்தில்' அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்.
"தன்னம்பிக்கை கொள்ளுங்கள், கல்வி பயிலுங்கள், உரிமைகளுக்காகப் போராடுங்கள்" என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அந்தச் சமூகப் போராளியின் வழியில் நடப்போம். சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்!
வீழ்ந்துக் கிடந்த சமூகத்தை நிமிர்த்திய அந்தச் சரித்திர நாயகருக்கு எங்களின் வீரவணக்கங்களும், பிறந்தநாள் வாழ்த்துகளும்!

ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,விமர்சிப்பதும், இயல்பானது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திரு. மாரிதாஸ் என்ற யூடியூபர் அமைச்சர்கள் திரு.ஆதவ் அர்ஜுனா, திருமதி.கீர்த்தனா மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்துள்ளது.
இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது சனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை கலாச்சாரத்திற்கு முந்தைய அரசுதான் காரணம் என கூறி தட்டிக் கழித்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்,ஒருவர் விமர்சனம் செய்தார் என்பதற்காக இத்தனை வேகமாக செயல்பட்டு அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட, யூடியூபர் திரு.மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்து சனநாயகத்தை காத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu

"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!" என்று முழங்கி, தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காகவும் அர்ப்பணித்த முத்தமிழறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் பிறந்ததினம் இன்று.
ஒரு சாதாரண மனிதனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை அரியணை ஏறி, அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய ஒரு மாபெரும் ஆளுமையின் பிறந்தநாளை இன்று நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.
"ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறைக் கவிதையைத் தானே எழுதினார். அவரது 94 ஆண்டு கால வாழ்வில், அவர் உழைக்காத நாளே இல்லை என்று கூறலாம்.
அதிகாலையிலேயே எழுந்து முரசொலியில் 'உடன்பிறப்பே' என்று அவர் எழுதும் கடிதங்கள், தொண்டர்களின் ரத்தத்தை உஷ்ணமாக்கும் சக்தி கொண்டவை. மேடைப் பேச்சிலும், திரைத்துறையிலும், இலக்கியத்திலும் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்.
அரசியலில் எத்தனையோ சறுக்கல்கள், நெருக்கடி நிலை (Emergency) காலக் கொடுமைகள், தோல்விகள் வந்தபோதும், ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து வந்த இரும்பு மனிதர்.
இன்று தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு கலைஞர் போட்ட அடித்தளமே முக்கியக் காரணம்:
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம். சென்னை தரமணியில் 'டைடல் பார்க்' (Tidel Park) அமைத்து, தமிழகத்தை ஐடி (IT) துறையின் உலகளாவிய வரைபடத்தில் ஏற்றிய பெருமை. இலவச விவசாய மின்சாரம், ஏழைகளுக்கு இலவசக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள். இன்னும் எத்தனையோ!..
தமிழ்நாடு இருக்கும் வரை, தமிழ் மொழி வாழும் வரை, கலைஞரின் பெயரும் புகழும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். கலை, இலக்கியம், அரசியல் எனப் பன்முகத் திறமையால் நம்மை வியக்க வைத்த அந்தப் பேராசானின் நினைவைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நீதியும் நிறைந்த தமிழகத்தைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம்!
"வாழ்க கலைஞர் புகழ்! வளர்க தமிழ்!"
இன்றைய தினம், 05.06.2026, வெள்ளிக்கிழமை - தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, மாநில அரசின் சார்பில், புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டம் 2008-ன் படி (The Collection of Statistics Act, 2008) சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Survey) நடத்துவதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் @draramadoss அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம், தலைநகர் சென்னை, தியாகராயர் நகரில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எனது தரப்பு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்தேன்!
அனைவருக்கும் எனது மனமார்ந்த தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகள்!
இறைவனின் தூதர் இப்ராஹீம் அவர்களின் உன்னதமான தியாகத்தையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் போற்றும் புனிதமான நாள் இன்று.
நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து மகிழும் ஈகைப் பண்பையும், சக மனிதர்கள் மீது காட்டும் உறைவிடமில்லா அன்பையும் இந்த நன்னாள் நமக்குக் கற்றுத் தருகிறது. தியாகமும், மனிதநேயமும் மட்டுமே இந்த உலகை இன்னும் அழகாக்க வல்லவை.
இந்த இனிய பக்ரீத் திருநாளில், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், நீடித்த அமைதியையும், அனைத்து வளங்களையும் வாரி வழங்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சியைப் பகிர்வோம்... மனிதநேயத்தைக் காப்போம்!
அனைத்து இசுலாமிய சொந்தங்களுக்கும், என் நெஞ்சம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!..

தமிழர் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதயவிழாவின் இறுதி நிகழ்வாக, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் "சதயவிழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" சிவகங்கை அரண்மனைவாசலில் சிறப்பாக நடந்து முடிந்தது!..
இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சி உரையாற்றினேன்!
இந்நிகழ்வில், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
#முத்தரையர்_சதயவிழா
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது..
ஆனால் @TNDIPRNEWS
சார்பில் எந்தவொரு நாளிதழிலும் விளம்பரம் கொடுப்பதில்லை..
@CMOTamilnadu@imrajmohan
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி ஆகாஷ் டெலிசன் கடந்த மார்ச் 5-ஆம் தேதி, ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினரால் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மார்ச் 8-ஆம் தேதி தம்பி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக, எதிர்காலக் கனவுகளோடு படித்துக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவனின் உயிர், காவல்துறை அராஜகத்தால் பறிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது.
தம்பி ஆகாஷ் டெலிசனின் படுகொலைக்கு நீதி கேட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 73 நாட்களாகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், தங்களது பிள்ளையை இழந்து, நீதிக்காக, உறவினர்களும், பொதுமக்களும் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.
இந்த நீதிக்கான தொடர் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு, எனது ஆதரவை முழுமையாகப் பதிவு செய்தேன். மக்கள் சக்தியின் இந்த நியாயமான போராட்டம் நிச்சயம் வெல்லும்!
போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்.
தம்பி ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை விரைவாக நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.
அதிகார பலமும், அராஜகமும் ஒருபோதும் நீதியை விலைபேசிவிட முடியாது. தம்பி ஆகாஷ் டெலிசனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை, எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும்!..
தமிழர் ஆட்சி கழகத்தின் தலைவர் சகோதரர் திரு. எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களும் உடனிருந்தார்!..
இன்று வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் நின்ற பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
உங்கள் அடுத்தகட்ட கல்விப் பயணம் இன்னும் சிறக்கட்டும்!...
அதே சமயம்,எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராத அல்லது தற்காலிகமாகத் தேர்ச்சி பெறத் தவறிய மாணவச் செல்வங்களே...
இந்த ஒரு தேர்வு முடிவு உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையோ, உங்கள் தனித்திறமையையோ ஒருபோதும் தீர்மானிக்காது. உலகில் சாதித்த பல சாதனையாளர்கள் பள்ளிக்கூடத் தேர்வுகளில் வென்றவர்கள் அல்ல; வாழ்க்கைத் தேர்வுகளில் வென்றவர்கள்!
அன்பான பெற்றோர்களே!..
இந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை உங்களின் ஒப்பிடுகளோ அல்லது கோபமோ அல்ல. "பரவாயில்லை மகனே/மகளே, நான் இருக்கிறேன்... உன்னால் முடியும்" என்ற உங்களது ஆறுதல் வார்த்தைதான். அவர்களுக்குப் பக்கபலமாக நில்லுங்கள்.
விதை கீழே விழுவது அழிவதற்கல்ல... மரமாக முளைப்பதற்கே!..தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அடுத்த அடி எடுத்து வைப்போம். நாளை நமதே!
இன்றைய தினம் 10.05.2026,ஞாயிற்றுக்கிழமை - தமிழக முன்னாள் முதல்வர்,திராவிட முன்னேற்றக் கழக தலைவர் @mkstalin அவர்களையும்,
தமிழக முன்னாள் துணை முதல்வர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களையும், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினேன்!..
கிராமப் பகுதிகளில், அனுமதியின்றி மதுபானம் விற்பவர்கள் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!..
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் 500 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் டாஸ்மாக் மது பான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
இதனை தமிழர் தேசம் கட்சி வரவேற்கிறது.இது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
குடிபோதைக்கு அடிமையானவர்கள், மது பிரியர்கள் எவ்வளவு தூரத்தில் கடை இருந்தாலும் அங்கு சென்று மது அருந்துவார்கள். இன்றைக்கு கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு காரணமாக இருப்பதே கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்தான்.
கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முத்தரையர் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கக் கடிய பகுதிகளில் தங்கு தடை இல்லாமல் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது.
இதனால் முத்தரையர் சமுதாய மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக முழுவதும் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மது பானம் விற்கும் கும்பலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!...
@CMOTamilnadu
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும்.
@arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!..
அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தின் தனிப்பெரும் அடையாளம் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம்.
தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..