பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.
சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள்.
தமிழகத்தில் மிகப்பெரிய சமூகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று போதித்த பெரியாரின் பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
இலவச மின்சாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யக்கூடாது, நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யப்பட்�� நெல்லை பாதுகாத்திட போதுமான அளவில் சேமிப்பு கிடங்குகள் மற்றும்... (1/3)
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை.
தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. (2/2)
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
மத ��ணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். (1/2)
@CMOTamilnadu @mkstalin
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்திவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாயக் கூட்டமைப்பின் தலைவர் திரு.பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரை உட��டியாக விடுதலை செய்யவேண்டும்.(1/2) @CMOTamilnadu
#JUSTIN | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்
தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
#TTVDhinakaran | #Sterlite | #ThanthiTV
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே 100% பணிகளையும் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து ���ரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க அரசு விரைந்து மேற்கொள்ளுமா !? (3/3)
செப்டம்பர் மாதத்திற்குள் 80% பணிகள் முடிந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருந்தாலும் அதற்கான வேகத்தில் வேலைகள் நடைபெறுவதாக தெரியவில்லை. இப்போதே மழை அடிக்கடி பெய்வதால், பள்ளம் எது? சாலை எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். (2/3)
சென்���ையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன. (1/3) @CMOTamilnadu
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக களமாடிய தளகர்த்தர்களில் ஒருவரா�� ஒண்டி வீரனின் நினைவு நாள் இன்று.
கடைசி மூச்சு வரை வீரப்போர் புரிந்து தன் இன்னுயிரையும் தாய்நாட்டிற்காக ஈந்த அம்மாவீரனின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம்.