"கோவில் சிறப்பாக இருக்க ஒரு 'மாஸ்டர் பிளான்' ரெடி பண்ண சொல்லியிருக்கோம்.."
அருள்மிகு பொன் சொரிமுத்தையனார் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்
#Nellai | #Temple | #Ramesh | #TVK | #PolimerNews
A true icon of Tamil cinema. K. Bhagyaraj sir’s contribution will continue to inspire generations. Heartfelt condolences to his family and loved ones. 🕊️
#RestInPeaceBhagyaraj
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.755.83 கோடி மதிப்பில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
"மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம்...தொடவும் விட மாட்டோம்...தொட்டா விட மாட்டோம்...இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம்!" - பேரவையில் கர்ஜித்த முதல்வர்
TNAssembly2026 | 23 June 2026
#Newstamil24x7#TNAssembly2026#CMVijaySpeech
குட்டி ஸ்டோரி... பெரிய பதிலடி!
சட்டப்பேரவையில் தனது குட்டி ஸ்டோரி யால் எதிர்க்கட்சியினரை அலறவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
#CMJosephVijay
இன்று (23.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் திரு.அ.சின்னசாமி மற்றும்
திரு. வீ.எஸ். காளிமுத்து ஆகியோரது மறைவிற்கு இரங்கற் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial