ஒன்றிய அரசின் 2026ஆம் ஆண்டு திருநர் (உரிமைகள் பாதுகாப்புச்) சட்டத் திருத்த மசோதா, திருநர் மக்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்கும் ஆபத்தான முயற்சியாகும்.
குறிப்பாக, ஒருவரின் பாலினத்தைத் தானே நிர்ணயிக்கும் உரிமை, பாலின அடையாளத்தை ஒரு மருத்துவ நோயாகக் கருதுதல், திருநர் சமூகத்தை அவமானகரமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துதல், அடையாள ஆவணங்களை மாற்றுவதில் கடுமையான தடைகள், அரசு நலத்திட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட வாய்ப்பு போன்றவை அரசியலமைப்புக்கு மாறான இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் சமூகத்தில் திருநர்கள் மீது மேலும் பாகுபாடு உருவாக வாய்ப்புள்ளது.
இந்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது, தனியுரிமையை மீறுகிறது, மேலும் பல திருநர் அடையாளங்களைத் தவிர்க்கும் வகையில் குறுகிய வரையறையை முன்வைக்கிறது.
திருநர் சமூகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் மனநல வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், எந்தப் பொருத்தமான விவாதமும் இன்றி இந்த மசோதா ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண சட்டத் திருத்தம் அல்ல; மரியாதை, அடையாளம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றை மறுக்கும் திட்டமிட்ட முயற்சியாகும்.
திருநர் சமூகத்துடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் மற்றும் அரசியலமைப்பு உறுதியளிக்கும் சமத்துவமும், சுய அடையாள உரிமையையும் மதிக்க வேண்டும் எனத் திருநர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
@ikamalhaasan@maiamofficial
#KamalHaasan
#KamalHaasn_MP
#MakkalNeedhiMaiam
#Transgenderbill
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான இன்று,
அவர்தம் சம உரிமை கொள்கைகளையும் சிந்தனைகளையும் நினைவு கூர்வோம். தமிழ்நாடு என்ற பெயரை வழங்கி, ஆதிக்கத்தை அணைத்து, திராவிட விளக்கை ஏற்றிய
அண்ணாவின் பாதையில் பயணிப்போம்!
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#Anna
கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றுரைத்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவரை போற்றிய
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
#Remembering_Anna
#ANNA
.@maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி @ikamalhaasan அவர்கள், நம் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வாழ்த்தினார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கின்ற குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் வாழ்த்தைப் பெற்றதில் மகிழ்கிறோம். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் @Udhaystalin அவர்கள் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.