தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
சினிமா பாணியில் பேசினார் என்ற ஒரு டொக்கு விழுந்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் உருட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். ‘முதல்வர் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து பேசுகிறார்’ என்று பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் ஃபைலை வைத்துக்கொண்டு சபையில் பேசியவர் சொல்கிறார். அதைவிட காமெடி என்னவென்றால், ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ப்ரஸ் மீட் கொடுத்ததுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடியைவிட ஹைலைட் காமெடி.
பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து நமது வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாகப் பதில் கொடுத்தார். ஆனால், அதைக் காதில் வாங்காமல், தன் இஷ்டத்திற்குப் பேசி, தன் வாயால் தன்னையே கிழிகிழியென்றுக் கிழித்துக்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போராட்டங்களைத் தூண்டிவிடும் அரசியல் கட்சி என்ற அர்த்தத்தில்தான் நம்முடைய மக்கள் விரும்பும் முதல்வர் அவர்கள் பேசினார். ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று தாங்கள் செய்யும் மறைமுக வேலையை திரு.உதயநிதியே பொதுவெளியில் உளறி உடைத்து இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
Party fund சொன்னதும் ஏன் பதறுகிறது திமுக?. அப்படியெனில் அந்த party fund கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து cut செய்யப்பட்ட திமுக, ஆக்ஷன் கட் பற்றிப் பேசுவது டென்ஷனில் உளறுவதுபோலவே இருக்கிறது.
ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல மதிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்ததை உளறுவதை இனியாவது நிறுத்த வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஷூட்டிங் போல இருக்கிறது என்கிறார் திரு.உதயநிதி. ஷூட்டிங் என்பது துப்பாக்கி சுடுதலையும் குறிக்கும். அப்படித்தான் எங்களின் முதலமைச்சரின் பேச்சு திமுகவை துப்பாக்கியின் தோட்டாக்களைப் போலத் துளைத்தெடுத்திருக்கிறது போலும்.
தங்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் அன்று ஒருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு சட்டசபையில் இருந்து ஓடி வந்தார். இன்று ஒருவர் ஆட்சி அதிகாரம் இழந்த சோகத்தில், சபையில் இருந்து பதிலளிக்க இயலாமல் வெளிநடப்பு என்ற பெயரில் விரக்தியில் வெளியே ஓடி இருக்கிறார்.
எங்கள் வெற்றித் தலைவர் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை. மாறாக, தனிப்பட்டத் தாக்குதலில் இறங்குவதே திமுகவின் தரம். தங்கத்தைப் பார்த்து தகரம் குறை சொல்வது தரம் குறைந்த செயல் என்றுதான் மக்கள் சொல்கின்றனர்.
பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே தெரியும். பதிலளிக்கச் சொன்னால் பதறுவோம் என்கிற பரிதாப நிலையில் மதிப்புமிகு எதிர்க்கட்சி இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.
கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு,
அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?
இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி.
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.