ஆர் எஸ் எஸ்சின் குரு கோல்வால்கர்,
இஸ்லாமியர்கள், கிருஸ்த்துவர்கள், கம்யூனிஸ்டுகள்என
இந்த மூன்று பகுதியினரையும் எதிரிகளாகக்குறிபார்க்கக் கற்றுக்கெடுத்தார்!?
பகைவனுக்கும் அருள்பாலிக்கக் கற்றுக்கொடுத்த மண்ணிலா பகைக்கக் கற்றுக்கொடுப்பது?
ஆர் எஸ் எஸ் என்ற ஜனநாயக விரோதஅமைப்பின் அரசியல் கருவி தான் பாஜக! ஆனால், ஜனநாயக அரசியல் அமைப்பை மத அடையாளத்தை முன் நிறுத்தி வஞ்சகமாகக்கைப்பற்றிவிட்டது! தற்போது ஜனநாயக அமைப்பின்
'சகல' துறைகளிலும் ஊடுறுவிக்கொண்டது! இனி அதன் வேலை ஜனநாயக அரசியல் அமைப்பைத்தகர்ப்பது தான்!
பாரா உஷார்!
ஆர் எஸ் எஸ்-பாஜக என்ற மனிதகுலவிரோதியை, ஆபத்துத் தெரியாமலேயே இந்தியர்கள் ஆதரித்து வருகிறார்கள்! எதிர்காலத்தில் பிற்பட்ட, பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு பேராபத்து உள்ளது!
1925 ல் ஐந்து சித்பவன் பிராமனர்களால் முற்கால சநாதன-வர்ணாஸ்ரமத்தன்மைகொண்ட ஆட்சி அமைப்பதே அவர்கள் நோக்கமாகும்!
ஜனநாயக முறை இந்தியமுறை அல்ல அது அந்நிய முறையாகும்!
மன்னராட்சிக்காலத்தில் தான் இந்தியா செழித்து வளர்ந்தது என்று ஆர்எஸ்எஸ்சின் குரு கோல்வால்கர் போதித்தார்!
இதன்மூலம் அவர் கற்றுத்தந்தது ஒற்றை மனித ஆட்சிமுறைதான்!
ஆர்எஸ்எஸ்சின் அமைப்புமுறை செயல்பாட்டிலேயே ஜனநாயக முறைஇல்லயே!
தமிழ்நாட்டின் பொது அமைதியை, அரசியல் ஆதாயத்திற்காகச் சிதைக்கும் இந்துத்துவ சக்திகளின் முயற்சிதான் திருப்பரங்குன்றக்கலவரம்!
சட்ட ஒழுங்கைக்குலைக்கும் தீய சக்திகளை ஒடுக்கும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள்!
ஆளுநர் பதவி என்பது மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஜனநாயக அரசை உளவு பார்க்கும் ஒன்றிய அரசின் கருவி!
மெய்யான ஜனநாயக அரசை சித்திரவதை செய்து மகிழும் சேடிஸ்ட் மனப்பான்மையின் சின்னம்!
இது அரசியல் சாசனத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டிய பதவி!
ஒன்றிய அரசு அறிவிக்கை செய்துள்ள தொழிலாளர் சட்டங்களை, கேரள மாநில அரசு அமல்படுத்தாது என்று LDF திட்டவட்டமாக அறிவித்துவிட்டது!
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?
கே.சுப்பராயன் MP
உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் தேவைகளையும், அவ்வக்காலங்களில் தங்குதடை ஏதுமின்றி பெருகிற, வாழ்க்கை முறையேவிஞ்ஞான சோசலிசம்!
அது முற்றிப் பழுத்த நிலையே கம்யூனிசம்!
இந்த முறையிலான சமுதாயத்தைக் கட்டி அமைக்க வழிகாட்டுவதே மார்க்சிசம் !
அதற்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள்!
ஜனநாயக எல்லை தாண்டிய 'பயங்கரவாதம்' மண்டிக் கிடப்பது பாஜகவிடம் தான்!
ஜனநாயகத்தை வெறுத்துப் பகைக்கிற கட்சி அது!
SIR என்ற பெயரில், ஆதார், ரேசன் , ஓட்டர் ID அடையாள அட்டைகளெல்லாம் செல்லாது என்று அறிவிக்க வைத்த சூத்திரவாதிகள் யார்? அரசின் அட்டைகள் வெற்றுக் காகிதங்களா?
எடப்பாடி பழனிசாமி ,
'கம்யூனிஸ்டுகளுக்கு முகவரி இல்லை!' என்று உளறிக் கொட்டியுள்ளார்!
அவரது உளறலை தமிழ்நாடு நன்கறியும்!
உலகின் தூக்கத்தைக் கெடுக்கிறடிரம்பின் தூக்கத்தை சிதைக்கிற ஒரே பெயர் 'கம்யூனிஸ்ட்'!
கம்யூனிஸ்ட்டின் முகவரியை உலகறியும்!
உதவாக்கரைகளுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்!
அஇஅதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டது, அதன் அழிவை அறிவித்துக் கொண்டதாகும்! பாஜக ஒரு மரணக்குழி! ஒரு கட்சியை அழிக்க முடிவெடுத்து விட்டால் அந்தக் கட்சியோடு பாஜக கூட்டணி அமைக்கும்!
வலையில் சிக்கிவிட்டது அஇஅதிமுக! இனி அது பிழைக்காது!
2026-ல் பாஜக அதை தின்று ஜீரணித்து விடும்!
கம்யூனிச சமுதாயத்தை நோக்கியே மனிதகுலத்தை
வரலாறு அழைத்துச் செல்கிறது! இது சமூகவிஞ்ஞானம் ஆய்ந்து கண்டறிந்த வரலாற்று உண்மையாகும்! எளிய பொதுவுடைமை வாழ்க்கை முறையில் தொடங்கிய மனிதகுலம், விஞ்ஞானக்
கம்யூனிசத்தை நோக்கியே வளரும்! இதுவரலாற்று விதி! இதை எந்த சக்தியாலும் தடுத்திட முடியாது!
தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி ஆர் எஸ் எஸ் காரர்! அவரை ஆட்டுவித்து தமிழ்நாட்டில்அரசியல் சதுராட்டம் நடத்துவது யூனியன் பாஜக அரசு!
அவரது அத்துமீறல் ஜனநாயக, அரசியல் சட்ட எல்லைகளைத் தாண்டிய பயங்கரவாதம்!
கிராமம் வரை ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு மக்கள் இயக்கத்தை திமுக அணி தொடங்க வேண்டும்!
மாநிலங்களவையில், அவைத் தலைவர் தன்கர்,
"நான் சார்ந்த சமூகமும் குறிவைக்கப்படுகிறது"
என்று சாதிவெறியைத்தூண்டிவிடுகிற இந்த அற்பமானுடர் துணைக் குடியரசுத் தலைவராக நீடிக்கலாமா?
அவைத் தலைவராக நீடிக்கலாமா?
ஆதவ் அர்ஜுன் யாருடைய ஆயுதம்? அவர் தமிழ்நாட்டில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற விரும்புகிறார்? பாஜக பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்? இவர், திமுக அணியின் ஆதரவுத்தளத்தைத்
தகர்க்க பாஜகவால் ஏவிவிடப்பட்ட அரசியல் ஆயுதம்!
வகுப்பறைகளில் தொங்கவிடப்
பட்டுள்ள வரைபடங்களல்ல இந்தியா!
இந்தியாவில் வாழ்கிற 142 கோடி மக்களே இந்தியா! இவர்களை சாதி, மத, இன, நிற , மொழி என வெறுப்பை வளர்ப்பது தேசவிரோதம்!
வேற்றுமைக்குள் ஒற்றுமையை கட்டுவதே தேசப் பணி!
விஜயின் வி.சாலை மாநாடு வெற்று வேட்டு மாநாடு தான்! கும்பல் இருந்தது,
கொள்கைக் கூர்மை இல்லை! அரசியல், பொருளாதார, சமூகப்பிரச்சினை
களின் பால் அவரது கொள்கை என்ன? ஒன்றுமில்லை!
பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிளவு படுத்தும் உள்நோக்கம் கொண்ட அரசியலாகக் கருத இடமளிக்கிறது!
Budget ஒதுக்கீடுகள் வாய்க்கால்கள் குடிக்க விடாமல், சிந்தாமல், சிதறாமல் மக்களை வந்தடைய வைக்கும் முறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும் அரசே மக்கள் நல அரசு என்பதன் சொல்லுக்குப்பொருத்தமான அரசாகும் !
பள்ளிகளுக்குள்ளும் 'இந்துத்துவா' என்ற இந்தியப் பண்
பாட்டிற்கு எதிரான தீய கருத்துகள் மிக எளிதாக ஊடுறுவி வருகின்றன!
பிஞ்சுக் குழந்தை முதல் இளைய தலைமுறையினருக்கு அறிவியல் பார்வையை, பகுத்தறியும் விழிப்பை, மூடக்கருத்துகளை சுட்டெரிக்கும் கனலை மூட்ட வேண்டும் என்பதே!