கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல இணைச்செயலாளர் - புதுக்கோட்டை மாவட்டம் / AIADMK / புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாசி / இரட்டைஇலை கட்சிகாரன்
தொடர்ந்து,@AIADMKITWINGOFL திருச்சி மண்டல இணைச்செயலாளராக கழக பணியாற்றிட நல்வாய்ப்பளித்த
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கும்,
கழக அமைப்புச்செயலாளர், மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர் @Vijayabaskarofl அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை, நீலாங்கரை R.K. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் T.R. பாரிவேந்தர் அவர்களுடைய பேத்தியும்; இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து-திருமதி பத்மப்ரியா ரவி தம்பதியரின் மகளுமான ஹரிணி ரவி டாக்டர் பழனி G. பெரியசாமி அவர்களுடைய பேரனும், டாக்டர் முத்துக்குமார்-டாக்டர் ஜெயந்தி பெரியசாமி தம்பதியரின் மகனுமான விக்ரம் பெரியசாமி குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய #ஸ்ரீகிருஷ்ண_ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
#KrishnaJayanthi #Gokulashtami
@AIADMKOfficial
விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அஇஅதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம்!
நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசினார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.
அவர் அவரது கட்சி குறித்தும், அவரது தலைவர் குறித்தும் பேசியது பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. பிளாக் டிக்கெட் வித்தது எல்லாம் ஒரு வரலாறா? என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதும் இல்லை.
ஆனால், தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதற்கான எதிர்வினையை நிச்சயம் அவர் எதிர்கொள்ள வேண்டும்.
அதாவது, சர்கார் திரைப்பட பேனர்களை கழகத் தொண்டர்கள் கிழித்ததால் தான் அஇஅதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லையாம். அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தை கேட்கும் நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் உன்னதத் தாய், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இயற்பெயரை பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா என்ன?
அப்போதும் சரி,
இப்போதும் சரி,
எப்போதும் சரி,
எங்கள் இதயதெய்வங்களை பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான்! அவனது அரசியல் எதிர்வினை, எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும்!
அதே சர்கார் படத்தில் நீங்கள் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த “அம்மா லேப்டாப்”களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்? அன்று பழித்து பேசிய மாண்புமிகு அம்மா அவர்களின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா?
2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழக மக்களின் சாதாரான எண்ணப்படி தான் எங்கள் வெற்றி வாய்ப்பு நழுவியது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம்.
அதனால், “பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே..!!
(பி.கு. : சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் Free Promotion கிடைத்ததற்காக..!!)
#TNAssembly #AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றிய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (நெய்வேலி) மற்றும் திரு. ஆர். மணி (ஓமலூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. ஏழுமலை திருமதி அனிதா தம்பதியரின் மகன் E. திருமால் நீட் தேர்வில் வெற்றி பெற்று, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் வடக்கு மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை கிழக்கு மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர் 1/2
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய @AIADMKOfficial மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சி, @ammkofficial, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி நமதே!
#அண்ணாதிமுக_WINNING!
#நல்லாட்சி_COMING!
@AIADMKOfficial