அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் ��ிவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் ��ாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெ���்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
பெரம்பலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், மாவட்ட கழக அவைத்தலைவர் நடராஜன் அவர்களின் தலைமையில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அவர்களின் வரவேற்புரையில் நடைபெற்ற கூட்டத்தில்,கழக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ���்ணன் @dmk_raja அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக தோழர்கள் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத�� தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் ��ுதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
குன்னம் தொகுதி தேர்தல் களத்தில் மாற்றுக்கட்சியினரின் தொடர் வருகையால் கழகத்தின் பலம் நாளுக்கு நாள் மாபெரும் அளவில் பெருகிக்கொண்டே செல்கிறது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த திராவிட மாடல் ஆட்சியின் ஈர்ப்பால், இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐ.ஜே.கே) மாவட்டச் செயலாளர் திரு. காடூர் ரகுபதி அவர்கள் ��டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னத்தில் நமது மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளந்தலைவர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, திரு. காடூர் ரகுபதி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில், இன்று (08.04.2026) ஐ.ஜே.கே கட்சியைச் சேர்ந்த மேலும் 11 முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தங்களைக் கழகத்தில் பெருமகிழ்ச்சியோடு இணைத்துக் கொண்டனர��.
இந்தச் சிறப்பான நிகழ்வில், ஐ.ஜே.கே மாவட்ட மகளிர் அணித் தலைவி சுதா, மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றியப் பொருளாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் அணிச் செயலாளர் மணிமாறன், ஆசிரியர் அணிச் செயலாளர் தங்கவேல், இளைஞர் அணிச் செயலாளர் அருண்குமார், வர்த்தக அணிச் செயலாளர் ரவி கந்தசாமி, கிளைச் செயலாளர் அசோக்குமார் மற்றும் உறுப்பினர்களான காடூர் பாரத், ராஜேந்திரன், மணிவேல் ஆகிய 11 பேர் கொ��்கை உணர்வோடு நம்முடன் இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கப் புறப்பட்டுள்ள நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிப் பயணத்திற்குத் தோள் கொடுக்க வந்துள்ள புதிய உடன்பிறப்புகள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு வரவேற்கிறேன்.
குன்னம் தொகுதி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், கழக வேட்பாளரான என்னை ஆதரித்து குன்னத்தில் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் மரியாதைக்குரிய @Udhaystalin அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவ��்களின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசின் ஈடில்லாச் சாதனைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்து, குன்னம் தொகுதியில் கழகத்தின் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் நம் இளம் தலைவர் அவர்கள் வாக்கு சேகரித்தார்.
இளம் தலைவர் அவர்கள் பரப்புரை மேற்கொண்ட இடமெங்கும் திரண்டிருந்த மக்களின் ஆரவாரமும், கழக உடன்பிறப்புகளின் வற்றாத உற்சாகமும், எழுச்சியும் கு���்னம் தொகுதியில் நாம் பெறப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இப்போதே ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறது.
குன்னம் தொகுதிக்கு நம் இளந் தலைவர் அவர்களின் வருகை, தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்துள்ளது. நம் இளம் தலைவர் அவர்கள் இன்று ஏற்றி வைத்த வெற்றி தீபந்தத்தை குன்னம் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வோம்.
குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், அங்கனூர் கிராமத்தில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்ய நம் "உதயசூரியன்" சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.
ஒவ்வொரு வீட்டிலும் உதயசூரியன் உதிக்கட்டும்..! தமிழ்நாடு வெல்லட்டும்..!
தேர்தல் நாள் : 23.04.2026
#வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு
#வெல்வோம்_ஒன்றாக..!
ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் நம் #chepauktriplicane சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். இன்று மாலை சேப்பாக்கம் பகுதியில் உள்ள 62, 62அ, 63 ஆகிய வட்டங்களில் கழக உடன்பிறப்புகள��, கூட்டணி கட்சி தோழர்கள் ஆகியோருடன் பிரச்சார வாகனத்தில் பயணித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
2026 தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டாரான கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் எடுத்துரைத்தோம்.
இரண்டாவது முறையாக மக்கள் பணியாற்ற உதய சூரியன் சின்னத்தில் நமக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
நம் தொகுதி மக்களின் அன்பும், அரவணைப்பும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்தது.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
அரியல���ர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 35 பேர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தள��தி @mkstalin அவர்களின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வரும் மக்கள் நலன் சார்ந்த திராவிட மாடல் ஆட்சியின் மீதும், கழகத்தின் கொள்கைகள் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டு அவர்கள் இந்தச் சிறப்பான முடிவை எடுத்துள்ளனர்.
இந்த மாபெரும் இணைப்பில், அரியலூர் மாவட்ட த.மா.கா தலைவர் பனங்கூர் எஸ். ஜெயராமன், மண்டல வர்த்தக அணித்தலைவர் சி. காமராஜ், மாவட்ட பொருளாளர் ஜி. கல்யாணசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் ஜெ. விஜயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.வி.செல்வராசு, வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் ஜி. தங்கதுரை மற்றும் மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ. கரிகாலன் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர்.
அவர்களுடன், முன்ன���ள் வட்டார விவசாய அணித் தலைவர் ஜி. இரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான குரு. கார்த்திக்கேயன், அரியலூர் வட்டாரத் தலைவர் காமராஜ், திருமானூர் வட்டாரத் தலைவர் செல்வம், வட்டார துணைத் தலைவர்கள் அய்யப்பன் மற்றும் ஜி. இராமதாஸ் ஆகியோரும் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
மேலும், மாவட்டப் பிரதிநிதி ஜி. சமுத்திரராஜ், வட்டாரச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன், இளைஞர் அணித் தலைவர் தினேஷ், இளைஞர் அணி துணைத் தலைவர்கள் கே. இரமேஷ், காட்டுராஜா, மாணவர் அணி தலைவர் எம். ராஜி, மாணவர் அணி துணைத் தலைவர்கள் சுரேஷ், பி. சரவணன், மாணவர் அணி வட்டார துணைத் தலைவர் எஸ். மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நீதிதேவன், முன்னாள் கவுன்சிலர் ஜெயபாப்பா காமராஜ் மற்றும் வட்டார செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் கழகத்தி���் இணைந்து கழகத்திற்கு வலுசேர்த்துள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் தலைவர் அவர்களின் நல்லாசியோடு, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் அவர்களின் வாழ்த்துகளோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ள நிர்வாகிகள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், அரியலூர் மாவட்டத்தில் கழகத்தின் அசுர வளர்ச்சியை ந���லைநிறுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யவும் நாம் அனைவரும் தோளோடு தோள் நின்று ஒன்றிணைந்து உழைப்போம்!
அரியலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று (17.03.2026) நடைபெற்ற ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய கழக மேற்பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பான வியூகங்கள் மற்றும் நமது திராவிட மாடல் அரசின் மகத்தான மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பது குறித்தும் இந்த முக்கியமான கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மக்களின் நலன் ஒன்றையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் நமது கழகத் தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, மக்கள் பணியைத் தொடர்ந்து சோர்வின்றி முன்னெடுத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க அனைவரும் உழைப்போம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கழக அணி வெற்றி பெறுவதற்கு கழகத் தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
ஒன்றிணைந்து செயல்படுவோம், களத்தில் வென்றெடுப்போம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
“நூற்றாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் போராடுவோம்! அவர்களைப் போலவே வெற்றி காண்போம்!“- கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#DMK4TN#SayNoToNDA
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்���ுமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.🖤♥️
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக��� கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!
#VoteForDMK