திமுகவின் திருகுதாளத் திருவாய் கொண்ட வெறும் வாயை மென்று வீண் வதந்தியை வாந்தியாக எடுப்பதில் வல்லவர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. புலம்பல் திரு.பரந்தாமன்.
திமுக ஏதோ அரசியல் புனிதம் பேசும் இயக்கம் என்று திக்கித் திணறி, முக்கி முனகி, சொத்தை வாதம் பேசிச் சொதப்புகிறார்.
நம் தவெக எம்.எல்.ஏ.விடம் ஒட்டக பேரம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சரின் அடியாட்களைக் காவல் துறை அமுக்கிய பிறகும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யென்று ஜல்லி அடிக்கிறார்.
Vending machine வைத்து மற்ற கட்சியினரை விலைபேசும் விஷ ஜந்து திமுகவிற்கு வெட்கமே இல்லாமல் ஜால்ரா அடிக்கும் பரந்தாமன், வாயை அடக்கிப் பேச வேண்டியது அவசியம்.
ஒட்டக பேரம் நடத்திய தன் முன்னாள் அமைச்சர், ஒருவருக்கும் தெரியாமல் ஓடி ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி மறைந்து அலையும்போதே திமுகவினர் வாய்க்கொழுப்பு எடுத்து வம்பளப்பது சகிக்கவில்லை.
மக்கள் விரும்பும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி பேசும் அறிவாலயத்தில் அலையும் பிராணியாக மாறுவதும் மாறாததும் பரந்தாமனுக்கே வெளிச்சம்.
சொந்தக் கட்சியிலேயே விஷக்கடி பட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் நம் மீது அவதூறாக அள்ளி வீசி வாய்விட்டுப் புலம்பிச் சலம்பி இருக்கிறார்.
பரந்தாமன் பேசும்போது அநாகரிகத்தின் உச்சமாக, ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ என்று அமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். அதே போல நாமும், ‘அறிவாலயத்து … அடக்கு வாயை’ என்று சொல்லலாம். ஆனால், நாகரிகம் கருதித் தவிர்க்கவே விரும்புகிறோம்.
நேர்மையான மக்கள் அரசு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்கிற உறுதியோடு மக்கள் பணிகளைச் செய்து வருகிறோம். எனவே, கடந்த காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் லஞ்சம், முறைகேடு, விதிமீறல் போன்ற ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், என்னிடமோ அல்லது பின்வரும் அலுவல் தொடர்பு மூலமோ நேரடியாக புகாரளிக்கலாம். இனிவரும் காலங்களில் முறைகேடுகளற்ற பொறுப்பான மக்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்.
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமர்களுக்கு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததில் இருந்தே ஐம்புலன்களிலும் பொறாமைப் புகையும் கண்ணீரும் பொங்கி வழிகின்றன. அ.தி.மு.க.வுடன் மறைமுகமாகத் திட்டம் போட்டு, மக்கள் விரும்பும் முதல்வர், நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி அமைந்துவிடாமல் தடுக்கப் பார்த்தனர். இறுதியில் தடுமாறித் தோற்றனர். தகிடுதத்தம் வெளியாகித் தலைகுனிந்தனர்.
இயல்பாக நம் வெற்றித் தலைவரின் தலைமையை நோக்கி, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அலையலையாக வரத் தொடங்கும் அரசியல் பேரெழுச்சி கண்டு, தி.மு.க.விற்குப் பித்துப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் சம்பந்தமின்றித் தொடர்புபடுத்தி, குதிரை பேரம், ஒட்டக பேரம் என்றெல்லாம் கூவுகின்றனர்.
குள்ளநரிக் கூட்டத்தின் குதர்க்க அரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து வருவதால் இப்போது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கயமைத் தனத்தின் வெளிப்பாடாகத்தான் நமது மக்களரசுக்கு மூன்று மாதம், ஆறு மாதம் என்றெல்லாம் மேடைக்கு மேடை மேனாமினுக்கித்தனமாக முழங்கி வருகின்றனர்.
இதோ இன்று, அல்லுசில்லு அடியாட்களை வைத்து, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. தோல்விக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி, திக்கித் திணறிக் கரையேறிய அரசியல் கயமை சக்தி ஒன்றின் பின்னணி இயக்கத்தால்தான் இந்தப் பேரம் நடந்ததாகக் குட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இதுவரை சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவள விழா பாப்பாவின் பசப்பு அரசியலும் பத்தாம்பசலித்தன அரசியலும் பாசிச அரசியலும் பாயச அரசியலும் பாய்சன் அரசியலும் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாகும் பகல்கொள்ளை போல, ஒவ்வொரு மோசடி அரசியல் முயற்சியும் அம்பலப்படத் தொடங்கியுள்ளது.
மோசடி முகமூடி கழன்று விழத் தொடங்கி உள்ளதால், மக்குத்தனமான காரணங்களைச் சொல்லி, மனு கொடுக்கும் நாடகத்தை வேறு தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த மூளை கெட்ட மோசடி ஆட்டத்திற்கு, நம் தமிழக மக்களே வெகுண்டெழுந்து முற்றுப்புள்ளி வைத்து, மொத்த அரசியல் வாழ்வையும் முடித்து வைக்கப் போவது உறுதி.
#உதய்பேரம்
@PttvNewsX He is well educated and well knowledge person. And enga epdi pesanumnu nagarigam theriyum so avarukku pasangaloda vazhkaiku ethu mukkiyamnu ethu avasiyamnu nallave theriyum. And @CMOTamilnadu Anna choice la korai solla mudiyathu nallathatha irukkum