சிந்தாமணியாய் பிறந்து, கழகத்தின் சிந்தனைமணியாக விளங்கி முத்தமிழறி��ர் கலைஞர் அவர்களால் பாண்டிய மண்டலத்தின் `சின்ன மருது’ என்று பாராட்டப்பட்ட `சிறுகதை மன்னன்’ எஸ்.எஸ்.தென்னரசு அவர்களது எழுத்துகளின் தொகுப்பான `சிறைப்பறவை’ நூலை, இன்றைய தினம் அன்பகத்தில் வெளியிட்டோம்.
1965- ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது - எமெர்ஜென்சியை எதிர்த்து, மிசா சட்டத்தில் கைது - மொழி உரிமைக்காக, 1986-ஆம் ஆண்டு சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது என எஸ்.எஸ்.தென்னரசு அவர்களின் சிறைச்சாலை அனுபவங்களை, காலத்தின் தேவை கருதி தொகுத்து வெளியிட்டுள்ள சிவகங்கை மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர், எஸ்.எஸ்.தென்னரசு அவர்களின் உடன்பிறந்த சகோதரரின் மகன் @SSAvallabai அவர்களின் பணியைப் பாராட்டுகிறோம்.
கழகத்தின் கொள்கையை முழங்கிய `தென்னரசு’ இதழைப் போல் இந்நூல் மூலம் களம் காணும் `தென்னரசு’ பதிப்பகமும் முத்திரை பதிக்க வாழ்த்தி மகிழ்கிறோம்.
#SSThennarasu
இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார் ,இலக்கிய தென்றல் அண்ணன் தென்னவன் அவர்கள் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணன் நாகினி செந்தில் அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூ��ல் அணியின் சார்பாக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் இளம் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் சுற்றுச்சூழல் அணியின் முன்னெடுப்புகளை எடுத்துக் கூறி அந்த நிகழ்வுகளுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டிக் கொண்டேன்
Udhayanidhi Stalin
KR Periakaruppan
DMK Youth Wing
SSA.Vallabai
மாண்புமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பாக மாபெரும் அசைவிருந்து ஓட்ட சுற்றுச்சூழலையின் துணை அமைப்பாளர் தம்பி திருமலை குமணன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று சிவகங்கையில் நடைபெற்றது
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள் , முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் அண்ணன் தென்னவன் அவர்கள் முன்னிலை வகித்து இந்த விழாவை சிறப்பித்தார்கள் கழக உடன்பிறப்புக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
இந்த விழா ஒரு துவக்கம் தான் இந்த மாதம் முழுவதும் மாவட்டசுற்றுச்சூழல் அணி மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இளம் தலைவர��� அவர்களின் பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக நடத்த காத்திருக்கிறது ...
எந்நேர��ும் மக்களுக்காக உழைப்பவன்
எவருக்கும் நிழல் தரும் மரம் போன்றவன் —
அவனின் செயல் கனியாய் மலர்கின்றது,
பசியார்ந்த உயிர்க்கு அன்னம் அளிக்கின்றது.
@Udhaystalin
இழிவாகக் பொய் சொல்லும் நபர்களிடமிருந்து நா��் மன்னிப்போஅல்லது வருத்தமோ எதிர்பார்த்து இருக்க கூடாது,
நம் கவலை ,மாபெரும் தலைவர்களால் சிறப்பாக வழிநடத்தப்பட்ட இந்த தமிழ் இளைய சமூகத்தை அழிப்பது மாத்திரம் அல்லாமல் ஒழுக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டிய இடத்தில், குருட்டு ரசிகத்தனம், யதார்த்தமற்ற ஹீரோயிசம்,ஆகியவற்றை வளர்க்கும் நடிகர் விஜய் தமிழகத்தின் அறிவை அழிக்கும் சக்தி...! @TVKVijayHQ
#JusticeForKarurVictims
புதிய முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ் நாடு முன்னணியில் உள்ளது
தமிழ்நாடு அரசு பறவை பாதுகாப்பு திட்டங்கள் மூலம் நிதி சுமார் ஒரு கோடிஒதுக்குகிறது.
—————————————————————
இருவாச்சி பறவைகள் வாழ்விட இழப்பு, காடழிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
வாழ்விட சிதைவு, பெரிய மரங்களை வெட்டுதல் மற்ற��ம் வனப்பகுதிகளை அழிப்பது போன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை ��ிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெப்பமண்டல வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும் இந்த முயற்சி தமிழ்நாட்டின் துணிச்சலான பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் மற்றும் மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை நிறுவியதைத் தொடர்ந்து இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பபிற்கான சிறப்பு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம், இருவாச்சிபறவைகள் பாதுகாப்பை நிறுவனமய மாக்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
- எஸ் எஸ் ஏ வல்லபாய்
சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் ��ணி அமைப்பாளர் சிவகங்கை மாவட்டம்