Finance influencer Harish dies by suicide
- Harish had 1.4 million followers
- Father blames 'cyberbullying' by Youtuber, claims Youtuber Jason Samuel targeted his son
@srivatsavrohit shares more details.
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!!
இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா?
முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா?
திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா?
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)?
அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும்.
@PriyarajanDMK@KanimozhiDMK