அடுத்த 5 ஆண்டுகளில், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நிறைவேற்றவுள்ள தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினேன்.
#VoteForDMK#NoVoteForADMK
தமிழ் மண் - பண்பாடு - தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல்.
தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும்.
திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்!
அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.
பொள்ளாச்சி கொடுமையை அரங்கேற்றிய கயவர்களைக் காத்தார்கள்; பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை; தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றியது அதிமுக - பாஜக கூட்டணி!
அவல ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்!
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக்குவோம்!
#உரிமைமீட்கவா_உடன்பிறப்பே
பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வரப் போவதில்லை. அதேநேரத்தில், அதிமுக ஒரு இடத்தில் வென்றாலும் அந்நபர் பாஜக உறுப்பினராகவே செயல்படுவார் என்பதால் விழிப்புடன் இருந்து வாக்களிக்குமாறு தர்மபுரி மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டேன்.