இன்று சென்னை ஜோதி தியேட்டரில் தலைவர் அவர்களின் *விக்ரம்* பட பேனருக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர் நம்மவரின் தீவிர ரசிகர்கள்.@ikamalhaasan@maiamofficiaI#Vikram
மரபுத் தொடர்ச்சியை மறந்துவிடாமல், நவீனத்துவத்தை நோக்கிய நகர்வையும் விட்டுவிடாமல் இலக்கியத்தில் அயராது பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திவரும் எழுத்தாளர், என் ஆப்தர் @jeyamohanwriter 60 வயதைப் பூர்த்தி செய்கிறார். அவரது பிறந்த நாளில் ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன.
பெட்ரோல்,டீசல், எரிவாயு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. @ikamalhaasan@maiamofficiaI
திருச்சிராப்பள்ளி இரயில்வே சந்திப்பின் எதிரில் மக்களின் குரலாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் ஆதங்கத்தினை இரு அரசுகளுக்கும் வெளிபடுத்தினர். மக்களை காக்க தான் அரசே தவிர இதுபோல் மக்களை துயருர வைக்க அல்ல என்பதை...
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே...
உரிமைத்தொகையில் மகளிரை ஏமாற்றிய திமுக பட்ஜெட் !
சட்டமன்றத் தேர்தலின்போதும், உள்ளாட்சித் தேர்தலின்போதும்
மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று முழங்கியது திமுக.
கடந்த பட்ஜெட்டில், உரிமைத் தொகையைப் பெறுவதற்கு உரிய பயனாளிகளைக் கண்டுபிடித்து (1/4)
பொதுச் சமூகத்தின் உடலாரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சியில்லாமலும் அக்கறையோடும் சுயநலம் கருதாமலும் பாடுபட்டுவருபவர்கள் அரசு மருத்துவர்கள்.மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கிருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்தவர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.(1/2)
தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.