என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
🌿 அலங்காரியம்மன் குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், சிவந்திபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள அலங்காரியம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், எனது சொந்த நிதியிலிருந்து ஆரம்பக்கட்ட நிதியுதவியை வழங்கி, பணிகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.
நீர்நிலைகளைப் பாதுகாத்து, மக்கள் நலன் சார்ந்த பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.
மக்கள் நலனே என் இலட்சியம்!
#Nellai #TNSouth #Ambasamudram #TVHQ #Esakkisubaya
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
“கடமையைச் செய்; பலனைப் பற்றி கவலைப்படாதே” என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் இந்தப் போதனை, கடமை உணர்வுடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அறம், நீதி, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி, ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
-
Warm wishes to everyone on the occasion of Krishna Jayanthi!
“Perform your duty; do not worry about the fruits of your actions.” — This teaching of Lord Sri Krishna reminds us of the importance of carrying out our responsibilities with a sense of duty and integrity.
Let us uphold Morality, justice, integrity and the welfare of the people, and move forward together in unity.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
#CMJosephVijay
விஜய் எனும் வரலாறு படமாக.. பலருக்கு பாடமாக..வருங்கால சந்ததியினருக்கும் பாடமாக..
@actorvijay to @TVKVijayHQ@CMOTamilnadu 🔥🔥🔥
செமயா செதுக்கிருக்காரு🔥
YT Link : https://t.co/OEzjq7XBa9
எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கி, அங்கீகாரம் அளித்த தங்கத் தளபதி, வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் "விஜய்" அண்ணாவிற்கும், எனது பெயரைப் பரிந்துரைத்த மாண்புமிகு நீர் வளத்துறை அமைச்சர், திரு. என். ஆனந்த் அண்ணனுக்கும், மேலும் மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் திரு. CTR.நிர்மல் குமார் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும், மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கும், அனைத்து மாநில ஊடகம் மற்றும் செய்திப் பிரிவு தலைமை நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏
இந்தப் பொறுப்பை மிகுந்த பொறுப்புணர்வுடனும், முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் மேற்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் பணிக்கும் என்னை முழுமையாக அர்ப்பணித்து உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@imrajmohan@RameshOffcl@TVKPartyHQ
தமிழ் அன்புடன்,
மு. சௌந்தர ராஜா, B.E., M.A.
மாநில செய்தித் தொடர்பாளர்
மற்றும்
நட்சத்திரப் பேச்சாளர்
தமிழக வெற்றிக் கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி