தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக, என்னை நியமனம் செய்த தேசிய தலைவர் @JPNadda, மாநில தலைவர் @NainarBJP மற்றும் அனைத்து மூத்த நிர்வாகிகளுக்கும் நன்றி! இன்று நியமனம் செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
எங்கள் குடும்பத்தின் ஆணி வேர், பேரன்பின் ஊற்றுக்கண், அப்பா மற்றும் அம்மாவுக்கு இனிய 38வது திருமணநாள் வாழ்த்துகள்! உங்களின் மகனாக பிறப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ! இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்கள் மகனாய் பிறக்கும் வரமே வேண்டும்.
அனைவருக்கும் வணக்கம். நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் இன்று மதுரை வருகிறார்கள். நாளை வேலம்மாள் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளோடும் தொண்டர்களோடும் கலந்து கொள்ள இருக்கிறார். அனைவரையும் மனதார வரவேற்கிறேன்.
It was a great honour and privilege for me to meet our Honourable Prime Minister, Thiru @narendramodi avargal today.
In every word and gesture, I could feel his deep love for the people of Tamil Nadu, and his reverence for our ancient and glorious Tamil language.
I sought his blessings and guidance on behalf of @BJP4TamilNadu, as we reaffirm our commitment to serve the people of Tamil Nadu and our Nation in the true path of Dharma.
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு திரு.@NainarBJP அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக, திரு.@annamalai_k அவர்கள் பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, திரு.அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் திரு.அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.
தமிழகத்தில் மேலும் 6 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கிய மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களின் அரசிற்கு நன்றி.
பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா, சித்திரைக்கார் அரிசி மற்றும் செட்டிகுளம் சின்ன வெங்காயம் ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு என்பது மகிழ்ச்சி
@bjp4tamilnadu@narendramodi
புனித ரமலான் தின வாழ்த்துக்கள்.
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
எனது அரசியல் ஆசான் அத்தான் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்களின் மறைவு செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
புரட்சித்தலைவர் அவர்களின் காலம் தொட்டு நெல்லை மாவட்டத்தின் முக்கிய முகமாக பார்க்கபட்ட திரு. வி.கருப்பசாமி பாண்டியன் அவர்களின் இந்த மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் தொண்டர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி
தென்காசியில் நேற்றைய தினம் நடந்த மாபெரும் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினேன்.
மாநாட்டிற்கு வருகை புரிந்து சிறப்புரை ஆற்றினார் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், மேலும் இந்த வெற்றி மாநாட்டில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The only language @arivalayam cyber coolies & their wretched masters is their own language . After hiring thousands yesterday they tried GET OUT MODI . Today Tamilnadu is teaching a lesson to these masters in both hands . 4.15 lakhs tweets in first three hours. #GetOutStalin