VMK நாட்டுக்கோழி குடும்ப உணவகத்தில் உணவருந்தினோம். அங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன. உணவின் தரம் மற்றும் சுவைக்காக உணவகத்தின் உரிமையாளர் திரு. மகேந்திரன் அவர்களைப் பாராட்டி, எனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்
#VMKNattuKozhi#familyrestaurant #salem #foodreviewer #salem
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்கிற முறையில், கேரளாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினேன். இந்நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய, இன்னுயிரை ஈந்த, தியாகிகளின் அர்ப்பணிப்பை, நினைவுகூர்வோம்.
#IndependenceDay #80thIndependenceDay #JaiHind #FreedomFighters #LJK
கிட்டத்தட்ட 27ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த, ''நாடாளுமன்ற புலி'' என வர்ணிக்கப்படும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் திரு.வைகோ மற்றும் திருமதி. ரேணுகா தேவி தம்பதியரை, நான் எனது மனைவி சிந்துஸ்ரீ சார்லஸுடன் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற தருணம்!
#Vaiko #TamilRights #TamilPolitics #PoliticalLeadership #TamilNadu
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் MLA என்கிற முறையில், SS News Digital சேனலுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரி அரசியல், மக்களுக்காக கொண்டு வந்த U-Turn
பணி தடுத்து நிறுத்தப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
#JoseCharlesMartin #LJK #PuducherryPolitics #KamarajNagar #PuducherryDevelopment
நம் பாரத நாட்டின் விடுதலைக்காகவும்; இறையாண்மைக்காகவும் தங்களின் இன்னுயிரை ஈந்த மாபெரும் தியாகிகளின் அர்ப்பணிப்பை இந்நாளில் நன்றியோடு போற்றி வணங்குவோம்.
அதேபோன்று, நமது புதுச்சேரி மண்ணின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் ஆகஸ்ட் 16 இணைப்பின் பெருமையையும் போற்றுவோம். எமது காமராஜ் நகர் தொகுதியை அனைத்துத் துறைகளிலும் மாதிரித் தொகுதியாக உயர்த்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்! அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
#IndependenceDay #PuducherryLiberation #NationFirst #KamarajNagar #PuducherryDevelopment
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது தமிழில் ஏற்பட்ட வாசிப்புப் பிழைகள் குறித்து எழுந்த விமர்சனங்களை, நிதியமைச்சர் திரு N. மரிய வில்சன் அவர்கள் பணிவுடன் ஏற்றுக்கொண்டார்.
“நான் இந்த சட்டப்பேரவைக்கு புதிது, அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன். தமிழ்மீது எனக்கு மிகுந்த அக்கறையும் மரியாதையும் உண்டு” என அவர் தெரிவித்தது பாராட்டுக்குரியது. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அவற்றை எதிர்மறையாக பார்க்காமல், அதிலிருந்து கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு முன்னேறுவது ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதியின் பண்பாகும்.
#TamilNadu #TamilLanguage #TamilNaduAssembly #PublicService #PoliticalLeadership
காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டு மேடையில், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வெளியுறவுக் கொள்கையைத் தவறாகப் பேசியதோடு, ஒரு வெளிநாட்டுப் பெண் தலைவரைக் குறித்து மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
#IndianPolitics #PoliticalDebate #NarendraModi #RahulGandhi #India
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் MLA என்கிற முறையில், SS News Digital சேனலுக்கு அளித்த பேட்டியில், விண்வெளித் தொழில்நுட்பம், அதில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் இந்தியா பிற நாடுகளைச் சாராமல் தனக்கென சொந்த விண்வெளித் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
#SpaceTechnology #YouthInInnovation #MakeInIndia #ISRO #India
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு K.A .செங்கோட்டையன் அவர்களை, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில், சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
தொடர்ந்து, புதுச்சேரியின் வளர்ச்சி குறித்த எனது கனவுத் திட்டமான “Rising Puducherry” புத்தகத்தை அவர்களுக்கு வழங்கினேன்.
#RisingPuducherry #JoseCharlesMartin #LJK #PuducherryDevelopment #TamilNaduPolitics
முத்தமிழ் கலைச்சங்கமம் ஒருங்கிணைப்பில் 80-வது சுதந்திர தின வரவேற்பு விழா, காமராஜ் நகர் தொகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் MLA என்கிற முறையில் நான், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினேன். நிகழ்ச்சியில், தமிழுக்கும், புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி, புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் முத்து அவர்களுக்கு, தபால் தலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் மணவெளி தொகுதி MLA ராமு, LJK-யின் நிர்வாக பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் அழகப்பன், தொண்டர் அணி தலைவர் மதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
#IndependenceDay #TamilCulture #TamilHeritage #Puducherry #PuducherryNews
ஹம்பியின் மகத்தான லட்சுமி நரசிம்மர் சிலையை அடிப்படையாகக் கொண்டு, திரு. ரமேஷ் சேதுராமன் அவர்கள் உருவாக்கிய ஓவியத்தை, எங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விஜயநகரப் பேரரசின் மகத்தான அரசரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில், ஒரே கல்லிலிருந்து செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிற்பங்களில், லட்சுமி நரசிம்மர் சிலையும் ஒன்றாகும். பின்னர் நிகழ்ந்த படையெடுப்புகளால், லேசாக சிதைவுகளைத் தாங்கியிருந்தாலும், இந்தச் சிற்பம் இன்று வரை நமது நாகரிகத்தின் தளராத மனவலிமை மற்றும் நிலைத்திருக்கும் ஆற்றலின் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. இந்த வலிமையும் உறுதியும் கொண்ட அடையாளத்தை, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் நாகரிகப் பாரம்பரியத்தை காக்கும் பணியில் அசைக்க முடியாத மன உறுதியுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு வழங்கியது எனக்கு மிகவும் அர்த்தமிக்க தருணமாக அமைந்தது.
#LaxmiNarasimha #Hampi #IndianHeritage #IndianCulture #AmitShah
புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் ""வண்ண விருது"" வழங்கும் விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகை தந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த அவரை, கூட்டணியில் அங்கம் வகிக்கும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் MLA என்கிற முறையில் வரவேற்றேன். உடன் முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
#Puducherry #AmitShah #LJK #NDA #PuducherryPolitics
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்டாக் விண்ணப்ப காலத்தை நீட்டிக்குமாறு நமது தலைவர் ஜே.சி.எம். அவர்கள் புதுச்சேரி முதலமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமை மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
#CENTAC#StudentWelfare