இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,கொட்டும் மழை,கொளுத்தும் வெயில் என அனைத்து விதமான வானிலை மாற்றங்களிலும் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் 24 இடங்கள் என்று 169 மாரத்தான் போட்டிகளை நிறைவு செய்துள்ள நாம்,இன்று மேகாலயா மாநிலத்தில் ‘சில்லாங்’பகுதியில் 170 வது போட்டியில் கலந்து கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் கொட்டும் மழையில்,சூழ்ந்து கிடக்கும் மேகங்ளை விலக்கியபடியே 21.1 கீமீ தூரம் வெற்றிகரமாக ஓடி நிறைவு செய்துள்ளோம்… #Masubramanian #மாரத்தான்
#ShillongMarathon
#FitnessAwareness
#RunForHealth
#170thMarathon
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றிய நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
கரூர் என்றாலே கழக ஊர்!
கரூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதை மக்களின் வரவேற்பில் கண்கூடாகக் கண்டுகொண்டேன்! சந்தேகமிருந்தால் இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்...
டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என NDA கூட்டணி என்ன சொல்லிக்கொண்டு வந்தாலும் வெல்லப்போவது #DravidianModel Superfast Engineதான்! வெல்லப்போவது தமிழ்நாடு அணிதான்!
#KarurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
கோவையில் "DMK Aura 10/10" 🌄👌
🌄 கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது!
🌄 அன்புக்கும் பண்புக்கும் மரியாதைக்கும் உழைப்புக்கும் புதுமைக்கும் புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம் இட்டிருக்கிறது.
🌄 மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம், கிரிக்கெட் & ஹாக்கி மைதானங்கள், பெரியார் அறிவுலகம், ELCOT IT பூங்கா என எனது சொந்த ஊராகவே நினைத்துக் கோவைக்குப் பெரும் திட்டங்களைச் செய்துகொடுத்த நம்பிக்கையோடும் உரிமையோடும் சொல்கிறேன்... கோவையில் வெல்லப்போவது நாம்தான்!
#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம்.
காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
பெருமைமிகு நம்முடைய #ChepaukTriplicane சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில், 116-ஆவது வட்டம் அயோத்தி குடியிருப்பு, சிவராஜபுரம், கெனால் தெரு, 116-அ வட்டம், ஈஸ்வர் தாஸ் தெரு, நல்லதம்பி தெரு, செங்கல்வராயன் தெரு, 115-அ வட்டம் தங்கவேல் வாத்தியார் தெரு, சுப்ரமணிய கார்டன், சேக்தாவூத் தெரு, பெசண்ட் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம்.
கழகத்தின் வெற்றிச்சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, நம்மை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
தொகுதி மக்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாய் நம்மீது வைத்திருக்கும் அன்பிலும், நம்பிக்கையிலும் நெகிழ்ந்தோம்.
உதயசூரியன் உதிக்கட்டும், திராவிட மாடல் தொடரட்டும்!
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMkamaraj@Madhanmohandmk@iamchsekar
ED, IT, CBI ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவாத #NDA கூட்டணியை எதிர்த்து,
சமத்துவம்-சமூக நீதி- மதசார்பின்மை - மாநில உரிமை ஆகிய
கொள்கைகளின் அடிப்படையில் தொடர்கிறது, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
இந்த உறுதிமிக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @Ramachandran067 அவர்களுக்கு இன்றைய தினம் தேன்கனிக்கோட்டையில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது ... #Masubramanian#TNHealthminister#DMK4TN