நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்.. அதான் நீ எனக்கு. அவ்வளவு தான் நீ எனக்கு..!
பழிசொல்லியே பழகிய உதடுகளில்
பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘
#வாரிக்கையன்
எல்லா மொழியும்
தொலைந்த பிறகு;
எல்லா சொல்லும்
அழிந்த பிறகு;
புது உயிர் முகிழ்ந்து
புது கடல் விரிந்து;
புது மழை அவிழ்ந்து
புது பூமி தொடங்கட்டும் இதில்
"உன்ன பாக்கணும் போல இருக்கு"
#வாரிக்கையன்