Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏
Wishing everyone a joyful start to the season! Happy Baisakhi, Bohag Bihu, Poila Baisakh, Pana Sankranti, Vishu, Mesadi and Puthandu. May this spring bring happiness and new beginnings.
*நிம்மதி வேண்டுமா? எச்சரிக்கை வேண்டுமா? 2026-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்!*
தமிழ் வருடமான "விசுவாவசு" நிறைவடைந்து "பராபவ" மலர உள்ளது. தமிழ் பஞ்சாங்கத்தில் சுழற்சி முறையில் 60 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் பராபவ ஆண்டானது 40 வது ஆண்டு எனலாம்.
14.4.2026 சித்திரை முதல் தேதி, செவ்வாய்க்கிழமை சதய நட்சத்திரம், ரிஷப லக்கினத்தில், காலை 8.46க்கு சூாியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் மங்களகரமான பராபவ பிறக்கிறது.
கடந்த ஆண்டில் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்திவிட்டு நம்மைவிட்டு செல்கிறது. அதில் தற்போதைய போா் சம்பவமும் அடங்கும்.
"பராபவ ஆண்டின் வெண்பா"
"மிக்க பராபவத்தின்மேதினியிற்
பின் மழையாம்
தக்க பசைக்கடழைக்குமே இது பலிக்காது நான்கு வகைப்பல்லுயிா்க்கும் துன்பம் கல்லிக்காதனவே கருது"
பாடலுக்கான விளக்கம்:
பருவமழை சற்று தாமதமாக வந்தாலும், பருவம் தவறிய வெயில் மழை வரலாம். கால் நடைகளுக்கு எந்த குறையும் வராது.
பால் உற்பத்தி அதிகமாகும். விவசாயம் சாா்ந்த தொழில்கள் மேன்மையாகும். மக்கள் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சில வாழ்வாதார சவால்களை சந்திக்க நேரலாம்.
பொதுவாக தொடக்க மாதங்களில் பொது மக்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க நேரலாம், நவம்பர் மாத வாக்கில் நிலைமை சீராகலாம். உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்.
மத்திய கிழக்கில் இருந்துவரும் போா் கொஞ்சம் தணிவதுபோல இருந்தாலும் நீடிக்க வாய்ப்புகளே உள்ளது. மக்கள் வீண் செலவுகளை குறைத்து சேமிப்பின் முக்கியத்துவம் உணர்வது நல்லது. இணைய வழிவர்த்தகங்கள், மோசடிகள், பணம் ஏமாற்றம், பல்வேறு மோசடிகள் நிறையவே இருக்கும்.
அரசுத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஏனைய துறைகளிலும், நவீன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதுப்புது நோய்கள், வைரஸ் தாக்குதல்கள், அதிகம் பரவிட வாய்ப்புகள் உண்டு. இறைவழிபாடு ஆண்மிக நாட்டம் அதிகமாகும்.
மருத்துவதுறையில் மேலும் முன்னேற்றம் வரலாம், வரம்பு மீறிய வாழ்க்கை பயணங்கள் நிறையவே வரலாம்.
இந்த வருடம் ராஜாவாக குரு பகவானே வருவதால் ஆன்மிகம் தழைத்தோங்கும்.
பூரம், பூராடம், பரணி, மகம் 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் சனிக்கிமைகளில் பிறந்தவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. விலைவாசிகள் ஏற்றம் வரத்தான் செய்யும்.
பகிர்வு வேதசத்சங்கம்
மனித மனங்களில் நயவஞ்சகம் பெறாமை எண்ணம் அதிக அளவில் ஏற்படும். அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழல் உருவாக வாய்ப்புகளே அதிகம். வரலாம். அமைதி இல்லாசூழல் வரவும் வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாகவே ஆண்டுகள் எப்படி பிறந்தாலும் நமது மனதில் நோ்மறை சிந்தனைகள், நல்ல ஒழுக்கம், உயரிய எண்ணம், தெய்வ வழிபாடு, யாருக்கும் துன்பம் தராத நல்ல குணம், மனசாட்சிக்கு பயப்படுதல் வஞ்சகம், சூழ்ச்சி தவிர்த்தல் பொியவர்களை மதித்தல்," சகோதர சகோதரிகள் ஒற்றுமை, நல்ல நட்புகளின் சோ்க்கை, தான தர்மங்கள் மேற்கொள்ளுதல், போன்ற நல்ல குணங்களை கடைபிடித்து வந்தாலே இந்த ஆண்டு மட்டுமல்ல எல்லா ஆண்டுகளும் நமக்கு பலவகையிலும் பல நன்மைகளை தரும் என்பதை நம்புவோமாக!
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட, இறைவனை வேண்டி இந்த புதிய ஆண்டினை இருகரம் கூப்பி வரவேற்போமாக! பராபவ ஆண்டே வருக, பஞ்சமில்லா, பகைமையில்லா, ஆண்டாக மலர்க!
Winning the World Cup twice in a row, the first time any team has done so in the T20 format. Totally deserving and rightful winners of the trophy.
What a fantastic performance by our team and a special brand of cricket on display.
Well done, Team India. Jai Hind! 🇮🇳🏆