இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
ஸ்டாலின் தொடரட்டும் னு வாக்கு கேட்டு. அந்தக்கட்சித்தொண்டர்களின் உழைப்பில் சீட்டுகளை ஜெயித்தவர்களிடம் ரிசல்ட் வந்து 4 நாட்களில் எல்லாம் ஆதரவு கேட்பது அயோக்கியத்தனம். அதை நியாயப்படுத்துவது கேவலம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
#விருகம்பாக்கம் மற்றும் #தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களின் திரளான வரவேற்பிற்கு இடையே அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆளத் தெரியாத @mkstalin கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடு பட்டுவிட்டனர்.
“போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆவடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு *M. ராஜசிம்ம மகேந்திரா என்கின்ற அஸ்வின்* அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026
சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
#Vote4AIADMK#Epsfor2026
#விருதுநகர் மற்றும் #இராமநாதபுரம் மாவட்ட மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டதையே #சிவகாசி மற்றும் #பரமக்குடி நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உணர்த்துகின்றன.
முன்னதாக சிவகாசியில் சில இளம்பெண்கள் என்னை சந்தித்து ஒரு சட்டை ஒன்றை அளித்தனர். அந்த சட்டையில் அவர்கள் எழுதியிருந்த வாசகங்கள், ஐந்தாண்டு திமுக ஆட்சியில் அவர்கள் பட்ட வலிகளை, வேதனைகளை உணர்த்தின.
திரு. @mkstalin அவர்களே- தமிழ்நாட்டை, தமிழகப் பெண்களை எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் பார்த்தீர்களா?
பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தானே, உரிமைத் தொகை பெற முடியும்?
இதை எப்போதாவது உணர்ந்தீர்களா நீங்கள்?
சிறுமி முதல் மூதாட்டி வரை வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் பிற்போக்கு திமுக ஆட்சி இனியும் வேண்டுமா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்!
எனது சகோதரிகளே- அம்மா அவர்கள் எப்படி தாய் போல உங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்களோ, அதேபோல், விரைவில் அமையவுள்ள எனது தலைமையிலான @AIADMKOfficial அரசும் தமையனாக நின்று உங்களைக் காக்கும்! இது உறுதி!
#Vote4AIADMK 🌱
Warm greetings to the Jain community on Mahavir Jayanti.
Lord Mahavir’s teachings of non-violence, truth, and discipline continue to guide humanity toward peace and harmony.
On this auspicious day, let us reaffirm our commitment to these timeless values and work together to build a compassionate and united society.
#MahavirJayanti
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது!
தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?
மக்களே, மறந்துவிடாதீர்கள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொகுதி என்ற பெருமைக்குரிய #ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் அளித்த மகத்தான வரவேற்பிற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திமுக-வின் கூட்டணி வெற்றுக் கூட்டணி; திமுக வேட்பாளர் பட்டியல் வெற்றுப் பட்டியல்; நாளை அவர்கள் சொல்லப்போவது வெற்று வாக்குறுதிகள்!
ஆனால் @AIADMKOfficial கூட்டணி வெற்றிக் கூட்டணி;
நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்கள்;
நமது தேர்தல் அறிக்கை மக்களின் மனங்களில் சென்று வெற்றி அடைந்துவிட்டது.
அஇஅதிமுக பெறப்போகும் வரலாற்று வெற்றியை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு இணைந்து நானும் கழகத் துண்டை சுழற்றி, நாளை நமது நல்லாட்சி மலரப் போவதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#Vote4AIADMK 🌱
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால்
“எந்தப் பயனும் இல்லை”!
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி
எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !
#தமிழகம்_வாழவேண்டும் என்றால்,
#திமுக_வீழவேண்டும்!
#Vote4AIADMK
The decision of the Union Government under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl to reduce excise duty on petrol and diesel by ₹10 is a timely and welcome step.
At a time when the ongoing conflict in the Middle East, Iran and Israel has severely disrupted global oil supplies and driven crude prices sharply upward, this move reflects a clear commitment to protect the Indian people from international economic shocks. 
The reduction of excise duty on petrol from ₹13 to ₹3 and the complete removal of duty on diesel demonstrates the Centre’s willingness to absorb financial burden rather than pass it on to citizens. 
@AIADMKOfficial had already urged the Union Government to take proactive measures to safeguard the Indian economy and the common people in light of the escalating geopolitical tensions in the Middle East, and we welcome this responsible action taken by the Government of India in that regard.
This decisive action shows that such concerns have been heard and acted upon in the larger national interest.
I welcome this people-centric decision and appreciate the Union Government for prioritizing economic stability and public welfare during a period of global uncertainty.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவுக்கு குறைத்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது காலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில்,
அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கையினை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தேர்தல் அறிவிப்பு வந்தது.
கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம்.
தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.
தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம் கண்முன் தெரிவது
@AIADMKOfficial காலம்!
திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்!
தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்!
தமிழக மக்கள் நிம்மதியாக
வாழப் போகும் காலம்!
மக்கள் நம் பக்கம்!
நாளை நமதே!
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
History will remember the lockdown not just for its challenges, but for how we responded.
In times of crisis, it is experience, calm leadership, and compassion that must guide decisions.
In Tamil Nadu, that response was defined by determination, coordination, and a shared commitment to protect lives — the most important lesson of all.
Read my op-ed in @the_hindu:
🔗 https://t.co/dE2VNpAkD8
#COVID19 #AIADMK4TN
@AIADMKOfficial