கரூர் மேற்கு மாவட்டம்,வடக்கு நகரம்-மேற்கு பகுதி செயலாளர் திரு.கதிர்வேல் அவர்களின் இல்ல பூப்புனித நன்னீராட்டு விழா கரூர், வெங்கமேடு, அம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அம்மன் குலாலர் மண்டபத்தில் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.#CMJosephVijay@actorvijay@CMOTamilnadu@TVKVijayHQ
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுக்கு ஒரே நிறத்தில் புடவை அணிந்துவந்த தவெக பெண் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜயுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்!
#CMVijay#TVK#WomenMLAs
சட்டமன்றத்தில் இன்று தென்றலாகத் தொடங்கி புயலாகச் சீறிப்பாய்ந்த வெற்றித் தலைவரின் பதிலடி தீயசக்தியின் அடித்தளத்தையே தகர்த்து, பேரிடியாக அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்கள்
(05/09/2026, சனிக்கிழமை) மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆசியுடன்,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தோம்
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் அறிவு, ஆளுமை மற்றும் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கல்விப் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் போற்றப்படட்டும்!
இளம் தலைமுறையின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் 🙏
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரையாற்றியது மிகவும் அருமையாக இருந்தது.
எதிரிகளுக்கு எந்த மொழியில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி அனல் பறக்க பேசியிருக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசியதை கண்டு மூன்று தலைமுறை திமுக கூடாரமும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வரின் பதிலுரையில் அடி தாங்க முடியாமல் ஓடு ஓடு ஓடு ஓடு என ஓட்டம் எடுத்து ஓடி இருக்கிறது ஒப்பாரி முன்னேற்றக் கழகம்.
ஒரு பைலை திறந்ததுக்கே இந்த கதறல்னா இன்னும் ரெண்டு பைல திறந்தா ஒட்டு மொத்த திமுக கூடாரமும் ஆட்டம் கண்டு போகும் போல.
கவியரசர் கண்ணதாசன் வரிகளை குறிப்பிட்டு மாண்புமிகு அண்ணன் விஜய் அவர்கள் பேசியது களம் எட்டில் திமுகவை பொள பொளவென்று பொளந்து விட்டார் என்றே தோன்றுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் உரிமையையும், தேவைகளையும் அறிந்து நல்ல திட்டங்களை கொடுக்கிற இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் தான் என்பதை மாண்புமிகு முதல்வர் அண்ணன் விஜய் நிரூபித்திருக்கிறார். திமுகவுக்கான சாட்டையடி தொடரட்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் சரித்திரம் அதை நாளை சொல்லட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் (மண்டலம்–1) மற்றும் மணலி (மண்டலம்–2) மண்டலங்களில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
-
Under the guidance of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C.Joseph Vijay,
A review meeting was held with the concerned officials and department representatives regarding possible rain-related impacts and the precautionary measures to be undertaken in Tiruvottiyur (Zone–1) and Manali (Zone–2) of the Greater Chennai Corporation.
Officials were instructed to take all necessary precautionary measures on a priority basis to ensure the safety and well-being of the public.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay
"தரையில் அமர்ந்து திமுகவினரை முதலமைச்சர் விஜய் தான் தூக்கி விட்டார், தரையில் அமர்ந்த திமுக, தூக்கி விட்ட தவெக என்பது போல் அமைந்தது"
அமைச்சர் ராஜ்மோகன்
#CMVijay#MinisterRajmohan#TVK#DMK#News18TamilNadu
மக்களுக்கான முதல்வராக வலம் வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள்!
அரை நூற்றாண்டுக்கும் கீழே போவோம்…
ஆழமாகத் தோண்டுவோம்…
மறைக்கப்பட்ட உண்மைகள் ஒவ்வொன்றையும் வெளியில் கொண்டு வருவோம்!
மக்களை ஏமாற்றிக் கட்டமைக்கப்பட்ட அந்தப் போலிப் பிம்பமும், போலி பிராண்டும் இனி நிலைக்காது!
முதல்வர் அவர்களின் வழியில், நாங்களும் மக்களோடு கைகோர்த்து களத்தில் நிற்போம்!
உண்மையை வெளிக்கொண்டு வந்து,
அந்தப் போலிப் பிம்பத்தை மக்களுக்காக உடைத்தெறிவோம்!
நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டா வந்தீங்க? என்னை 'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன் - உணர்ச்சிவசத்துடன் கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
இன்று 7.9.26 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V சத்தியபாமா, எம்.எல்.ஏ. அவர்கள் நேரில் சந்தித்த தருணம்
#CMJosephVijay
"திமுக இருக்கிற இடத்தில்தான் தப்பு நடக்கும், தப்பு நடக்கிற இடத்தில்தான் திமுக இருக்கும், ஊழல் செய்ததில்லை என்று இதுவரை திமுகவினர் சொன்னதில்லை " - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்த மக்கள் முதல்வர் !!
பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் காக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.
பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்பதை இந்த நிலைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்!
இந்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu