ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
அருண் ஐபிஎஸ்க்கு எதிரான இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.
நீதிபதிகள் திரு ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி. ஆர் லட்சுமிநாராயணன் அவர்களுக்கு எனது மற்றும் எனது தாயின் நன்றிகள்.
Arun IPS has been summoned by the Madras High Court to appear on May 27 to Give Explanation for Passing Goondas Act against a real estate developer .
Back story by @SavukkuOfficial ‼️
They talk about their "Legacy." We talk about our "Reality."
Reality: We are still fighting for roads and water while they fight for power.After 50 years of the same two parties, we don't need more "promises."We need an Administrative Overhaul
Stand with TVK for a better TN
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.