கட்சியின் பலமே கிளைக்கழகங்கள் தான்
முன்பு போல
தெருமுனை கூட்டங்கள்
பொதுக்கூட்டங்கள்
வட்ட/மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள்
அவ்வப்போது மக்கள் நல பேரணிகள்
இவை தான் மக்களோடு நாம் எப்போதும் இணைந்திருக்க செய்தவை
இவை எல்லா பிரச்சாரங்களையும் முறியடித்து மக்களை சுயமாக சிந்திக்க வைக்கும்
நமது பலமே அதாக தான் இருந்தது
அதற்கான பயிற்சி பாசறைகள் கூட இப்போது அரிதாக தான் நடக்கிறது.
இவற்றை எல்லாம் புனரமைக்க வேண்டும்
மாறி வரும் கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைதளங்களிலும் நமது இருப்பை தீவிரப்படுத்த வேண்டும்
நவீன இளைஞர்கள் அதிகம் வசிப்பது இல்லை. எனவே அவர்களுக்காக சிறு வீடியோக்கள் வடிவில் நம்மை பற்றியும் இப்போதைய ஆட்சியின் தவறுகள் பற்றியும் எடுத்து சொல்ல வேண்டும்
இந்த இரண்டு வகை முன்னெடுப்பும் தேர்தல் காலங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும்
பாரம்பரிய மக்களுக்கு நேரடியாகவும் நவீன மக்களுக்கு இணையம் வழியாகவும் நாம் இணைப்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்
நன்றி
இவளோ நாள் பிரச்சாரத்துல யாரும் எதிர்த்து பேச முடியாதுன்னு கண்டதை கடிச்சிட்டு போவான், இன்னிக்கு லைட்டா நேரா எதிர்த்து ரெண்டு அடி அடிச்சதுக்கே வீட்டுக்கு வந்து அழுது, கதறி நாலு பக்கத்துக்கு ஒப்பாரி வெச்சு இருக்கான், இப்படியே டெய்லி டிரிக்கர் பண்ணா போதும், அவன் உண்மையான சுயரூபம் வெளிய வந்துடும்...
விஜயுடன் நடித்து கொண்டு இருக்கும்போது மிகவும் மெல்லிய வாய்சில் தான் அவர் தன்னுடைய வசனங்களை உச்சரித்தார். இன்னும் சத்தமாக பேசுங்க என்று சொன்னவுடன் டப்பிங் முடிச்சிட்டு பாருங்க என்றார். டப்பிங் முடித்து அந்த காட்சியை பார்த்தபோது அவ்வளவு சிறப்பாக பேசி இருந்தார் என்று ஒரு நடிகர் சொல்லி இருந்தார் சித்ரா லக்ஷ்மணன் பேட்டியில். Literally அதை தான் சட்டசபையில் செய்ய முயற்சித்து இருக்கார் போல..
Cm சார் நேரடியாக பேசுங்க சார்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
This is the statement
கொள்கை எதிரி என சொல்லி வந்த பாஜக கூட்டணியின் ஆதரவையும், அரசியல் எதிரி என சொல்லி வந்த திமுக-வின் கூட்டணியின் ஆதரவையும் பெற்று ஆட்சியைத் தொடர்கிறார் முதல்வர் விஜய்
தீய சக்தி + மதவாத சக்தி = தமிழக வெற்றி கழக ஆட்சி
சமீபத்தில் தேர்தல் ரிசல்ட் வந்த நாள் அன்று depress ஆகிட்டேன், கொஞ்ச நாள் கழித்து வர்றேன் என்று எழுதி இருந்தேன் FBல. அதை ஒருத்தன் ஷேர் பண்ணி depress ஆகிட்டானாம், பண்டிகையை கொண்டாடுங்கலே என்று போட்டு இருந்தான்.
யார்ரா அவன் என்று பார்த்தால் 6 வருஷம் முன்னாடி திரும்ப CA inter அவன் ஃபெயில் ஆனபோது போன் பண்ணி கவலை படாதே என்று சொல்லி விவரங்கள் கேட்டு வேற சில directions சொன்னேன்.
அரசியல் வேறுபாடுகளுக்காக உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்களையோ இப்படி கடித்தால் இன்னொரு முறை யாரும் கிட்ட வர மாட்டாங்க. அரசியல் பேசுவது வேற, பெர்சனல் empathy என்பது வேற.
இரண்டையும் உங்களால கடைபிடிக்க முடியவில்லை என்றால் யாருமே உங்க கூட நீண்ட நாள் டிராவல் பண்ண மாட்டாங்க, நீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.
கட்சி தாண்டிய பலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் அரசியல் கருத்தில் என்றைக்குமே நான் மூக்கை நுழைத்தது இல்லை. அவர்களும் என்னுடைய அரசியல் பற்றி பொதுவெளியில் பேசுவது இல்லை. போன்ல பேசிக்குவோம், ஆனா அதை வெளியே discuss பண்ண மாட்டோம்..
அந்த கண்ணியம், பொதுவெளியில் நடந்து கொள்ளும் தன்மை இல்லாத ஒரு கூட்டமாக சிலர் மாறி இருக்காங்க.
ஒரு பெண்ணின் வீடியோ பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது..சொந்த அப்பாவை வா டா போடா, அசிங்கப்பட்டியா என்று கேட்டு அந்த தந்தையின் ரியாக்ஷன் முதல்கொண்டு வீடியோ போட்டு இருக்காங்க. Remember, நாளைக்கு உனக்கு எது நடந்தாலும் அந்த தந்தை தான் கூட இருக்க போறார். உங்களின் அரசியல் தலைவர் யாரும் வந்து உங்களை காப்பாற்ற போவதில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காத இரண்டே தலைவர்கள் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி இன்னொருவர் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்
நீட் தேர்வு என்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக சந்தை!
பல கோச்சிங் சென்டர்களுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போர்!
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசியத் தேர்வு முகமைகள் தயாரிக்கும் வினாத்தாள் கசிவது எல்லாம் சாதாரண புரோக்கர்களால் செய்யக்கூடியது அல்ல.
இது நிச்சயமாக தரமான தகுதியான மருத்துவர் உருவாக்கக்கூடிய முறை கிடையவே கிடையாது
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
எப்படியும் மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பளம் இருக்கும். ஐந்து ஆண்டுகள் -60 மாதம்- ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளம் மட்டும்.
அது தவிர அரசு குடியிருப்பு வீடு, இனோவா கார், அதற்கு ஐந்து ஆண்டுகள் டீசல் ஐந்து ஆண்டுகள் அரசு சம்பளத்தில் ஒரு டிரைவர்.
எப்படியும் கூட்டி கழித்துப் பார்த்தால் 5 கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகப் போகிறது
ஜோசியம் பார்த்தவர்களுக்கு பீஸ் தங்கள் சொந்த பணத்தில் கொடுத்திருக்கலாம்.
இதுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்ட மாற்றமா?
சிறப்பு. மிகச் சிறப்பு.
எதிரெதிர் துருவங்களாக இருந்து தேர்தல் களத்தில் சண்டை செய்த போதும் தேர்தல் வெற்றி தோல்விக்கு பிறகு முதல்வர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருவரை ஒருவர் சந்தித்து மரியாதை பாராட்டியுள்ளனர்
ஆனால் காங்கிரஸ் கட்சியோ திமுகவுடன் பதவிகளை பெறும் வரை கூடவே இருந்துவிட்டு ஒரு மரியாதைக்காக கூட திமுக தலைவரை நேரில் சந்தித்து பேசவில்லை வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட போய் பார்க்கவில்லை!
உதயநிதி செய்ய வேண்டியதுலாம் Instaல NewYork Mayor Mamdaniயை follow பண்றதும், அவனை மாதிரி சமூக பிரச்சினைகளை எளிதா விளக்கி அதற்கான தீர்வுகளை short durationல videoவாக SMல போடுறதுதான்..
கொஞ்சமாவது சர்வதேச போக்குகளை புரிஞ்சி அதற்கேற்ப மாறுங்க 🙏🙏🙏
தன் MLA சீட்டு ராஜினாமா கடிதத்த கூட நேர்ல வந்த தராம ஆள் வச்சு கொடுக்குறான். இத்தனைக்கும் அவனும் தலைமை செயலகத்துல தான் இருந்தான். A1அ விட மொரட்டு சொகுசுல ஆட்சி பண்ண போறான்.
இந்த ஆட்சி அத்திவரதர் ஆட்சி
அதுக்கு இதுவே சாட்சி.
30-40 வயதில் இருக்கும் உங்களை சுற்றி இருக்கும் கல்லூரி, பள்ளி நண்பர்களின் வாட்சாப் இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பாருங்க.. பலரும் இன்னிக்கு தவெக ஆட்சியமைக்கும் ஸ்டேட்டஸ் வச்சிருப்பாங்க.
இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு இவங்கள எளிதா ஏமாத்தி மனச மாத்தி மாற வச்சிட்டாங்க என நினைக்கறீங்களா. இவர்களில்
பலரும் உங்களைப் போலவே படிச்சு உஙக்ளைப்போல வேலையிலோ தொழிலோ செஞ்சுகிட்டு இருக்கிறவங்க தான்.உங்ஙளை விட அரசியல்ல ஆக்டிவா இல்லாம இருப்பவங்களா கூட இருக்கலாம் ஆனா இன்னிக்கு தவெகவை ஆதரிக்கறாங்கன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்.உரையாடினா அவர்கள் சொல்லும் காரணம் பல இருக்கலாம், உண்மையில் பல காரணங்கள் அரசியல்ல ஆக்டிவா இருக்கும் உங்களுக்கு நார்மலைஸ் செய்யப்பட்ட விசயமாக கூட இருக்கலாம் ஆனா அவங்களுக்கு அது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.இப்படி பல விசயங்கள் ஒன்றுகூடி கூடவே ரசிகர்கள் & ஒட்டுமொத்த வெறுப்பு பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால தோத்துட்டோம் என்றுசொல்லி மனசை தேத்திக்குவது என்பது தோல்விக்கு காரணத்தை தேடி எடுத்தது போலஇருக்கு. இங்க பல விசயங்களில் மாற்றம் தேவைப்படுது, கலைஞர் மரணம் பல இளைஞர்களை திமுக பக்கம் இழுத்து வந்தது அப்படி வந்தவர்கள் பலர் இன்னிக்கு ஆக்டிவா இயங்கறாங்க அதன் பின்னர் அதுபோல இளைஞர்களை திராவிட அரசியல் பக்கம் இழுக்க வலுவா எந்த வேலையும் செய்யல என்று தோன்றுகிறது. பேச்சுப்போட்டி வச்சோம் என்பது பதிலா வரலாம் ஆனா இன்றைய இளைஞர்களின் பேசுபொருளா இருக்க அதை தாண்டி நிறைய செய்ய வேண்டியுள்ளது.
திராவிடத்தை அடையாள அரசியலாக, கெத்தா வெளிக்காட்டிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்..ஏன் அதைஒரு கல்ட் மனப்பான்மையோடு இருக்குமாறு கூட கொண்டு சொல்லலாம் ஆனா அதுக்கு கட்சியில் பல மாற்றங்கள் தேவைப்படலாம்.
உங்களை சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைதற்குறிகள் என்று ஒதுக்கிவிடுகிறீர்களா இல்லை அவர்களுடன் உரையாடி அவர்களின் பக்க காரணத்தை கேட்டு ஆரோக்கியமான விவாதத்தின்மூலம் அவர்களின் மனதை மாற்ற முயற்சிக்கறீங்களா என்பது நம் எல்லோருக்குமான கேள்வி.
இன்னிக்கு கவனித்த பல ஸ்டேட்டஸ் எல்லாம் ஆச்சரியமா இருந்துச்சு, பழைய அலுவலத்தில், கல்லூரியில் பழகிய மிகவும் புத்திசாலிகள் என்று இப்போது வரை எண்ணிக்கொண்டு இருக்கும் பலரும் இன்னிக்கு ஸ்டேட்டஸ் வச்சது நிறைய யோசிக்க தோணுது.
இன்ஸ்டால ஐடி ஆரம்பிச்சா ஜெயிச்சிடலாம் என்று நினைப்பதை விட முன்பை விடதிராவிடத்தை தீவிரமா பேசி மக்களிடையே கொண்டுபோனா மறுபடியும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என தோணுது