தேவைப்படும்போது அறிவையும்,
தேவையற்ற போது மௌனத்தையும்,
சமநிலையில் பயன்படுத்த தெரிந்தால்...
வாழ்க்கையில் எதையும் தேட வேண்டிய
அவசியம் இருக்காது..!
🙏🌹 இனிய
காலை🙏🌹
இதுவரை வாழ்ந்த வாழ்வை
அழிக்கவும்
முடியாது..
இனி வாழப்போகும் வாழ்வை
அறியவும்
முடியாது..
கற்றுக்கொண்ட பாடங்கள் தான் வாழ்க்கையை கடக்க உதவும்..
🙏🏽🌹 இனிய
காலை 🙏🏽🌹
இன்றைய ஊக்கப் பாடம்
கழுகைத் தாக்கத் துணியும் பறவைகளில் ஒன்று காகம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
அது கழுகின் முதுகில் அமர்ந்து கழுகின் கழுத்தைக் கொத்துகிறது. ஆனாலும், கழுகு பதிலளிக்காது அல்லது காக்கையுடன் திரும்ப சண்டையிடாது. அது எப்போதும் காக்கையுடன் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதில்லை. அது தன் இறக்கைகளை விரித்து வானத்தில் உயரப் பறக்கத் தொடங்குகிறது.
உயரம் செல்லச் செல்ல, காக்கை சுவாசிக்க முடியாமல் திணறுகிறது. மேலும் உயரம் சென்றவுடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் காக்கை கீழே விழுகிறது. கழுகு தன் வழியில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நீங்கள் எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளிலும் பதிலளிக்க வேண்டியது அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களை நோக்கி வைக்கப்படும் அனைத்து விமர்சகர்களுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டிய தேவை அல்ல. சில நேரங்களில் உங்கள் தரத்தை உயர்த்தினால், அவை தாமாக காணாமல் போய் விடும்.! 'காக்கைகளுடன்' நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்.
உங்களுக்கு தொந்தரவு கொடுப்பவற்றை, சமாளிக்க உங்கள் உயரத்தை அதிகப்படுத்துங்கள். அவை மறைந்துவிடும். எதிரி உன் முதுகில் அமர்ந்து உன் கழுத்தைக் கடிக்கலாம்.. ஆனால் எப்பொழுதும் ஒன்றை நினைவில் வையுங்கள்: "பந்தயம் வேகமானவர்களுக்கு அல்ல, வலிமையானவர்களுக்கு."
எதிரிகள் உங்களைக் குத்திக் கொல்ல முடியாத உயரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் அன்பர்களே.. வாழ்த்துக்கள்.
நல்ல மனிதனாக இரு...
ஆனால்,
அதை உலகிற்கு நிரூபிக்க
உன் வாழ்நாளை வீணாக்காதே.
சூரியன்
தான் ஒளி தருகிறேன் என்று
ஒருநாளும் சொல்லியதில்லை...
நதி
தான் தாகம் தீர்க்கிறேன் என்று
பெருமை பேசியதில்லை...
மரம்
தான் நிழல் தருகிறேன் என்று
பறைசாற்றியதில்லை...
அப்படியே,
உன் நற்குணமும்
விளக்கங்களால் அல்ல,
வாழ்க்கையால் அறியப்படட்டும்.
ஏனெனில்,
உண்மையான மனிதர்களை
வார்த்தைகள் அறிமுகப்படுத்தாது,
காலம்தான் உலகிற்கு அறிமுகப்படுத்தும்.
உங்கள் நற்பெயரை வேண்டுமென்றே கெடுத்தவர்களுடனும், உங்கள் மீது தவறான பழி சுமத்தியவர்களுடனும் சமாதானம் என்பது சாத்தியமற்றது.
ஏனெனில், பாம்புகள் தங்கள் தோலை உரித்து மாற்றினாலும், அவற்றின் நச்சுப்பற்களில் விஷம் அப்படியேதான் இருக்கும். சில காயங்களை வெறும் மன்னிப்பால் மட்டும் சரிசெய்துவிட முடியாது; அதேபோல, ஒருமுறை தகர்க்கப்பட்ட சில எல்லைகளை மீண்டும் பழையபடி கட்டியெழுப்பவே முடியாது. உங்கள் மன அமைதிக்காக வேண்டுமானால் அவர்களை மன்னிக்கலாம்; ஆனால், உங்கள் மதிப்பை நன்கு அறிந்திருந்தும் உங்களைக் காயப்படுத்தத் துணிந்தவர்களிடம் நல்ல உறவை எதிர்பார்க்க முடியாது.
இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இன்னும் 100 ஆண்டுகளில் அதாவது 2123 - ல் நாம் அனைவரும், நம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டிருப்போம்.
கட்டி எழுப்புவதற்கு நாம் கடினமாகப் போராடிய நம் வீடுகளில் அந்நியர்கள் வாழ்வார்கள், இன்று நம்மிடம் உள்ள அனைத்தையும் வேறு யாரோ சொந்தமாக்கிக் கொள்வார்கள். நமது சொத்துக்கள் அனைத்தும் நமதென்று தெரியப்படாதவைகளாக இருக்கும், அதில் நாம் பெரும் கனவுடன், பெரும் தொகையைச் செலவழித்து வாங்கிய கார் உட்பட, ஒருவேளை அந்த கார் மக்கிப்போய் ஸ்கிராப்பாக கூட இருக்கும்.
நாம் யார் என்பதை நம் சந்ததியினர் அறிய மாட்டார்கள், நம்மை நினைவில் கொள்ள மாட்டார்கள். நம்மில் எத்தனை பேருக்கு தாத்தாவின் அப்பாவை தெரியும்?
நாம் இறந்த பிறகு இன்னும் சில வருடங்கள் நினைவில் இருப்போம், பிறகு யாரோ ஒருவரது புத்தக அலமாரியில் வெறும் உருவப்படமாக மட்டுமே இருப்போம்,, சில வருடங்கள் கழித்து நமது வரலாறு, புகைப்படங்கள் மற்றும் செயல்கள் காலத்தின் போக்கில் மறைந்துவிடும். நினைவுகளாக கூட இருக்க மாட்டோம்.
இந்த எண்ணங்களை பகுப்பாய்வு செய்ய ஒரு நாள் இடைநிறுத்தப்பட்டால், இங்கு நாம் விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற கனவு எவ்வளவு அறியாமை மற்றும் பலவீனமானது என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
இதைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்க முடிந்தால், நிச்சயமாக நமது அணுகுமுறைகள், நமது எண்ணங்கள் மாறும், நாம் புதிய வித்தியாசமான மனிதர்களாக இருப்போம்.
எப்பொழுதும் தேவைக்கு அதிகமாக இருப்பதால், இந்த வாழ்க்கையில் உண்மையில் மதிப்புமிக்கவைகளுக்கு நேரமில்லை. நாம் இதுவரை நடக்காத நடைகள், நாம் கொடுக்காத இந்த அணைப்புகள், நம் குழந்தைகளுக்கும் நம் அன்புக்குரியவர்களுக்குமான முத்தங்கள், நேரமில்லாமல் தவற விட்ட அற்புத வீட்டு நிகழ்வுகள். நகைச்சுவைகளை பரிமாறி வாழவும் அனுபவிக்கவும் இதையெல்லாம் மாற்றுவோம். அவை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டிய மிக அழகான தருணங்களாக இருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அவை நம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பும்.
ஆனால் நாம் பேராசையுடனும், சகிப்பு தன்மையற்ற மனப்பான்மையாலும் அதை நாளுக்கு நாள் வீணாக்குகிறோம்.
இன்றைய நாளை சிறப்பாக மாற்றுங்கள். புன்னகையுங்கள். புத்துணர்வுடன் இருங்கள். நேர்மறையாக இருங்கள்.. உதவுங்கள்..
அப்போது பிரபஞ்சம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் கொடுக்கும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே..!
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..
40 வயதிற்குள் நீங்கள் இதை உணர்ந்து, புரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம்:
1. வேறு ஒருவர் 9-5 வேலையில் உங்களை விட 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார், ஏனெனில் அவர் தங்கள் வேலையில் அதிக கவனத்தையும்(INTEREST), ஆர்வத்தையும்(PASSION) கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
2. கவனச்சிதறல் வெற்றியின் மிகப்பெரிய எதிரி. இது உங்கள் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.
3. வாழ்க்கையில் நீங்கள் இருக்க விரும்பும் இடத்தில் இல்லாதவர்களிடமிருந்து நீங்கள் ஆலோசனையைப் பெறக்கூடாது.
4. உங்கள் பிரச்சனைகளை காப்பாற்ற யாரும் வருவதில்லை. உங்கள் வாழ்க்கை 100% உங்கள் பொறுப்பு.
5. உங்களுக்கு 100 மோட்டிவேஷன் புத்தகங்கள் தேவையில்லை, உங்களுக்கு தேவையானது செயல் மற்றும் சுய ஒழுக்கம் மட்டுமே.
6. நீங்கள் ஒரு குறிப்பிட்ட திறனை (அதாவது. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்) கற்க கல்லூரிக்குச் சென்றாலும், வெளியே வந்து பணம் சம்பாதிக்க விற்பனைத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
7. யாரும் உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே தயங்கி, தயங்கி வெட்கப்படுவதை நிறுத்துங்கள், வெளியே சென்று உங்கள் வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
8. உங்களை விட புத்திசாலியான ஒருவரை நீங்கள் கண்டால், அவர்களுடன் வேலை செய்யுங்கள், போட்டி போடாதீர்கள்.
9. புகைபிடிப்பதால் உங்கள் வாழ்க்கையில் எந்த நன்மையையும் இல்லை.. இந்த பழக்கம் உங்கள் சிந்தனையை பாழாக்கும் அதோடு உங்கள் கவனத் திறனை குறைக்கும்.
10. COMFORT ZONE என்பது மனச்சோர்வுக்கான மிக மோசமான போதை. அதற்கு அடிமையாகி விடாதீர்கள். ரிஸ்க் எடுங்கள்.
11. எதிரில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை விட அதிகமாக பேசாதீர்கள். உங்கள் தனியுரிமையை நீங்கள் முதலில் மதிக்க பழகுங்கள்.
12. மதுவை எந்த சூழ்நிலையிலும் தவிர்த்திடுங்கள். உங்கள் உணர்வுகளை இழந்து முட்டாள்தனமாக செயல்படுவதை விட மோசமானது எதுவுமில்லை.
13. உங்கள் தரநிலைகளை(STANDARDS) உயர்வாக வைத்திருங்கள் உடனடி தேவைக்காக ஏதாவது கிடைக்கும் என்பதால் அதைத் குறைத்து விடாதீர்கள்..
14. நீங்கள் பிறந்த குடும்பத்தை போலவே நீங்கள் உருவாக்கும் குடும்பம் மிகவும் முக்கியமானது.
15. 99.99% மனநலப் பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள தனிப்பட்ட முறையில் மனதளவில் தயாராக இருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே
உங்கள் ஆளுமைத் தன்மையை (Aura) மேம்படுத்துவது எப்படி?
1. வாயை மூடியபடி புன்னகை செய்யுங்கள்.
2. உங்கள் திட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்; முடிவுகளைக் காட்டுங்கள்.
3. பொது இடங்களில் புத்தகம் படியுங்கள்.
4. 'சரி' என்று சொல்வதற்குப் பதிலாக, தலையை அசைத்து சம்மதம் தெரிவியுங்கள்.
5. உங்களைப் பற்றி அதிகமாகப் பேசாதீர்கள்.
6. எப்போதும் மற்றவர்களுக்குக் கிடைப்பவராக (எளிதில் அணுகக்கூடியவராக) இருக்காதீர்கள்.
7. உறுதியான பிடியுடன் கை குலுக்குங்கள்.
மனிதனை நரகத்திற்கு அழைத்துச் செல்வது எமன் அல்ல. அவனுடைய பேராசை, அகந்தை, பொய், அநீதி, கோபம், பொறாமை போன்ற குணங்கள் தான்.
அதேபோல் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வது அவனுடைய சத்தியம், தர்மம், கருணை, பக்தி மற்றும் தன்னலமற்ற வாழ்க்கை.
- காகபுஷுண்டி
நண்பர்களே...இந்த விதிகளை மீறாதீர்கள்:
1. கோபமாக இருக்கும்போது - கத்துவதையோ அல்லது பொருட்களை உடைப்பதையோ தவிர்த்து, அமைதியாக இருந்து சிந்தியுங்கள்.
2. அதிர்ஷ்டம் வரும்போது - தற்பெருமை பேசாதீர்கள்.
3. சிக்கல்கள் ஏற்படும்போது - பதற்றமடையாதீர்கள்.
4. ஒரு குழுவில் இருக்கும்போது - உங்கள் நடத்தையில் கவனமாக இருங்கள்.
5. நண்பர்களுடன் இருக்கும்போது - பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
6. கடினமான சூழலில் - கண்டவர்களிடமும் குறை கூறாதீர்கள்.
7. தனிமையில் இருக்கும்போது - உங்கள் எண்ணங்களைக் கண்காணியுங்கள்.
8. உயர்ந்த நிலையில் இருக்கும்போது - தாழ்ந்த நிலையில் இருந்தபோது நீங்கள் யார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
9. தவறு செய்யும்போது - அதை ஒப்புக்கொள்ளும் துணிச்சலைக் கொண்டிருங்கள்.