மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ @AIADMKITWINGOFL ��ார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.
தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, @AIADMKITWINGOFL சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் @AIADMKOfficial உழைக்கும்!
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”
என்ற வள்ளுவரின் அறிவு���ையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்.
கழக உடன்பிறப்புகளே,
"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"
என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன்.
'விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது"
என்ற புரட்சித் தலைவரின் தத்துவ வரிகள் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வெற்றி நிச்சயம்; இத��வே நமது லட்சியம்.
நாளை நமதே! இந்த நாடும் நமதே ! என்று நம் பணிகளை நாள்தோறும் ஆற்றுவோம்.
வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்!
வாழ்க புரட்சித் தலைவியின் புகழ்!
வெல்�� அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53 @AIADMKOfficial
விடியா திமுக ஆட்சியில் வெள்ளக்காடான வேளச்சேரி!
போன வருட மழையில் இருந்து எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், வெள்ளம் வராத இடமாக தேர்ந்தெடுத்து போட்டோஷூட் எடுக்கும் பொம்மை முதலமைச்சர் @mkstalin அவர்களே.. இதுவும் சென்னை தான்!
#4000கோடி_என்னாச்சு#விடியா_திமுகமாடல்
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் திரு. ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.
தமிழகத்தின் தலைநகர் சென���னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதலமைச்சர் திரு. உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்��ிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகியுள்ள திரு. @Udhaystalin ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகர மக்கள் திரு. ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல் தங்களது இர��� மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.
தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர���க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி ��ீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு. @mkstalin-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
கனமழையை எதிர்கொள்வதற்கு இந்த தூங்கு மூஞ்சி அரசு எடுத்திருக்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை #200 🔥
//எப்படி வித விதமா முட்டுக் கொடுக்கப் போறாங்கன்னு மட்டும் பாருங்க //