இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் வசமுள்ள பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதாகக் காரணம் கூறி ரூ.300 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண முறை ரூ.300 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்டு வந்த சாதாரண மற்றும் ஏசி அறைகளின் கட்டணம், ரூ.600 முதல் ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன.
இந்த கட்டண உயர்வு நடைமுறை 13.07.26 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு ரூ.2 கோடிக்கு தாரை வார்த்த தவெக அரசு.
தற்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தங்கும் விடுதிகளின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது @TVKPartyHq அரசின் செயல், ஏழை, எளிய பக்தர்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும்..!!
ஒருபக்கம் இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு மறுபக்கம் கோயிலிக்கு வரும் பக்தர்களிடம் கட்டண உயர்வு மூலம் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திய கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதைப் போன்ற அறமற்ற செயல்கள் தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்கிறது.
பழனியில் பால தண்டாயுதபாணி கோயில் தங்கும் விடுதியின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக இரத்து செய்து Chief Minister of Tamil Nadu திரு. @TVKVijayHQ அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@ThamaraiTVTamil@ThanthiTV@PTVNewsOfficial@polimernews@News18TamilNadu@TamilJanamNews@KathirNews@ibctamilmedia@tnnews24air