ரீடோ பயணம்..நாளை "அறம் செய்ய விரும்பு " அமைப்பு, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதுமாக நிகழ்த்த இருக்கும் உலக சாதனையை நிகழ்ச்சியில், நாங்களும் அவர்களுடன் கை கோர்த்துக் கொள்கிறோம்.
நாளை நிகழ்வில் 800 மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி அடர் வனத்தை உருவாக்க இருக்கிறோம். நன்றி..
தேனி வயல்பட்டி அரசு காந்திஜி நடுநிலைப்பள்ளியில் vonisha பவுண்டேஷன் மற்றும் Reedow அமைப்பினர் உருவாக்கிய 500 கன்றுகளை கொண்ட ஒரு குறுகிய மியாவாக்கி forest நல்ல முறையில் துளிர்விட ஆரம்பித்துள்ளது... மகிழ்ச்சியில் விஜயராஜ் @ReedowCharity
ரீடோ பயணம்....
இன்று (08.05.2021) ரீடோவின் "குளம் காப்போம், மனிதகுலம் காப்போம்" எனும் செயல் திட்டத்தின் கீழ் குன்னூர் அம்மச்சியாபுரம் கருங்குளத்தை; முன்மாதிரி குளமாக, பல்லுயிரிய குளமாக மாற்றும் செயல்திட்ட அடிப்படையில் இன்று பத்து அடி உயரமுள்ள 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த covid-19 இக்கட்டான சூழ்நிலையிலும் ரீடோ வின் சார்பாக இன்று வயல்பட்டி அரசு காந்திஜி நடு நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளுக்கான குழிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
எங்களோடு இணைந்திட
https://t.co/pcBRzRJ4u6
9629102424
#GlobalWarming#biodiversity#miyawakiforest#sdg13#palmtrees
பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள 100 மரக்கன்றுகள் அம்மசியாபுரம் கருங்குளத்தில் நடவு செய்வதற்காக வாங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஆலயம் பவுண்டேஷன் வழங்கியுள்ளது. அவர்களுக்கு REEDOW சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#reedow#100tree@UNFCCC
@thenireedow
#ClimateAction#CO2
ரீடோவின்
மே தின வாழ்த்துக்கள்...
நமது உழைப்பு நமக்கானது மட்டும் இல்லை...
இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்குமானது...
01.05.2021
புகைப்படம்
கருங்குளம்...
மூன்றாவது மியாவக்கி குறுங்காடு.பூமி நாளில் புதைக்கப்பட்ட புதையல்கள் (மரங்கள்) அனைத்திற்கும் சொட்டு நீர் அமைத்தல்.,மரக்கன்றுகளுக்கான குழிகளில் மூடாக்கு போடும் பணி ஆரம்பிக்கப் பட்டது.வயல்பட்டி ஊர் மேம்பாட்டிற்கான கனவுகளோடு அருண்ஹரி,மோகன்,கார்த்திராஜா ஆகியோர் தன்னார்வலர்களாக உதவினர்
நாளை உலக புவி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், வயல் பட்டி கிராமம் , காந்திஜி அரசு நடுநிலைப்பள்ளியில் 3 வது மியாவாக்கி அடர் குறுங்காடு உயிர்ப்பிக்க ஆரம்பிக்கிறது. Vonisha service foundation உடன் இணைந்து முதலாவதாக 500 மரக்கன்றுகளுக்கான நடவு பணியை துவங்குகிறோம்.
சிரிக்க வைத்து சிந்திங்க வைத்தவர் மறைந்தாலும்..!!!
எங்களை போல்
அவர் முளைக்க வைத்த மரங்கள் மனித குலம் உள்ளவரை அவரது காற்றையும் நிழல்களையும் எப்பொழுதும் நாடும்.. #RIPVivekSir#50tree#reedow#theni
ரீடோ பயணம்...
வளரும் தலைமுறையினரின் நலனை தீர்மானிக்கும் பல்லுயிர் வளத்தை மேம்படுத்தும்; வனங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.வாருங்கள் எங்களோடு இணைந்திட...
https://t.co/pcBRzRJ4u6
9629102424
தேனி மாவட்டம்
நான் எனக்காக உழைக்கவில்லை...
எனது நிலத்தில் உழைக்கவில்லை...
சிந்திடும் என் வியர்வையில்
காடு ஒன்று உருவாகும அதில் பல்லுயிர்கள் பாதுகாப்பாய் வாழும்...
பல்லுயிர்களின் பாதுகாப்பே உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு.நான்உங்கள்குழந்தைகளுக்காக உழைக்கிறேன்.என்னோடு பயணிக்க விரும்புகிறீர்களா?
இன்று காலை நமது மரக்கன்றுகளுக்கான நாற்றாங்காலில் பராமரிப்பு களப்பணிகள் நடைபெற்றது இந்த நாற்றாங்கால் வணிக நோக்கமற்றது.இது நாம் வாழும் நிலத்தின் பசுமையை,பல்லுயிரிய வளத்தை, மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
வாருங்கள்!நமது நிலத்தை மேன்மைபடுத்த..