நாங்க ஒரு ப்ராஜக்ட் பண்ணிட்டு இருக்கோம். அதன் ஓனர் குடும்பம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். கட்டிட திறப்பு விழாவை தேர்தலை ஒட்டி வைக்க சொல்லி இருக்கிறார்கள். கண்டிப்பாக தவெகவுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
இந்த ஆர்வத்தை எல்லாம் இதற்கு முன்பாக நான் கேள்விப்பட்டதில்லை.
விஜய் பிளாக்ல டிக்கெட் வித்து கொள்ளையடித்தார் என்று திமுக அதிமுக ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள். சரி அது உங்க ரெண்டு கட்சி ஆட்சியில் தானே நடந்தது? அப்போ என்ன .. இருந்தீங்க என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? ஏன் இப்போ கூட பெரிய நடிகர்களின் படத்திற்காக மொத்த திரையரங்குகளையும் உதயநிதி போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் ஆக்கிரமித்து, அது ஒரு மொக்கை படமாக இருந்தாலும், அந்த படத்தை மட்டுமே மக்கள் பார்க்கும் படி கட்டாயப்படுத்துகிறார்களே. அதற்கு என்ன செய்தீர்கள்?
அதுவும் ஒரு படத்தின் நடிகர் நடிப்பதற்கு சம்பளம் வாங்குவதோடு அவருடைய வேலை முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு எந்த தியேட்டரில் எவ்வளவு ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று அவருக்கு என்ன கவலை? அந்த பணம் அந்த படத்தை வெளியிடும் உதயநிதி போன்ற தயாரிப்பாளர்களுக்கு தானே லாபம் கொடுக்கும். அப்போ இதற்கு உதயநிதி போன்ற தயாரிப்பாளர்கள் தானே பதில் சொல்லணும்..!
உடனே நீங்க விஜய்க்கு ஆதரவா? அணிலா ? அனகோண்டாவா? என்று ஒப்பாரி வைக்காதீர்கள். ஆட்சியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் செய்த தவறுகளை, தேர்தலில் இந்த கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தை பலவீனமாக்க போகிறார் என்பதற்காக கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் விஜய் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விக்கு உங்கள் மானசாட்சியை கேட்டு பதில் சொல்லுங்கள்.
வெளி மாநிலங்களில் நீர்நிலைகள் சீரமைக்கிறீர்கள், வெளி நாடுகளில் நீர்நிலைகள் சீரமைக்கிறீர்கள், ஏன் நம்ம ஊரில் நீர்நிலைகள் சீரமைக்கவில்லை என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள், என் பதிவுகளில் கேள்வி எழுப்புகிறார்கள், என் மீது கோபப்படுகிறார்கள்.
அதற்கு எல்லாம் ஒரே பதில் தான்.
என்னால் வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் சுலபமாக வேலைகள் பார்க்க முடிகிறது, காரணம் என்னை அங்கே வேலைகள் செய்ய அனுமதிக்கிறார்கள். இங்கே எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, என்னை வேலைகள் செய்ய விடுவதில்லை பல்வேறு காரணம் காட்டி. கிட்டத்தட்ட 50 நீர்நிலைகளுக்கு மேல் அனுமதி கிடைக்காமல், இந்த மழை காலத்திற்கு முன் பணிகள் செய்ய முடியாமல், இந்த மழையையும், ஆற்று நீரையும் சேமிக்க முடியாமல் போனது. அனுமதி கிடைத்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டிற்குள் மட்டும் 20 இடங்களிலாவது பணிகள் நடந்து கொண்டிருக்கும் என்பது தான் உண்மை!
💔
நான் டைம்ஸ் நவ் @TimesNow தொலைக்காட்சியின் இரவு 10 மணி விவாதத்தில் பங்கேற்றபோது விஜய் @actorvijay@TVKVijayHQ திருச்சி விமான நிலையத்திற்கு சென்று அங்கே பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற காட்சி காட்டப்பட்டது. அந்த நடையில் தொய்வு விஜயின் மனதின் ஆழத்தில் இருந்த சோகத்தை காட்டியது.
விஜய் பெரும் நடிகனாக இருக்கலாம், ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்களால் நடிக்க முடியாது. அந்த நடையின் தொய்வில் ஒரு மனிதத்தன்மை இருந்தது. இது ஒருபக்கம் இருக்கட்டும்.
விவாதம் முடிந்தவுடன் இரண்டு பேர் அழும் வீடியோ பார்த்தேன். இந்தப்பக்கம் @Anbil_Mahesh மகேஷ் பொய்யாமொழி, அந்தப்பக்கம் @V_Senthilbalaji செந்தில் பாலாஜி. ஒருவன் அழுவது போல நடித்து கொண்டிருந்தான். தலையை கவிழ்த்துக் கொண்டால் அழுகை என்று யாரோ அந்த நபரின் காதுகளில் கூறி இருக்க வேண்டும். இதயமற்ற அரக்கர்களின் நடிப்பு அழுகையை அதில் பார்க்க முடிந்தது.
உளவியல் சாத்திரம் அறிந்தவனாக கூறுகிறேன், அந்த இருவரில் ஒருவருக்கு கூட மனதின் எந்த மூலையிலும் சோகமில்லை. மாறாக ஒழிந்தான் விஜய் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அவர்களின் முகத்தின் எண்ண ஓட்டங்களில் வெளிப்பட்டது.
இது எனது முந்தைய கேள்விகளை கிட்டத்தட்ட உறுதியாக்குகிறது.
நடந்த சம்பவம் திமுகவின் திட்டமிட்ட சதி என்பதே எனது புரிதல்.
விஜயிடம் என்னால் தலைமை பண்பை பார்க்க முடியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு மனிதநேயம் கொண்ட மனிதன் அந்த மனிதனுக்குள் இருக்கிறான்.
#BeStrongVijay @CTR_Nirmalkumar
* இரவு நேரங்களில் மாநாடு, பிரச்சாரம் ஆகியவற்றை செய்தால்.. இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துதான் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களையும் மாலை ஆறு மணிக்கு முன்பே முடித்துக்கொண்டார். Indoor நிகழ்ச்சிகள் உட்பட.
* வார நாட்களில் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால்தான் சனி, ஞாயிறுகளில் பிரச்சார தேதிகளை அறிவித்தார்.
* தற்போது கரூரில்..ஒரே ஒருமுறை செய்த இரவுநேர பிரச்சாரம்.. பெரும் துயரில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
* சென்றமுறை... ஒரு ஊரில் பிரச்சாரம் செய்யுமிடத்திற்கு போய்ச்சேர மிகவும் தாமதம் ஆனதால்.. அந்நிகழ்வை ரத்து செய்தார்.
* இம்முறையும் அதேபோல ரத்து செய்துவிட்டு.. வேறொரு நாளில்.. பகல் நேரத்தில் கரூர் பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம்.
* ஆனால்.. மீண்டும் பிரச்சாரத்தை ரத்து செய்தால்... காலை முதல் இரவு 7 மணிவரை தன்னைக்காண காத்திருக்கும் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால்.. கரூர் சென்று இரவு 7.20 மணிக்கு பேசியுள்ளார்.
* இத்தனைமுறை அலர்ட் ஆக இருந்த விஜய்... இம்முறை அந்த எச்சரிக்கை உணர்வை மிஸ் செய்து விட்டார்.
* எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். கண்ட இடங்களில் ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும்.. பல ரசிகர்கள் கேட்கவில்லை. அத்தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
* உங்கள் தலைவர் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால்.. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களும் பொறுப்பு.
* தவெக கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வரவேண்டாம். கைக்குழந்தைகளை அழைத்து வரவேண்டாம். டிவி அல்லது யூட்யூப் நேரலையில் வீட்டிலிருந்து பாருங்கள் என ஒவ்வொரு முறையும் தவெக சார்பில் வேண்டுகோள் விடுத்தும்... அதை பொருட்படுத்தாமல் வருபவர்களை என்ன சொல்வது?
* உங்களுக்கு பிடித்த நடிகரை காணும் ஆவலில்.. பச்சிளம் குழந்தைகளையும் அழைத்து சென்று... அக்குழந்தைகளை பறிகொடுத்தது... உங்கள் தவறில்லையா?