தனிமையில் யோசித்துக்
கொண்டிருந்தேன் - யாரைப்
பற்றியும் அல்ல
என்னைப் பற்றித்தான்
என்னைப்பற்றி யோசிக்கத்
தொடங்கிய பிறகுதான் தெரிகிறது - என்னைப்
பற்றி யோசிக்கவே நிறைய
இருக்கிறதென்று.
நேரம் செல்ல செல்ல
நாட்கள் நகர நகர
வருடம் கடக்க கடக்க
வருந்தும் நினைவுகள்
யாவும் - மறைந்து போகும்
மகிழ்வித்த தருணங்கள்
யாவும் - ஏங்கும் சுவடுகளாகும்
✒️....
எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப்
பயணத்தை
புரிந்து கொள்ளப்
போவதில்லை,
நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்!!