உன் கண்ணும் காதோர லோலாக்கும் காதலை சொல்லிவிட்டது
உன் இதயத்தை மட்டும் ஏன் பூட்டி வைக்கிறாய்
நீ காதல் சொல்லாமல் கொள்கிறாய்
நான் காதலித்து கரைகிறேன்
காதலை சொல்லிவிடு
கனவுகளோடு காத்திருக்கிறேன்
கண்மணியே..!
#சரணின்_கிறுக்கல்
நான்
அதே பழைய மனிதன் தான்
ஆனால் என்
சிந்தனைகளும் செயல்களும் மாறுகிறது.
என் மாற்றத்தை
முதலில் கவனிப்பவர்கள் மட்டுமே
என்னை அதிகம் நேசிக்கின்றனர்.
#சரணின்_கிறுக்கல்
நீ சொல்லாததை உன்
கண்கள் சொல்லிவிட்டது
மகிழ்ச்சியில் மிதக்கிறேன்
நீ எனக்கானவள்
என் இரவிலும் பகலிலும்
இருந்துவிட்டால்
பிறவிப் பயன் அடைந்திடுவேன்.
#சரணின்_கிறுக்கல்