திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
"தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு." - சீமான்
#Seeman | #CMVijay | #TNGovt | #Coimbatore | #Sulu
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? - சீமான் கடும் கண்டனம்
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணையை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என ஆணவத்தோடு பேசியிருக்கிறார் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் கருத்தென்ன? டி.கே. சிவக்குமாரின் அடாவடித்தனமானப் பேச்சை தவெக அரசு ஏன் இன்னும் கண்டிக்கவில்லை?
They mentioned ₹25 lakh health insurance coverage per family in their manifesto. Now it’s been approved for 8,000 private hospitals 🤷♂️ #TVKFails@TVKVijayHQ
Seeman calls for global Tamils to unite in genocide commemoration
Naam Tamilar Katchi (NTK) chief Seeman has called on Tamils worldwide to unite as one, as the Tamil people are being forced to fight for its survival and that "political liberation" remai… https://t.co/AgBH8VT6Pb