காவல் நிலையத்தில் என்ன நடந்தது?
அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்?
தமிழக அரசே, பதில் சொல்
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த எளிய மனிதர் அய்யா பரமசிவம் அவர்கள், சிந்தாமணி காவல் நிலைய அதிகாரிகளாலும் காவலர்களாலும் கொடூரமாக தாக்கப்பட்டு, மண்டையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வரும் தகவல்கள், அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரத்தையும் ஏற்படுத்துகின்றன.
வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன் மனைவி அய்யம்மாளுடன் நியாயம் கேட்டு காவல் நிலையத்தை நாடிய பரமசிவம் அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலால் தலையில் பலத்த இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், மருத்துவமனைக்கே சென்று மிரட்டி கட்டாய வெளியேற்றம் செய்ய மிரட்டப்பட்டதோடு, வெளியே சொன்னால் கஞ்சா வழக்கு போட்டு குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என மிரட்டியுள்ளனர்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிந்தாமணி காவல்துறையினரே காரணம் என்று உயிருக்குப் போராடிய நிலையிலும் பரமசிவம் அவர்கள் பதிவு செய்த மரண வாக்குமூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்குகிறது.
காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறையை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், சிந்தாமணி காவல்நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யவும் ஆணையிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கை நீர்த்துப்போகச் செய்ய காவல்துறை தரப்பில் ஆதாரங்களை அழிக்கும் வேலைகள் முடுக்கிவிடப்படலாம் என்ற அச்சம் எழுகிறது.
காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாக மாறுவது மக்களாட்சித் தத்துவத்திற்கே விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். எளிய உழைக்கும் மக்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது அதிகாரத் திமிரோடு நடத்தப்படும் இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அய்யா பரமசிவம் அவர்களை அடித்துச் சித்திரவதை செய்து படுகொலைக்குக் காரணமான, சம்பந்தப்பட்ட அனைத்துக் காவலர்களையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
குடும்பத்தின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரமசிவம் அவர்களின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாக ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.
அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அவரது மனைவி அய்யம்மாள் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் மாற்றப்படாமல், அழிக்கப்படாமல் வெளிப்படையான நீதி விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்.
எளிய மக்களின் உயிரோடு விளையாடும் காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றாமல், தகுந்த விசாரணைகளையும் நடவடிக்கைகளையும், சட்டப்படியான உரிய தண்டனைகளையும் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி.
#JusticeForParamasivam
#StopPoliceBrutality
#tamil
#பரமசிவத்திற்கு_நீதிவேண்டும்
#காவல்துறை_அத்துமீறலை_தடுத்துநிறுத்து
@sunnewstamil அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வைத்து கர்நாடக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் சுட்டுக் கொண்ட வனத்துறை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்
பதவியேற்ற 20 நாளில் போதைப் பொருட்கள் பறிமுதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வயது வித்தியாசமின்றி, ஆளும் கட்சியினரும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வீதிக்கு வீதி விற்பனை, அருகில் மதுக்கடைகள், கள்ளச்சாராய விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதால், சமூகத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்த்து தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உள்ளது.
தமிழக முதல்வர் நேற்று வீதிக்கு வீதி கஞ்சா விற்பனைக்கு கடந்த திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம்: 62 வயதான மணி என்பவர், 12 வயது உறவுக்கார சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதே பகுதியில், எம்.ஜி.ஆர். நகரில் 59 வயதான வரதராஜன் என்பவர், 3 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். உறவினர்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல்: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர், ஒரு இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராமநாதபுரம் அருகே தனியார் விடுதியில் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம்: ராஜா என்பவர் போதையில் தன் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்: செங்கல் சூளையில் பணியாற்றும் 50 வயதான சங்கர், 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தலைமைச் செயலகம் அருகே, பைக்கில் செல்லும் ரவுடி இடுப்பில் பட்டாகத்தியை செருகிக்கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான்: அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பிரபாகரன், பேருந்தை இயக்கியபோது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தனுஷ்கோடி சாலையை மறித்து தாக்கிய சம்பவம் நடைபெற்றது.
சென்னை தண்டையார்பேட்டை: கஞ்சா விற்பனைக்கு எதிராகப் புகார் அளித்த விஷ்ணு என்பவர், கஞ்சா கும்பலால் சுத்தியல், அம்மிக்கல் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
2021 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 1,07,000 கிலோ கஞ்சா, 3,21,000 போதை மாத்திரைகள், 1,223 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 2025-ம் ஆண்டு 2,362 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2025 ஜூன் வரை 4,889 வழக்குகளில் 3,493 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
கடந்த ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக 27,000 போக்ஸோ வழக்குகள் உள்பட மொத்தம் 62,000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், போதைப் பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் அமைக்க உத்தரவிட்டார். ஆனாலும், இந்த ஆட்சியிலும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாலியல் சீண்டல், கொலை, அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, பதவியேற்ற 20 நாளில் எவ்வளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன? போதை விற்பனையாளர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தமிழக அரசு உடனடியாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது.
நெய்வேலி: என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி மக்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தென்குத்து கிராமத்தில் உள்ள கல்குவாரி இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதன் உரிமையாளரிடமிருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. அதிகாரிகள் வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே, நேற்று காலை தென்குத்து கிராமத்தில் காவல்துறை பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் ஊருக்கு அருகில் 20 மீட்டர் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியைத் தொடங்கினர். இதற்கு தென்குத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடலூர் - ஆபத்தாரணபுரம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 15,000 ஏக்கர் நிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது. அந்த நிலங்களில் முதலில் நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும். புதிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தக் கூடாது.
தமிழர்களின் நிலங்களைப் பறித்து நடத்தப்படும் இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வழங்காமல் புறக்கணித்துவிட்டு, வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அதிக அளவில் பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. பணியின் பாதிப்பால் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) செய்து வருகின்றனர்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2023-2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், நெய்வேலி அருகே வடக்குவெள்ளூர் கிராமத்தில் குடிநீரில் பாதரசம் (Mercury) அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. என்.எல்.சி.யின் தெர்மல் பவர் ஸ்டேஷனில் நிலக்கரி எரிக்கும்போது வெளியேறும் பறக்கும் சாம்பல் மழைநீரில் கலந்து நீர் நிலைகளுக்குச் செல்வதாலும், சுரங்க நீர் வெளியேற்றத்தாலும் பாதரச மாசு ஏற்படுகிறது. இது நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல், கருவுறுதல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. பார்வைக் கோளாறு, நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களை கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே, மத்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் புதிதாக நிலம் கையகப்படுத்த முன்வரக் கூடாது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தபோது “மக்களின் விருப்பத்திற்கு மாறாக விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம்” என வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல் என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் மக்களின் நிலங்களையும் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்த மாட்டோம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பா?
தமிழ்நாட்டின் மரபுகள் மீறப்படுவது ஏன்?
தமிழக அரசின் புதிய பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல், பண்பாட்டு மற்றும் அரசு மரபுகளில், எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும்.
ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், இந்தப் பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
உலகின் தொன்மையான மொழி, மனிதகுலத்தின் முதன்மொழி, பல்வேறு தேசிய இனங்களின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாயானமொழி, ஆயிரமாயிரமாண்டு நாகரிகத்தின் அடையாளமான நமது தாய்மொழி தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், ஆளுநர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், தாய்மொழி தமிழைப் பின்தள்ளியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். அதோடு, தமிழ்நாட்டின் நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலாவதாகத் திணிக்கப்பட்டு இசைத்ததும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல. அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும். மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும்.
அதோடு, இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடர்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
#tngovt
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4765 டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகிறது. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் 4 இடங்களில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த சந்து மதுக்கடைகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து சூறையாடியுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்கு குடிநோயாளியான கணவருக்காக மட்டுமல்ல, குடி பழக்கத்திற்கு தன் மகன் அடிமையாகிவிடக்கூடாது என்ற அச்சமாக இருக்கலாம். பெண்களின் எழுச்சியை அலட்சியப்படுத்தாமல் கள்ள வணிகத்தை தடுக்கவேண்டும். மேலும் படிப்படியாக அரசு மதுபானக்கடைகளை குறைத்தும், கள்ள வணிகத்தை தடுத்தால்தான் அமைய உள்ள புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என கடந்த மாதம் 28ம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தேன்.
இதற்கிடையே நேற்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பனமரத்துப்பட்டி, மணியனூர் அருகில் காட்டு வளவு மலை பகுதியில் 16 வயதிலிருந்து 19 வயதுடைய பீகார் மாநில சிறுவன் உட்பட 3 பேர் கஞ்சாவுடன் மதுவையும் அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 19வயதான கோகுல் என்பவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து போதை தலைக்கேறிய நிலையில் பார்த்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.கொல்லப்பட்ட கோகுலில் உடல். சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதை மனிதனின் சிந்தனையை மழுங்கடித்து மிருகத்தனத்தை உருவாக்கி சக மனிதனை கொன்று அதை வீடியோ எடுத்து கொண்டாடும் நிலைக்கு தள்ளும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு அக்கடைகளை 2 வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
717 மதுபானக்கடைகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி, தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஆண்டுதோறும் நீட் தேர்வில் முறைகேடு; வணிக மயமான
இத்தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக
ரத்து செய்யவேண்டும்.
நடப்பு (2026—27) ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 80%க்கும் கூடுதலான கேள்விகள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே இராஜஸ்தான் மாநிலத்தில் வெளியாகியதாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவம் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தில் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அலட்சியம் காட்டுவதை ஏற்கவே முடியாது. .
தேர்வுக்கு முன்பாக சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் மூலம் கேள்விகள் பரவியதாகவும் கூறப்படுகிறது இது தொடர்பாக 13 பேரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நீட் வினாக்கள் கசிந்ததை தேசிய தேர்வு முகமையும் மறுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஏதேனும் ஒரு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், மருத்துவக் கல்வி அனைவருக்கும் தரமான கிடைக்கவும்தான் நீட் தேர்வின் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் இந்நோக்கம் நிறைவேறவே இல்லை. மருத்துவ கல்விக்கான நீட் தேர்வே தற்போது வணிகமாகிவிட்டது. இதனால் சாமானியனின் குழந்தைகள் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பில் தற்கொலை நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுகளுக்கான பயிற்சி வணிகமாகி விட்டது. அதனால் மருத்துவப் படிப்பு சாமானியர்களுக்கு கிடைப்பதுல்லை. மேலும் நீட் அச்சத்தால் மாணவர்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். மேலும் நீட் தேர்வு கேள்விகள் முறைகேடாக வெளியானது தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியிறுத்துகிறேன்.
@TamilTheHindu தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்க வேல்முருகன் அவர்களின் ஆதரவு மிக அவசியம். அவர் கோரும் 6 இடங்களை ஒதுக்குவது திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க உதவும். இது வெறும் இடப் பங்கீடு அல்ல, வெற்றிக்கான வியூகம்
@TamilTheHindu உழைப்பிற்கான அங்கீகாரம்
"தவாக வெறும் வட மாவட்ட கட்சி மட்டுமல்ல, தென் தமிழகத்திலும் தனது கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு மக்கள் இயக்கம். 6 சட்டமன்றத் தொகுதிகள் என்பது அண்ணன் வேல்முருகன் அவர்களின் கடந்த 5 ஆண்டுகால இடைவிடாத களப்பணிக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம். போராளிக்கு உரிய
@TamilTheHindu "திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் வேல்முருகன் அவர்களின் பங்கு அபாரமானது. அந்த உழைப்பிற்குப் பரிசாக 6 சட்டமன்றத் தொகுதிகளைத் தலைமை தாராளமாக ஒதுக்கலாம். அது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்