பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்விக்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
"அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம்"
என வீரமுழக்கமிட்டு,
ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளைத்
தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial
1984 சட்டமன்றத் தேர்தல்.
புரட்சித்தலைவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த நேரம்!
'எனக்கு வாக்களியுங்கள்.
#எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அவரிடமே ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்!'என்று எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டு கேட்டவர் #கருணாநிதி
எதிரிகளும் உச்சரித்த மந்திரம் எம்ஜிஆர்!
#mgrbirthday
’1000 ரூபாய் கொடுக்கும்போதே கடன் சுமை இருக்கும்போது, 2000 ரூபாய் எப்படி சாத்தியமாகும்?' - செய்தியாளர் கேள்விக்கு பதில் சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EdappadiPalaniswami | #ADMK | #Manifestos
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 5
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:
மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழக மக்களின் உரிமைகளை மீட்ட மாபெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், எண்ணற்ற நலத்திட்டங்களால் மக்கள் மனதை வென்று, அவர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர், பாரத ரத்னா, மக்கள் திலகம், டாக்டர் #எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் சாதனைகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்.
பொய் வாக்குறுதிகள் வாயிலாக தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் விடியா திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் #எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா ஆகியோர் வழியில் கழகத்தை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் கழகத்தின் பொற்கால ஆட்சி மீண்டும் அமைவது உறுதி!
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
#MGR109
@EPSTamilNadu@AIADMKOfficial #AIADMK #அஇஅதிமுக
நான்கரை ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகன்றிட ,
மக்கள் ஏற்றும் போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும்!
நாளை வரும் தை,
தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும் !
அனைவருக்கும் இனிய #போகி பண்டிகை நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial
பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.
'ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.
பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்.
@AIADMKOfficial
நீலகிரி மாவட்டத்தில் தங்களின் முன்னோர்களை நினைவுகூர்ந்து, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தோடு "ஹெத்தை அம்மன்" திருவிழாவை விமர்சையாகக் கொண்டாடி வரும் படுகர் சமுதாய மக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ஹெத்தை அம்மன் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளித்ததையும், மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இவ்விழா மேலும் சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டத்தையும் நினைவுகூர்கிறேன்.
மிகவும் புனிதமான இந்த நாளில், தீமைகள் அழிந்து, நன்மை பிறந்து, அனைவரும் இன்புற்று வாழ, ஹெத்தை அம்மனை வேண்டிக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial@ADMK_Kovai@ADMK_Nilgiri #AIADMK #அஇஅதிமுக
ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.
மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.
ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!
தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?
இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான் , அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் @AIADMKOfficial தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.
அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
"அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே #வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திரு. @mkstalin-ஐ தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
இப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப் போவது உறுதி!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin