@VelmuruganTVK ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்ல; நமது இரத்தச் சொந்தங்கள்!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள்.
@VelmuruganTVK காணாமல் போன உறவுகளைத் தேடி இன்னும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் காயங்களில் மேலும் காயம் ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது
@VelmuruganTVK செம்மணி புதைகுழிகளின் உண்மைகள் வெளிவர வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் போராடி வருகின்றனர்.
அந்த வலியோடு வாழும் நமது சொந்தங்களை தாய்த் தமிழகத்தில் அவமதிப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்
@VelmuruganTVK இனப்படுகொலையின் காயங்களோடும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியோடும் வாழும் ஈழத்தமிழர்கள் மீது அதிகாரத்தின் அத்துமீறல் நிகழ்வது கடும் கண்டனத்திற்குரியது.
@VelmuruganTVK மண்டபம் முகாமில் நடைபெற்றதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இனப்படுகொலையின் காயங்களோடு வாழும் ஈழத்தமிழர்களை அவமதிப்பதா?
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகள். நமது இரத்தச் சொந்தங்கள். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரத்தால் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து, தாய்த் தமிழகத்தில் அடைக்கலம் தேடி வாழ்ந்து வருகின்றனர்.
இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடியும், நீதிக்காகக் குரல் கொடுத்தும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். செம்மணி மனிதப் புதைகுழிகளின் உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றளவும் நாமும், நமது ஈழச் சொந்தங்களும் காத்திருக்கிறோம்.
இனப்படுகொலையால் ஏற்பட்ட ஆழமான காயங்களில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும் நமது இரத்தச் சொந்தங்கள், தங்கள் தொப்புள்கொடி உறவுகளின் தாயகமான தமிழ்நாட்டிலாவது கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியாதா?
நீதிக்காக உலகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் நமது சொந்தங்கள், தாய்த் தமிழகத்திலும் அவமானத்தையும் அவமரியாதையையும் எதிர்கொள்ள வேண்டுமா?
மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை, அரசு அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் செருப்பால் அடிப்பேன் என்று பேசியதோடு, கன்னத்திலும் அறைந்து உள்ளதாக செய்தி ஊடகங்களில் சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதையே ஆதாரமாக வைத்து, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதோடு, கைது செய்து கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முகாம்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இனப்படுகொலையின் காயங்களோடும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியோடும் நீதி தேடும் நமது இரத்தச் சொந்தங்களைத் தாய்த் தமிழகத்திலேயே அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
நமது தொப்புள்கொடி உறவுகளின் கண்ணியத்தை அரசு வேடிக்கைப் பார்க்குமானால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நேரடியாகக் களமிறங்கி தொடர் சனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#ஈழத்தமிழர்உரிமை
#மண்டபம்முகாம்
#tamil
#JusticeForEelamTamils
#MandapamCamp
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு!
தமிழுலகம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
எளிய, இனிய பேச்சின் மூலம் தமிழின் ஆழத்தையும் அழகையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர் திரு சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்ற மேடையை வெறும் விவாதக் களமாக இல்லாமல், தமிழையும், சிந்தனையையும், நகைச்சுவையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் அறிவுக் களமாக மாற்றியதில் அவரது பங்கு அளப்பரியது.
பல தலைமுறையினரிடம் தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய அவரது குரலும், நகைச்சுவை கலந்த கருத்துச் செறிவும் இனி நினைவுகளாக மட்டுமே நிலைத்திருக்கும் என்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
அவரது மறைவு தமிழுக்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
@VelmuruganTVK தமிழ்நாட்டின் தலைமை நிர்வாக வளாகம் — தமிழர் அடையாளத்தின் அடையாளமாக இருக்க வேண்டும்!
வெறும் கான்கிரீட் கட்டிடமாக அல்ல; தமிழர் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றை உலகறியச் செய்யும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைய வேண்டும்.
#தமிழர்_கட்டிடக்கலை#TamilArchitecture#TamilIdentity
@VelmuruganTVK பட்டினப்பாக்கம் தேர்வில் அவசரம் வேண்டாம்; ஆய்வு அவசியம்!
ஒரு பெரிய நிர்வாக வளாகத்தின் இடத்தேர்வு என்பது பல ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவு. நிபுணர் குழுவின் விரிவான ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
@VelmuruganTVK தமிழ்நாட்டின் நிர்வாகத் தலைமையகம் என்பது சாதாரண கட்டிடம் அல்ல. போக்குவரத்து, பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே இடத்தை இறுதி செய்ய வேண்டும். தேவையானால் பட்டினப்பாக்கம் இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
@VelmuruganTVK தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் எங்கே அமைய வேண்டும் என்பதை அவசரமாக முடிவு செய்யாதீர்கள்!
பல தலைமுறைகளின் நிர்வாகத் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டிய வளாகம் இது. இன்றைய இடநெருக்கடியை மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், எதிர்காலத் தேவைகளையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.
#
@VelmuruganTVK தமிழ்நாட்டின் முகமாக அமைய வேண்டிய தலைமைச் செயலகம், தமிழர் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது!
மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழல், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்யாமல் இடத்தை இறுதி செய்வது சரியான நிர்வாக முடிவாக இருக்காது.
#TamilArchitecture#Fisherfolk
@VelmuruganTVK கொத்தடிமைத் தொழிலாளர் முறையைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ள நிலையில், பழங்குடியின மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவது ஏன்? தேன்மொழி மரணத்தில் விரைவான, வெளிப்படையான விசாரணை வேண்டும்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்!
இடத்தேர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் என்பது வெறும் கட்டுமானத் திட்டம் அல்ல. அது தமிழகத்தின் நிர்வாகத் தலைமையகமாகவும், தமிழர் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் அமைய வேண்டிய ஒன்று.
அத்தகைய பெரும் திட்டத்திற்கு பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்வதற்கு முன், அந்தப் பகுதியின் தற்போதைய நிலையும் எதிர்காலத் தேவைகளும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் உருவானால் ஏற்படக்கூடிய போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்தத் தேவை உள்ளிட்டவற்றை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
அதேபோல், அப்பகுதியைச் சார்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல் மற்றும் பொதுமக்களின் அன்றாடப் பயன்பாடு பாதிக்கப்படாத வகையில் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
இது இன்றைய தேவைக்கான கட்டிடம் மட்டுமல்ல. நாளைய நிர்வாகத் தேவைகள், விரிவாக்கத்திற்கான இடவசதி, பொதுப்போக்குவரத்து, அவசரகாலச் சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு நீண்டகாலத் திட்டமிடல் அவசியம்.
மேலும், தமிழகத்தின் தலைமை நிர்வாக வளாகம் என்ற பெருமையைப் பெறும் கட்டிடம், தமிழர் கட்டிடக்கலை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை.
ஆனால், எங்கே அமைக்கப்படுகிறது என்பதிலும், எப்படி அமைக்கப்படுகிறது என்பதிலும் மக்களின் நலன் முதன்மையாக இருக்க வேண்டும்.
எனவே, பட்டினப்பாக்கம் தொடர்பான அனைத்து சாதக பாதகங்களையும் நிபுணர் குழுவின் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, தேவையானால் மாற்று இடங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் நிர்வாகத்தின் முகமாக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் முகமாகவும் இருக்க வேண்டும்!
இதனை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு வெளிப்படையான, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#பட்டினப்பாக்கம் #தமிழர்_கட்டிடக்கலை
#TamilArchitecture #TamilIdentity
@VelmuruganTVK தேன்மொழி சம்பவம் உண்மையெனில், இது தனிப்பட்ட குற்றமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. இதுபோன்ற தொழிலாளர் சுரண்டல் எங்கு நடந்தாலும் கண்டறிந்து சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.
#EndBondedLabour#TribalJustice#TVK
@VelmuruganTVK ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுப்பது மனிதநேயமற்ற கொடுமை. குற்றச்சாட்டு உண்மையெனில், இதன் பின்னால் மறைந்திருக்கும் கொத்தடிமை முறையை அரசு வெளிக்கொண்டு வர வேண்டும். தேன்மொழி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி குரல் கொடுக்கும்