REAL TVK VOICE | தமிழக வெற்றிக் குரல்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|Supporter-run account | Not an official account | Unofficial TVK Fan Commentary Account
🚨 ஸ்டாலின் அவர்களே, உதயநிதி ஸ்டாலின் அவர்களே… தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில் திமுக நிர்வாகியின் பெயர் வெளியாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மட்டும் ஏன் மௌனம் காக்கிறீர்கள்?
மற்ற கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் வரிந்து கட்டிக்கொண்டு அரசியல் பேசும் திமுகவினர், சொந்தக் கட்சியினர் சிக்கும்போது மட்டும் அமைதி காப்பது ஏன்?
எதிர்க்கட்சியினருக்கு ஒரு நீதி… உங்கள் கட்சியினருக்கு ஒரு நீதியா?
2021 முதல் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்த கவலைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் வலையமைப்புகள், இடைத்தரகர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு வேரறுக்க வேண்டும்.
முதல்வர் விஜய் அண்ணா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஒரு வலுவான வேண்டுகோள்!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழக மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்: சில லட்சங்கள் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு தலைமுறையின் வாழ்க்கையையும், சமூகத்தின் எதிர்காலத்தையும் சீரழிக்காதீர்கள். நீங்கள் செய்யும் செயல் சமூகத்திற்கு நல்லதா, கெட்டதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தைவிட மனித உயிர்களும், இளைஞர்களின் எதிர்காலமும்தான் முக்கியம்!
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பும்கூட!
இது அரசியல் பிரச்சினை அல்ல… நம் இளைஞர்களின் எதிர்காலப் பிரச்சினை!
மௌனம் வேண்டாம்… மெத்தனம் வேண்டாம்… போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள்!
#DrugFreeTamilNadu #CMVijay #TVK #TamilNadu
🎂✅ Quality Check Before Distribution!
Setting an example of accountability and commitment!
Cuddalore District Monitoring Officer Mr. Mohan, IAS, personally inspects the quality of cakes ahead of tomorrow’s distribution, ensuring that quality and standards are not compromised.
Quality, transparency and responsibility in every step! 👏
#Cuddalore #IAS #QualityCheck #TamilNadu
கோவில்களின் சொத்துக்கள் இனி ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் இல்லை! 🔥
17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு, 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு, 13,233 எல்லைக் கற்கள் நடவு, ₹213 கோடி வாடகை மற்றும் நிலுவைத் தொகை வசூல்!
கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்! 👏
ஆன்மீகச் சொத்துக்களைப் பாதுகாப்பது கடமை; அதைச் செயல்படுத்திக் காட்டுவது நல்லாட்சி!
#CMVijay #TVKGovernment #TempleLandProtection
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், அங்கீகாரப் புதுப்பிப்பு மற்றும் கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வசூலித்ததாகப் புகார்! 🚨
இந்த வழக்கில் முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளில் உள்ள ₹4.5 கோடி முடக்கம். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
கல்வித்துறையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வெட்கக்கேடானது! தொடர்புடைய அனைவரையும் விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்!
#Corruption #TamilNadu #Accountability #dmkdestoryedtamilnadu #DMKFailsTN
மழைக்காலத்திலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மக்கள் நல அரசு! 🌧️👏
2027–28 கல்வியாண்டில் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மழைக்கோட்டுகள் வழங்கும் திட்டம்!
முதற்கட்டமாக 91,771 மாணவர்களுக்கு மழைக்கோட்டுகள் வழங்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு, நலன் என ஒவ்வொன்றிலும் அக்கறை காட்டும் முதல்வர் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்! ❤️
சொல்வதைச் செய்வோம்… செய்வதை மக்களிடம் சேர்ப்போம்! இதுவே மக்கள் நல ஆட்சி!
#CMVijay #TVKGovernment #StudentWelfare #TamilNadu
கோவில் நிலங்களை மீட்டெடுப்பதில் அதிரடி நடவடிக்கை! 🔥
₹148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன!
தவெக ஆட்சி பொறுப்பேற்ற வெறும் 6 மாதங்களில் இந்த அதிரடி நடவடிக்கை என்பது பாராட்டுக்குரியது. 👏
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டெடுத்து, ஆன்மீகச் சொத்துக்களைப் பாதுகாக்கும் முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்!
சொத்துக்கள் மக்களுக்காகவும், கோவில்களின் நலனுக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே நல்லாட்சியின் அடையாளம்! 💪
#CMVijay #TVKGovernment #கோவில்_நிலங்கள் #GoodGovernance
கையெழுத்திடுவதோடு நின்றுவிடாமல்… செயல்பாட்டிலும் சாதனை! 🔥
தமிழ்நாட்டில் முதலீட்டு ஒப்பந்தங்கள் வெறும் வாக்குறுதிகள் அல்ல; அவை உண்மையான வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளிகள்!
மே 2026 முதல் இதுவரை, தமிழ்நாடு அரசு 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டு, ₹1,14,811.91 கோடி மதிப்பிலான முதலீடுகளை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க சாதனையாக, 83 ஒப்பந்தங்கள் ஏற்கனவே செயல்பாட்டிற்கு மாற்றப்பட்டு, 74.1% ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன! 👏
பல்வேறு தொழில்துறைகளிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிஜமான வளர்ச்சியாக மாற்றி, உலகளாவிய முதலீடுகளுக்கான முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஏனெனில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உண்மையான வெற்றி கையெழுத்திடுவதில் இல்லை… அதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும், செயல்பாட்டிலும்தான் இருக்கிறது!
முதலீட்டில் நம்பிக்கை… செயல்பாட்டில் சாதனை… வளர்ச்சியில் தமிழ்நாடு! 🔥
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNaduGrowth #VijayGovernment
@CMOTamilnadu@TNIndMinOffice@Keerthana4VNR
இந்த ஆறு மாத காலங்களில் தவெக அரசு செய்த வளர்ச்சி திட்டங்கள்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள் - எல்லாருமே TVK அரசுல நல்லா இருப்போம்!
#TVK#CMVijay
மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் முதன்மையானது! 🌊👏
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைக் கருத்தில் கொண்டு, மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
✅ மீன்பிடிப் படகுகள் கரை திரும்ப அறிவுறுத்தல்.
✅ நவம்பர் 13 முதல் மழை உத்தரவு முடியும் வரை மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது.
மீனவர்களின் உயிர் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணா அவர்களுக்கும் பாராட்டுகள்! 💐
#CMVijay #TamilNadu #FishermenSafety #FisheriesDepartment #weatheralert
சென்னையின் பெருமை! தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மற்றுமொரு மைல்கல்! 🔥👏
RAPTEE.HV – Made in Madras! 🇮🇳⚡
சென்னையில் உருவாகும் மின்சார இருசக்கர வாகனங்கள் மூலம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்ற கனவுக்கு இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு!
மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணா அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் புதிய விற்பனையகத் திறப்பு விழா மகிழ்ச்சியளிக்கிறது.
Made in Madras. Made for the Future! 🚀
#RapteeHV #MadeInMadras #TamilNadu #CMVijay #EVRevolution #TamilNaduDevelopment
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை.
இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது.
இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும் கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார்.
நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது.
அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன்.
இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக,
எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 29.10.2026 அன்று 11 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற IND-TN-12-MM-67 என்ற ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு, 9.11.2026 அன்று குளச்சல் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தது.
படகில் இருந்த 11 மீனவர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்பில்,
தற்போது பழுதடைந்த விசைப்படகு உதவி விசைப்படகுடன் இணைக்கப்பட்டு இழுவை மூலம் கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இரு விசைப்படகுகளும் இன்று வந்தடையும்.
மீனவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை தொடர்ந்து ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
CM Vijay Anna and Tamil Nadu Police are on fire! 🔥💪
A strong warning to rowdies and anti-social elements — no more lawlessness, no more escape from pending cases. The statewide crackdown sends a clear message: Law and order will not be compromised!
Kudos to Tamil Nadu Police for this powerful clean-up mission and to our Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay Anna for his firm leadership. 👏
A safer Tamil Nadu. A stronger Tamil Nadu! 🔥
#CMVijay #TamilNaduPolice #LawAndOrder #SafeTamilNadu #VijayAnna
இது வெறும் சட்டத் திருத்தமல்ல… இளைஞர்களின் எதிர்காலத்தின் மீது முதல்வர் விஜய் கொண்டுள்ள அக்கறைக்கும், தொலைநோக்குச் சிந்தனைக்கும் சான்று! 🔥👏
பணத்திற்கும், சிபாரிசுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்கும் இந்த முன்னெடுப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 💪
இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், சம வாய்ப்பையும், வெளிப்படையான வேலைவாய்ப்புச் சூழலையும் உருவாக்க முன்வந்துள்ள மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 💯❤️
#முதல்வர்_விஜய் #CMVijay #TVK #தமிழகம்முன்னேறும் #இளைஞர்நலன் #வேலைவாய்ப்பு #தகுதிக்குமுன்னுரிமை #வெளிப்படையானநிர்வாகம் #மக்களாட்சிவெற்றி #தமிழகஅரசு
#திமுக ஒரு வரலாற்றுப் பிழை
திமுக தான் தமிழ்நாட்டில் அனைவரையும் படிக்க வைத்தது என்றார் ஸ்டாலின்.
நூலகத்திற்கு சென்று பார்த்த பின் தான் புரிந்தது.
புத்தகத்திலும் உழல்.
புத்தி முழுக்க ஊழல்.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தையும் மக்கள் பங்களிப்பையும் இணைக்கும் புதிய முன்னெடுப்பு! 🌱💧
தமிழ்நாட்டின் நீர்நிலைகளைப் புனரமைக்க ‘ஏரி’ (ERI) இணையதளம் மூலம் 5 அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, வெளிப்படைத்தன்மையுடன் விரைவான அனுமதிகளையும் மக்கள் பங்களிப்பையும் உறுதி செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள்.
நீர்நிலைகள் காப்போம்… நீர்வளம் பெருக்குவோம்… எதிர்காலத் தலைமுறைக்கு வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
இது வெறும் திட்டமல்ல; நீர் பாதுகாப்பிற்கான தொலைநோக்குப் பார்வை! 👏
#தமிழ்நாடு #CMVijay #WaterConservation #TVK
ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இடையே என்ன போட்டி நடக்கிறது? ஒரே செய்தியை இருவரும் தனித்தனியாக, வெவ்வேறு வார்த்தைகளில் பதிவிட்டு விளம்பரம் தேடுவது ஏன்?
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் போட்டி போட வேண்டியவர்கள், ஒரே செய்தியைப் பகிர்ந்து அரசியல் விளம்பரம் தேடுவதில் போட்டி போடுகிறார்கள்.
அரசியல் விளம்பரத்திற்குக் கூடப் போட்டியா? வெட்கக்கேடு!
கொள்கை… கொள்கை… என்று மேடைக்கு மேடை முழங்கும் திமுகவின் உண்மையான கொள்கை என்ன?
மக்களுக்குச் சேவை செய்வதா? இல்லை, கமிஷன், லஞ்சம், வசூல் எனப் பணம் சேர்த்து, அதற்குப் பெயர் கட்சி நிதி என்று நியாயப்படுத்துவதா?
வாயில் கொள்கை முழக்கம்… செயல்பாட்டில் வசூல் கலாச்சாரம்!
இனி வெற்று வசனங்களால் மக்களை ஏமாற்ற முடியாது!
#DMKfails #DMKfailsTN #TamilNaduPolitics #TVK